Word |
English & Tamil Meaning |
---|---|
இராயிரம் | ir-āyiram n. <>இரண்டு+ஆயிரம். The number 2,000. 2,000. (தொல். எழுத். 464, உரை.) |
இராவடம் 1 | irāvaṭam n. Ašoka tree. See அசோகு. (மலை.) . |
இராவடம் 2 | irāvaṭam n. <>T. rāpidamu. Filing; அராவுந்தொழில். |
இராவடி | irāvaṭi n. <>drāvidī. 1. Cardamom plant. See ஏலம். (மூ. அ.) . 2. Greater cardamon. See பேரேலம். (மலை.) |
இராவணசன்னியாசி | irāvaṇa-caṉṉiyāci n. <>Rāvaṇa+. One who puts on the cloak of religion or piety with the sinister motive of deceiving others, as Rāvaṇa did when he went in the guise of a hermit to Rāma's forest abode and carried away Sītā; மோசவேஷக்காரன். |
இராவணம் 1 | irā-vaṇam n. prob. இரா+ varṇa. Lamp; விளக்கு. (W.) |
இராவணம் 2 | irāvaṇam n. <>rāvaṇa. Crying, screaming; அழுகை. (திருப்பு. 330.) |
இராவணன் 1 | irā-vaṇaṉ n. <>இரா(த)+ varṇa. God as being without form; கடவுள். இராவணன்றனை யூன்றி யருள்செய்த விராவணன் (தேவா. 53, 11). |
இராவணன் 2 | irāvaṇaṉ n. <>Rāvaṇa. Rāvaṇa, king of Laṅkā and chief of the Rākṣasas, whose destruction by Rāma forms the subject of the Rāmāyaṇa; தசக்கிரீவன். (தேவா. 53, 11.) |
இராவணன்புல் | irāvaṇaṉ-pul n. <>id.+. Water-pink, a seashore grass, Spinifex squarrosus, from its resemblance to Rāvaṇa's whiskers; கடற்கரையிலுள்ள ஒருவகைக் கூரிய புல். (மூ. அ.) |
இராவணன்மீசை | irāvaṇaṉ-mīcai n. <>id.+. See இராவணன்புல். (மூ. அ.) . |
இராவணாகாரம் | irāvaṇākāram n. <>id.+ā-kārā. Frightful form, as the terror-striking mien of Rāvaṇa; பயங்கரவடிவம். இராவணாகாரமாகி (தாயு. மௌன. 9). |
இராவணாசுரம் | irāvaṇācuram n. <>id.+. Kind of vīṇā; விணைவகை. (பரத. ஒழிபி. 15.) |
இராவணாத்தம் | irāvaṇāttam n. <>id.+prob. hasta. An ancient stringed instrument formed with a coconut shell; ஒருவகைச் சிறுவிணை. (W.) |
இராவணி | irāvaṇi n. <>rāvaṇi. Indrajit, son of Rāvaṇa; இராவணன்மகன். (கம்பரா. நாகபா. 13.) |
இராவிரேகு | irāvirēku n. <>T. rāvirēku. 1. Jewel in the shape of a bo-leaf worn by children and women on the forehead; தலையணிகளுளொன்று. (W.) 2. Plate of gold or silver fashioned as a leaf and worn by little girls to cover their nudity; |
இராவு - தல் | irāvu- 5 v. tr. <>அராவு-. [M. irāvu.] To file. See அராவு-. . |
இராவுத்தன | irāvuttaṉa n. <>U. raut. [cf. Skt. rāja-dūta.] 1. Cavalier, horseman, trooper; குதிரைவீரன். 2. Title of a certain class of Tamil-speaking Muhammadans; |
இராவுத்தாங்கம் | irāvuttāṅkam n. <>id.+ aṅga. Amusement in which men or women ride in disguise through the streets at festivals; ஒருவகைக்கொண்டாட்டம். (W.) |
இராவைக்கு | irāvaikku indecl. <>இரா. For or during night; இரவுக்கு. இராவைக்குப் போனகப் பழவரிசி. (S.I.I. ii, 146.) |
இரவோன் | iravōṉ n. <>id. Moon; சந்திரன். முளைத்தன னிராவோன் (திருவாத. பு. புத்தரை. 30.) |
இரி 1 - தல் | iri- 4 v. intr. 1. To be destroyed, ruined; கெடுதல். மாறிரியச்சீறி (பு. வெ. 2,9). 2. To retreat; to flee away, as a defeated army; to scamper away through fear; 3. To fall away, as a garment; to drop; to recede; 4. To drop, as perspiration; to ebb, as the tide; 5.To fear, dread; |
இரி 2 - த்தல் | iri- 11 v. tr. caus. of இரி1-. 1. To rout, defeat; தோற்றோடச்செய்தல். 2. To destroy, ruin; to dispel; 3. To drive away, scare away; |
இரிக்கி | irikki n. Scimitar-pod, l. cl., Entada scandens; பெருங்கொடி வகை. (L.) |
இரிசல் | irical n. <>இரி1-. 1. Break, crack; பிளவு. (J.) 2. Alienation of mind, discord; |
இரிசால் | iricāl n. <>Arab. irsal. Remittance. See இருசால். Muham . |
இரிசியா | iriciyā n. <>vrṣyā. Cowhage. See பூனைக்காலி. (மலை.) . |
இரிஞ்சி | irici n. <>இலஞ்சி. Pointed-leaved ape-flower. See மகிழ். (மலை.) . |
இரிஞன் | iriaṉ n. <>இரி2-. Foe, enemy; பகைவன். (திவா.) |