Word |
English & Tamil Meaning |
---|---|
உண்டிகை 1 | uṇṭikai n. See உண்டி3, 2. . |
உண்டிகை 2 | uṇṭikai n. <>உண்டை. Huge gathering, large concourse of people; கூட்டம். சாரிகை மறுத்துத் தண்டா வுண்டிகை (பரிபா. 6, 36). |
உண்டிப்பொருத்தம் | uṇṭi-p-poruttam n. <>உண்டி1+. (Poet.) Rule of propriety which enjoins that the initial letter of a poem should be one of amuta-v-eḻuttu, and not one of nacceḻuttu, one of ten ceyyuṇ-mutaṉ-moḻi-p-poruttam, q.v.; செய்யுண் முதன்மொழிப் பொருத்தவகை. (பிங்.) |
உண்டியல் | uṇṭiyal n. See உண்டி3, 1. (W.) . |
உண்டியற்புரட்டு | uṇṭiyaṟ-puraṭṭu n. <>உண்டி3+. Fraud in connection with the drawing of cheques and drafts; பணமோசம். அவன் பெரிய உண்டியற்புரட்டுச் செய்பவன். Loc. |
உண்டு 1 | uṇṭu <>உள்-. [K. uṇṭu, M. Tu. uṇdu.] v. intr. Finite verb denoting existence, used in common to all genders and persons and both numbers; -adv Expr. used to denote a diminutive sense in respect of quantity or measure such as உள்ளதன்மையையுணர்த்தும் ஜம்பால் ழவிடத்துக்குழரிய ஓரு குறிப்புவினைமுற்றுச்சொல். இத்தனை, அத்தனை அற்பத்தைக் குறிக்குஞ்சொல். இத்தனையுண்டு கொடுத்தான். |
உண்டு 2 | uṇṭu part. <>உண்-. A suffix used as a sign of comparison; ஓர் உவமவுருபு. குன்றுண் டோங்கு திரடோளவன் (சீவக. 1159). |
உண்டுகம் | uṇṭukam n. cf. உடுண்டுகம். Sirissa-tree. See பெருவாகை. (மலை.) . |
உண்டுபடு - தல் | uṇṭu-paṭu- v. intr. <>உண்டு1+. 1. To appear, come into existence; உண்டாதல். உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண் (தேவா. 1047, 8). 2. To be formed or produced by natural processes observable by the senses; to happen, occur; 3. To grow, thrive, flourish; |
உண்டுபடுத்து - தல் | uṇṭu-paṭuttu- v. tr. caus. of உண்டுபடு1-. 1. To make, create; படைத்தல். 2. To fabricate, concoct; |
உண்டுபண்ணிவை - த்தல் | uṇṭu-paṇṇivai- v. tr. <>உண்டுபண்ணு-+. To put into the state or condition of being; to set up or establish the fortune or standing of; to elevate, as a person; நல்ல நிலையில் வைத்தல். Colloq. |
உண்டுபண்ணு - தல் | uṇṭu-paṇṇu- v. tr. <>உண்டு1+. To make, create, give rise to; உண்டாக்குதல். துவிதமே அத்துவித ஞானத்தை யுண்டுபணு ஞானம் (தாயு. எங்கு. 3). |
உண்டுமில்லையுங்கூறல் | uṇṭum-illaiyuṅkūṟal n. <>id.+. See அஸ்திநாஸ்திவாதம். . |
உண்டுருட்டி | uṇṭuruṭṭi n. <>உண்-+. One who squanders and eats away all his ancestral property; பிதிரார்ச்சிதப் பொருள்களை யெல்லாம் தின்று அழிப்பவன்-ள். Loc. |
உண்டுறையணங்கு | uṇṭuṟai-y-aṇaṅku n. <>id.+ துறை+. Malignant goddess presiding over springs or streams from which fountain or ghat people take their drinking water; naiad of Indian myth; நீருண்ணுந் துறையிலுள்ள தேவதை. உண்டுறை யணங்கிவ ளுறைநோ யாயின் (ஐங்குறு. 28). |
உண்டென | uṇṭeṉa adv. <>உண்டு1+. Profusely, lavishly; நிரம்ப. உண்டெனத் தரவேணும். Colloq. |
உண்டை | uṇṭai n. <>உருள்-. [T. M. uṇda, K. Tu. uṇde.] 1. Ball, globe, sphere; anything round or globular, commonly rather small; திரண்டவடிவுள்ளது. பொரியுண்டை. 2. Ball of stone or earth shot from a bow; 3. Food in the shape of a ball, a mouthful; 4. A kind of sugar; 5. Dice; |
உண்டைக்கட்டி | uṇṭai-k-kaṭṭi n. <>உண்டை+. Balls of food distributed in temples; கோயில் வில்லைப் பிரசாதம். Colloq. |
உண்டைக்கார் | uṇṭai-k-kār n. <>id.+. A coarse paddy sown in August and maturing in four months; நான்குமாதங்களிற் பயிராகும் நெல்வகை. Rd. |
உண்டைக்கெளுத்தி | uṇṭai-k-keḷutti n. <>id.+. Bluish leaden salt-water catfish, Arius nella; சிறு கடல்மீன்வகை. |
உண்டைச்சம்பா | uṇṭai-c-campā n. <>id.+. A paddy maturing in five months; ஐந்து மாதங்களிற் பயிராகும் நெல் வகை. Loc. |
உண்டைச்சாதம் | uṇṭai-c-cātam n. <>id.+. See உண்டைக்கட்டி. (W.) . |