Word |
English & Tamil Meaning |
---|---|
உடைக்கல் | uṭai-k-kal n. <>உடை3+. Red ochre, used in dyeing; காவிக்கல். (தைலவ. தைல. 33.) |
உடைகுலைப்படு - தல் | uṭai-kulai-p-paṭu- v. intr. <>உடை1-+குலை+. 1. To be breached, as a bank of a river or the shore of a tank; கரையழிதல். (ஈடு, 6, 4, 4.) 2. To be deranged, discomfited; |
உடைகுளம் | uṭai-kuḷam n. <>id.+. The 20th nakṣatra, whose configuration looks as if it were a breached tank; பூராடம். (திவா.) |
உடைகொல் | uṭaikol n. Umbrella-thorn babul. See உடை5, 1. (மலை.) . |
உடைசல் | uṭaical n. <>உடை1-. Cracked, worthless, articles; broken pieces; உடைந்தபொருள். Vul |
உடைஞாண் | uṭai-āṇ n. <>உடை3+. See உடைநாண். உடுத்தபஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்க (சீவக. 2240). |
உடைத்தானவன் | uṭaittāṉavaṉ n. <>உடைமை+. Proprietor, possessor; உடையவன். Vul. |
உடைதாரம் | uṭai-tāram n. <>உடை3+. T. dāramu. [K. udu-dāra.] Cord or girdle used as an ornamental belt over the waist-cloth; அரையிலணியும் அணிவிசேடம். உடாதாரமு மொட்டியாணமும் (மீனாட். பிள்ளைத். ஊசற். 10). |
உடைநாண் | uṭai-nāṇ n. <>id.+. Cord worn round the waist-cloth to serve as a waist band and confine the cloth at the waist; உடைமேல் தரிக்கும் நாண். உடைநாணொடு கடிவட்டினொடு (சீவக. 2263). |
உடைப்பிற்போடு - தல் | uṭaippiṟ-pōṭu- v. tr. <>உடைப்பு+. To cast away as worthless, as a thing thrown into a breach; அகலத்தள்ளூதல். அதை உடைப்பிறப்போடு. Colloq. |
உடைப்பு 1 | uṭaippu n. <>உடை1-. 1. Breach, bursting of a tank; உடைகை. 2. Portion breached, channel cut through a ridge in a field; |
உடைப்பு 2 | uṭaippu n. <>உடை2-. Causing to break; உடைக்கை. |
உடைப்பெடு - த்தல் | uṭaippeṭu- v. intr. <>உடைப்பு1+. To be breached, as a tank; வெள்ளத்தாற் கரையழிதல். ஏரி உடைப்பெடுத்துவிட்டது. |
உடைப்பொருள் | uṭai-p-poruḷ n. <>உடைமை+. Property in one's possession, meaning a slave when referring to human beings, and other items of world's goods when referring to animals and things; உடைமைப்பொருள். (சி.போ. அவையடக்கம், சிற்.) |
உடைமணி | uṭai-maṇi n. <>உடை3+. 1. Waist ornament with bells worn by a child; குழந்தைகளின் அரையணி. உடைமணிகட்டிச் சிறுதேருருட்டி. (திருக்கோ. 385). 2. Jewelled girdle worn by women; |
உடைமுள் | uṭai-muḷ n. <>உடை5+. Thorn of the babul; குடைவேலின் முள். |
உடைமை | uṭaimai n. [T. K. odame, M. udama.] 1. The state of possessing, having, owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; 3. Wealth, riches; |
உடையல்விடு - தல் | uṭaiyal-viṭu- v. tr. prob. உடை1-+. To mock, ridicule, banter, make fun of; பரிகாசஞ் செய்தல். Loc. |
உடையவர் | uṭaiyavar n. <>உடைமை. Hon. pl. 1. Master, lord; சுவாமி. உடையவர் கோயில் (பெரியபு. திருஞான. 664). 2. šiva-liṅga used in private worship; 3. Rāmānuja, the Guru of šri Vaiṣṇavas; |
உடையவன் | uṭaiyavaṉ n. <>id. [T. odayadu, M. udayavan.] 1. Owner, one who possesses; உரியவன். 2. Possessor of wealth; |
உடையார் | uṭaiyār n. <>id. Hon. pl. 1. Lord, master; சுவாமி. உடையார்... திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castes of cultivators; 3. A village official in North and East Ceylon; 4. Pl. The rich, as those who have world's goods; |
உடையார்சாலை | uṭaiyār-cālai n. <>உடையார்+. Place where food is served in a temple; கோயிலில் அன்னசாலை. சிவயோகிகள் பதின்மரும் உடையார்சாலையிலே உண்ணக்கடவர். (S.I.I. ii, 133) |
உடையான் | uṭaiyāṉ n. <>உடைமை. 1. Master, lord; சுவாமி. உடையா னல்லாதானை உடையானென (சி. போ. அவையடக்கம், சிற்.) 2. Substantive noun as qualified by an attributive; 3. A caste title. See உடையார், 2. |