Word |
English & Tamil Meaning |
---|---|
இரவிக்கை | iravikkai n. <>T. ravika. Bodice, close-fitting under-vest for women; தனக்கச்சு. |
இரவிகன்னம் | iravi-kaṉṉam n. <>ravi+karṇa. True distance of the sun from the earth; பூமிக்குஞ் சூரியனுக்குமுள்ள தூரம். (W.) |
இரவிகாந்தம் | iravi-kāntam n. <>id.+ kānta. 1. Sun-stone; சூரியகாந்தம். இரவி காந்தத்திலகுமே (நீதிவெண். 50.) 2. Lotus; |
இரவிகுலம் | iravi-kulam n. <>id.+. Solar race; சூரியகுலம். இரவிகுலம் பாரிக்கத் தகுவ னென்றே (கலிங். 10,6.) |
இரவிகேந்திரம் | iravi-kēntiram n. <>id.+kēndra. Argument for the equation of the sun's place; அணித்தான பாதையில் வருஞ் சூரியனுக்கும் கிரகத்துக்குமுள்ள தூரம். (W.) |
இரவிநாள் | iravi-nāḷ n. <>id.+. The 27th nakṣatra. See இரேவதி. (சூடா.) |
இரவிமது | iravimatu n. Silver; வெள்ளி. (W.) |
இரவிவாரம் | iravivāram n. <>ravi+vāra. Sunday; ஞாயிற்றுக்கிழமை. |
இரவிவிக்கேபம் | iravi-vikkēpam n. <>id.+. Sun's declination in solar eclipses, one of three vikkēpam, q.v.; கிரகணத்தில் சூரியன் கிராந்திமார்க்கத்திற் சாய்ந்திருக்கை. (W.) |
இரவிற்றிரிவோன் | iraviṟṟirivōṉ n. <>இரவு1+திரி-. Demon or goblin, one who moves about during night-time; அரக்கன். இரவிற் றிரிவோர்கட்கிறை (தேவா. 111,8.) |
இரவு 1 | iravu n. <>இரா. [M. iravu.] 1. Night, time from sunset to sunrise; இராத்திரி. எல்லையு மிரவுமெண்ணாய் (புறநா. 7,7). 2. cf. Skt. nišāhvā. Turmeric; 3. See இருள்மரம். |
இரவு 2 | iravu n. <>இர-. Beggary, mendicity; யாசிக்கை. கோலொடு நின்றா னிரவு (குறள், 552). |
இரவுக்குறி | iravu-k-kuṟi n. <>இரவு1+. (Akam.) Trysting place fixed for clandestine meeting of lovers by night; இரவிலே தலைவனுந் தலைவியுஞ் சேரும்படி குறிக்கப்பட்டவிடம். (தொல். பொ. 131.) |
இரவுத்திரியம் | iravuttiriyam n. <>raudrīya. Saiva initiation; சிவதீக்ஷை. விளங்கு மிரவுத்திரிய முற்றுவித்து (பிரமோத். 22, 69). |
இரவுபகல் | iravu-pakal n. <>இரவு1+. The kēvalam and cakalam states of soul; கேவல சகலங்கள். இரவுபக லில்லா விடத்து (சைவச. மாணாக். 32). |
இரவெரி | iraveri n. <>id.+ எரி-. Kind of tree said to shine at night. See சோதிவிருட்சம். (மச்சபு. நைமிச. 8.) |
இரவை | iravai n. <>T. rava. <>lava. 1. Small particle, little thing; நுட்பமான பொருள். 2. Coarsely ground wheat-flour; 3. Shot; 4. Diamond; |
இரவைசல்லா | iravai-callā n. <>id.+. Transparent muslin; மெல்லிய துணி. |
இரவோன் 1 | iravōṉ n. <>இரவு2. Beggar; யாசகன். (திவா.) |
இரவோன் 2 | iravōṉ n. <>இரவு1. Moon, who is the lord of the night; சந்திரன். (பிங்.) |
இரளி | iraḷi n. prob.T. rēlā. Cassia; கொன்றை. (மலை.) |
இரற்று - தல் | iraṟṟu- 5 v.intr. prob. அரற்று-. To shout; to utter a shriek, as a bird; சத்தமிடுதல். கடலி னாரை யிரற்றும் (ஐங்குறு. 114.) |
இரக்ஷாபோகம் | irakṣara-pōkam n. <>rakṣā+. Fees leived for protecting anything such as land; பாதுகாவல்வரி. (T.A.S.H.O.P. 3.) |
இரா | irā n. cf. rātri. See இரவு1. நீடுக மன்னோ விரா (குறள், 1329). |
இராக்கடைப்பெண்டிர் | irā-k-kaṭai-p-peṇṭir n. <>இரா+. Prostitutes; வேசையர். (சிலப். 5,50, உரை.) |
இராக்கடைவேசையர் | irā-k-kaṭai-vēcaiyar n. <>id.+. See இராக்கடைப்பெண்டிர். (சிலப். 5,50, அரும்.) |
இராக்கதம் | irākkatam n. <>rākṣasa. 1. A form of marriage in which the bride is carried away by force without her consent or the permission of her relatives, a form characteristic of Rakṣasas, one of aṣṭa-vivākam, q.v.; தலைமகளை வலிதிற்கொள்ளும் மணம். (தொல் பொ. 92, உரை.) 2. The sixth of 15 divisions of the night; |
இராக்கதன் | irākkataṉ n. <>rākṣasa. Giant, demon or goblin; அரக்கன். (திவ். பெரியாழ். 4,4,8.) |
இராக்கதி | irākkati n. <>rākṣasī. Giantess, female goblin; அரக்கி. (திவ். பெரியதி. 10,6,9.) |
இராக்கதிர் | irā-k-katir n. <>இரா+. Moon, from its sending forth its beams at night; சந்திரன். (திவா.) |
இராக்கிடைப்பெண்டிர் | irā-k-kiṭai-p-peṇṭir n. <>id.+. See இராக்கடைப்பெண்டிர். (சிலப். 5,50, உரை.) |