Word |
English & Tamil Meaning |
---|---|
இருணம் 1 | iruṇam n. <>iriṇa. cf. இரிணம். Saline soil; உவர்நிலம். (பிங்.) |
இருணம் 2 | iruṇam n. <>rṇa. Debt; கடன். |
இருணாள் | iruṇāḷ n. <>இருள்+நாள். Titi of the dark fortnight; கிருஷ்ணபட்சத்து நாள். (திவ்.பெரியதி. 8, 8, 9.) |
இருணிலம் | iruṇilam n. <>id.+. Hell, a region of darkness; நரகம். (திவா.) |
இருத்தல் | iruttal n. <>இரு-. (Akap.) Lady's bearing patiently separation from her husband, a mode appropriate to the mullai or forest-pasture tracts, one of five uri-p-poruḻ, q.v.; முல்லையுரிப்பொருள். (நம்பியகப். 25.) |
இருத்தி | irutti n. <>rddhi. Supernatural powers obtained by abstract meditation and exercised at one's will; சித்தி. அளப்பி லிருத்தி யொடு (மணி. 21, 166). |
இருத்திப்பேசு - தல் | irutti-p-pēcu- v. tr. <>இருத்து-+. To speak emphatically or impressively; அழித்திச்சொல்லுதல். (W.) |
இருத்திப்போடு - தல் | irutti-p-pōṭu- v. tr. <>id.+. 1. To cause to settle, fix; to cause to run aground, as a vessel; நிலைக்கச்செய்தல். 2. To bring to a standstill, stop one's progress; |
இருத்தினன் | iruttiṉaṉ n. <>rtvij. Priest who officiates at a sacrifice; இருந்துவிக்கு. இருத்தினர் யாரையும் (கந்தபு. வேள்வி. 4) |
இருத்து 1 - தல் | iruttu- 5 v. caus. of இரு-. [T. iruvakonu.] tr. 1. To cause to sit; உட்காரச்செய்தல். உபசாரமுட னருகுறவிருத்தி (பாரத. நாடுகரந். 31). 2. To detain, cause one to wait for a time; 3. To press down; to bear upon, as with a style or other instrument; 4. To beat down, as a floor; to drive in, as a nail; to make firm or compact by beating; 5. To fix permanently, make stationary; To sink down, as a foundation; |
இருத்து 2 | iruttu n. A flaw in a diamond one of twelve vayira-k-kuṟṟam; வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.) |
இருத்து 3 | iruttu n. <>rtvij. See இருத்து விக்கு. (மச்சபு. விருக்க. 2.) . |
இருத்துவிக்கு | iruttuvikku n. <>rvik nom. sing. of rtvij. Priest who officiates at a sacrifice; யாகபுரோகிதன். இருத்துவிக் கெனப்படு மன்னவர்க்கு (காஞ்சிப்பு. சிவா. 34). |
இருத்தை 1 | iruttai n. Marking-nut tree. See சேங்கோட்டை. (மலை.) . |
இருத்தை 2 | iruttai n. <>riktā. See இரித்தை. . |
இருதம் | irutam n. <>rta. Gleaning in the fields for a living; உஞ்சவிருத்தி. உஞ்சநல் விருத்தி யிருதமாம் (காஞ்சிப்பு. ஒழுக்க. 36). |
இருதயகோசம் | irutaya-kōcam n. <>hrdaya+. Pericardium, double bag-like fold of serous membrane which encloses the heart; இரத்தாசயகோசம். |
இருதயத்துடிப்பு | irutaya-t-tuṭippu n. <>id.+. Palpitation of the heart; மார்பு படபடவென்று அடித்துக்கொள்கை. |
இருதயம் | irutayam n. <>hrdaya. 1. Heart, the organ of the body that circulates the blood; இரத்தாசயம். 2. Mind; 3. Seat of affection; 4. Central idea, drift; 5. Centre, core; |
இருதலை | iru-talai n. <>இரண்டு+. Both ends; இருமுனை. நடுவண தெய்த விருதலையு மெய்தும் (நாலடி. 114). |
இருதலைக்கபடம் | iru-talai-k-kapaṭam n. <>id.+ Prob. kamaṭha. Eel, spoken of as being deceitful; விலாங்குமீன். (சங். அக.) |
இருதலைக்கொள்ளி | iru-talai-k-koḷḷi n. <>id.+. 1. Brand burning at both ends; இரு முனையிலுந் தீயுள்ள கட்டை. இருதலைக்கொள்ளியி னுள்ளெறும்பேபோல் (முத்தொள்.) 2. That which causes trouble in every direction; |
இருதலைநோய் | iru-talai-nōy n. <>id.+ Severe aching in the head. See எழுஞாயிறு. (தைலவ. தைல. 29.) . |
இருதலைப்புடையன் | iru-talai-p-puṭaiyaṉ n. <>id.+ Blind snake with very short head and tail, including the smallest species of snakes, supposed to have a head at either end, typhlopidae; பாம்புவகை. |
இருதலைப்புள் | iru-talai-p-puḷ n. <>id.+. Fabulous bird with two heads; இரண்டு தலைகளுள்ள பறவை. (சீவக. 1631, உரை.) |
இருதலைமணியம் | iru-talai-maṇiyam n. <>id.+. Act of setting one person against another by pretending to be friend of each of them; நண்பன்போல் நடித்து, இருவருட் கலகம் விளைக்குந் தொழில். Colloq. |