Word |
English & Tamil Meaning |
---|---|
உடைவாரம் | uṭai-vāram n. <>உடன்+. Gross produce from land before it is divided between the landlord and the cultivators; மேல்வாரங் குடிவாரமாகப் பிரிப்பதற்கு முன்னுள்ள மொத்த விளைவுத்தானியம். Colloq. |
உடைவாள் | uṭai-vāḷ n. <>உடை3+. Short scimitar; உடையிற் செருகும் சுரிகை. (திவா.) |
உடைவு | uṭaivu n. <>உடை1-. 1. Cracking, fracturing; தகர்கை. 2. Breach; 3. Defeat, discomfiture; 4. Debility, weakness; 5. Theft, stealing; |
உடைவேல் | uṭaivēl n. <>உடை5+. Peapodded black babul, Acacia eburnea; வேலமரவகை. (L.) |
உடோ | uṭō int. cf. எட. An exclamation, addressed, familiarly to an inferior; அடா. நேரே நின்றன்றோ உடோ பரிமாறுவது (ஈடு, 4, 8, 2). |
உண்(ணு) - தல் | uṇ- 7 v. tr. 1. To eat or drink; to suck, as a child; take food; சாப்பிடுதல். 2. To swallow without bitting; 3. To enjoy, experience; 4. To draw in, receive; 5. To be fitted to; 6. To resemble; 7. To seize, grasp; 8. To harmonise with, to be agreeable to; -aux. Used with vbl. bases and vbl. nouns to from the passive, as in கட்டுண்டான், கேடுண்டான்; |
உண்கண் | uṇ-kaṇ n. <>உண்-+. Eye painted black on the lower lid; மையெழுதிய கண். அரிபா யுண்கண் (குறள், 1091). |
உண்கலம் | uṇ-kalam n. <>id.+. Plate or dish to eat from, whether of metal, china, glass or leaf; போசனபாத்திரம். |
உண்டறு - த்தல் | uṇṭaṟu- v. tr. <>id.+. 1. To eat and digest; புசித்துச் செரிப்பித்துக்கொள்ளுதல். (ஈடு, 10, 5, 11.) 2. To experience to the fullest extent, enjoy the maximum benefit of; 3. To be ungrateful; |
உண்டாக்கு - தல் | uṇṭākku- v. tr. caus. of உண்டா-. [M. uṇdākku.] 1.To make, produce; ஒன்றை நிருமித்தல். மண்ணால் பிரதிமை யுண்டாக்கினான். 2. To bring into being, create; 3. To raise, as crops or trees; to cultivate; 4. To enrich, raise to affluence; |
உண்டா - தல் | uṇṭā- v. intr. <>உண்டு1+ஆ-. [M. uṇda.] 1. To come into existence, rise into being, to be formed; உளதாதல். நன்றுண்டாகவென (சீவக. 1159). 2. To grow, as vegetables; to thrive, flourish; 3. To become rich, wealthy, opulent, to prosper; 4. To be permanent, lasting, durable; |
உண்டாக | uṇṭāka adv. <>id. 1. Early, betimes; before it is too late; காலம்பெற வேண்டி னுண்டாகத் துறக்க (குறள், 342). 2. Abundantly; |
உண்டாட்டம் | uṇṭāṭṭam n. <>உண்-+ஆட்டம். Festivity, joviality; விளையாட்டு. கொண்டலுண்டாட்டங் கொண்டான் (கம்பரா. சூர்ப்ப. 51). |
உண்டாட்டு | uṇṭāṭṭu n. <>id.+ ஆடு-. 1. Festivity, joviality, as of warriors celebrating the seizure of cows by indulging in drink; கள்ளுண்டு மகிழ்கை. (பிரமோத். 22, 13). 2. (Purap.) Poems describing the merry-making of victors; |
உண்டாத்தா | uṇṭāttā n. <>உண்ட+ஆத்தாள். Spurge. See கள்ளி. (மலை.) . |
உண்டாயிரு - த்தல் | uṇṭāy-iru- v. intr. <>உண்டா-+. To be pregnant; கர்ப்பமாயிருத்தல். அவள் உண்டாயிருக்கிறாள். Colloq. |
உண்டி 1 | uṇṭi n. <>உண்-. [K. uṇṇi.] 1. Food; உணவு. அறுசுவையுண்டி (நாலடி, 1). 2. Boiled rice; 3. Food of birds and beasts in general; 4. Experience; |
உண்டி 2 | uṇṭi n. See கொட்டைக்கரந்தை. (தைலவ. தைல. 76.) . |
உண்டி 3 | uṇṭi n. <>U. huṇdi. 1. Bill of exchange, draft, cheque; மாற்றுச்சீட்டு. 2. Alms box covered and locked or sealed receptacle kept in temples for money-offerings from devotees; or similar box for collecting subscriptions for a public benefaction taken round by people who beg for charities; |