Word |
English & Tamil Meaning |
|---|---|
| விட்டுப்போ - தல் | viṭṭu-p-pō- v. intr. <>id.+. 1. To be left; to be abandoned; நீங்கி விடுதல். 2. to have smarting pain; |
| விட்டும்விடாதவாக்கச்சொல் | viṭṭum-viṭāta-v-ākka-c-col n. <>id.+. (Gram.) Word in which the primary sense is partly retained and partly discarded; விட்டும்விடாதவிலக்கணை யாக வருஞ் சொல். (யாழ். அக.) |
| விட்டும்விடாதவாகுபெயர் | viṭṭum-viṭāta-v-ākupeyar n. <>id.+. See விட்டும்விடாதவிலக்கணை. (W.) . |
| விட்டும்விடாதவிலக்கணை | viṭṭum-viṭāta-v-ilakkaṇai n. <>id.+. (Gram.) A variety of ilakkaṇai, in which the primary sense of a word is partly discarded and partly retained, one of three ilakkaṇai, q.v.; இலக்கணை மூன்றனுள் ஒருவாசகத்திலே ஒரு பாகத்தின் பொருளை விட்டு மற்றைப்பாகத்தின் பொருள் இயைபு பெற நிற்கும் இலக்கணை. (வேதா. சூ. 119.) (இலக். அக.) |
| விட்டுமாறு - தல் | viṭṭu-māṟu- v. <>id.+. intr. To change course; to deviate; வேறு வழியில் திரும்புதல். --tr. See விட்டுப்பிடி-, 3. |
| விட்டுரை - த்தல் | viṭṭurai- v. tr. <>id.+. See விட்டுச்சொல்-. (திருக்கோ. 391, உரை.) . |
| விட்டுவாங்கி | viṭṭu-vāṅki n. <>id.+. One who prostitutes his wife for gain; தன் மனைவியைப் பிறனுக்குக் கொடுப்போன். (J.) |
| விட்டுவிட்டுமின்னு - தல் | viṭṭu-viṭṭu-miṉṉu- v. intr. <>id.+விடு1-+. To twinkle; நட்சத்திரம்போல ஒளி வீசுதல். |
| விட்டுவிடு - தல் | viṭṭu-viṭu- v. tr. <>id.+. 1. To let go; to loose one's hold upon; பிடிப்புவிடுதல். 2. To forego, resign, relinquish, giveup, abandon; |
| விட்டுவிளங்கு - தல் | viṭṭu-viḷaṅku- v. intr. <>id.+. To shine with added lustre; நன்றாகப் பிரகாசித்தல். |
| விட்டெறி - தல் | viṭṭeṟi- v. tr. <>id.+எறி-. [M. viṭṭēru.] 1. To throw away; to fling; தூர விழும்படி எறிதல். ஒருவரை யொருவர் விட்டெறிவர் (கம்பரா. வாலிவ. 47). 2. To leave, abandon; |
| விட்டேற்றாளன் | viṭṭēṟṟāḷaṉ n. <>விட்டேறு+. See விட்டேற்றி, 1. விடருந் தூர்த்தரும் விட்டேற் றாளரும் (மணி. 14, 61, அரும்.). . |
| விட்டேற்றி | viṭṭēṟṟi n. <>id. 1. One who forsakes his relations and induces others to do likewise; சுற்றத்தினின்று நீங்கிப் பிறரையும் அவ்வாறு செய்விப்போன். (மணி. 14, 61, அரும்.) 2. One who is unconnected or unconcerned; |
| விட்டேறரணம் | viṭṭēṟaraṇam n. <>id.+அரணம்1. See விட்டேறு, 1, 2. (சது.) . |
| விட்டேறு | viṭṭēṟu n. <>விடு1-+எறி-. [K. buṭtēṟu.] 1. Missile weapon; எறிகோல். (பிங்.) (சிலப். 15, 216, உரை.) 2. Javelin; 3. Harsh word of ridicule; |
| விட்டை | viṭṭai n. <>viṣṭhā. Dung of animals; விலங்குகளின் மலம். (நாமதீப. 599.) |
| விட்டோசை | viṭṭōcai n. <>விடு1-+. (Gram.) Pronouncing the letters of a word with a pause after each; சொல்லின் எழுத்துக்களைப் பிரித்து உச்சரிக்கை. (W.) |
| விட்ணு | viṭṇu n. See விட்டுணு. (W.) . |
| விட்புலம் | viṭ-pulam n. <>விண்1+. Heaven; விண்ணுலகம் எங்கட் புலங்காண விட்புலம் போயது (சிலப். பதி. 8). |
| விட | viṭa <>விடு1-. adv. Exceedingly, very; மிகவும். விடக்களியா நம் விழுநகர் (திருக்கோ. 297).-prep. Than, compared with; |
| விடக்கிருமிநியாயம் | viṭa-k-kirumi-niyā-yam n. (Log.) A nyāya. See விஷகிருமிநியாயம். |
| விடக்கு | viṭakku n. 1. Flesh, meat; இறைச்சி. மீன்றடிந்து விடக்கறுத்து (பட்டினப். 176). 2. [K. Tu. bikku, M. vidakku.] Carcass; |
| விடக்கோள் | viṭa-k-kōḷ n. <>விடம்1+கோள்1. An invisible planet. See குளிகன், 2. (நாமதீப. 103.) |
| விடகண்டன் | viṭa-kaṇṭaṉ n. <>viṣa-kaṇṭha. šiva; சிவபிரான். (இலக். அக.) |
| விடகலை | viṭa-kalai n. <>viṣa+. (šaiva.) A mystic centre in the body; ஒரு கலை. மேதைய ருக் கீசம் விடகலை (பிராசாதமாலை, 2). |
| விடகாரி | viṭa-kāri n. <>viṣa+hārin. See விடதாரி. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி (வாக்குண். 15). (இலக். அக.) . |
| விடங்கம் | viṭaṅkam n. <>viṭaṅka. 1. Dove-cot; புறாக்கூடு. (யாழ். அக.) 2. Curved cornice or projection. 3. Projection of a beam or joist outside the wall of a house; 4. Ridge of a roof; 5. Banner hoisted in a building and projecting into the street; 6. The naturally formed lingam, as unchiselled; 7. Beauty; 8. Manliness, ability, bravery; 9. Youth; |
