Word |
English & Tamil Meaning |
---|---|
உண்மைத்தவறு | uṇmai-t-tavaṟu n. <>id.+. 1. Untruth; பொய். 2. Breach of trust; |
உண்மைத்தாழ்ச்சி | uṇmai-t-tāḻcci n. <>id.+. Lack of truthfulness; உண்மைக்குறைவு. (சங். அக.) |
உண்மைத்துரோகம் | uṇmai-t-turōkam n. <>id.+. A very flagrant breach of trust; நம்பிக்கைத்துரோகம். (W.) |
உண்மைநெறிவிளக்கம் | uṇmai-neṟi-vi-ḷakkam n. <>id.+. A treatise on the šaiva Siddhānta philosophy by Umāpati-civācāriyar, one of 14 meykaṇṭa-cāttiram, q.v.; உமாபதி சிவாசாரியரியற்றிய சைவசாத்திரம். |
உண்மைப்படு - தல் | uṇmai-p-paṭu- v. intr. <>id.+. To become evident to the mind; to appear as a certainty, as the Deity to His worshippers; to prove true, as religion; நிச்சயப்படுதல். |
உண்மைப்படுத்து - தல் | uṇmai-p-paṭuttu- v. tr. caus. of உண்மைப்படு-. To prove or demonstrate to be true; மெய்ப்பித்தல். |
உண்மைப்பிடி | uṇmai-p-piṭi n. <>உண்மை+. Unfaltering adherence to religious truth, consistent and steady perseverance in religion; உறுதியான சமயப்பற்று. (W.) |
உண்மைப்பேதகம் | uṇmai-p-pētakam n. <>id.+. 1. Prevarication, equivocation; மெய்யை மறைக்கை. 2. Breach of trust, unfaithfulness; |
உண்மைப்பொருள் | uṇmai-p-poruḷ n. <>id.+. 1. God, as the only Reality; கடவுள். 2. True meaning; 3. Unquestionable or axiomatic truth; |
உண்மையறிவு | uṇmai-y-aṟivu n. <>id.+. 1. Knowledge of the truth; தத்துவஞானம். 2. True knowledge; 3. Knowledge acquired as a result of the inevitable consequence of past karma, as dist. fr. that acquired by learning; |
உண்மைவழக்கு | uṇmai-vaḻakku n. <>id.+. See உள்வழக்கு. (மணி. 30, 194.) . |
உண்மைவிளக்கம் | uṇmai-viḷakkam n. <>id.+. A text-book of the šaiva Siddhānta philosophy by Maṉa-vācakaṅ-kaṭantār, one of 14 meykaṇṭa-cāttiram, q.v.; மனவாசகங்கடந்தாரியற்றிய சைவசாத்திரம். |
உண | uṇa n. <>உண்-. Food; உணவு. (சிலப். 2, 28, உரை.) |
உணக்கம் | uṇakkam n. <>உணங்கு-. [K. oṇagilu, M. uṇakkam, Tu. oṇakelu.] Withering, drooping, dejection; வாட்டம். (W.) |
உணக்கு 1 - தல் | uṇakku- 5 v. tr. caus. of உணங்கு-. [M. uṇakku.] 1. To cause to dry, to dry in the sun; உலர்த்துதல். தொடிப் புழுதி கஃசா வுணக்கின் (குறள், 1037). 2. To injure, ruin; |
உணக்கு 2 | uṇakku n. <>உணக்கு-. See உணக்கம். உணக்கலாததோர்வித்து (திருவாச. 30, 1). |
உணங்கல் | uṇaṅkal n. <>உணங்கு-. 1. Dried grain; 2. Dried food material; 3. Cooked food; 4. Withered flower; 1. உலர்த்திய தானியம். உணங்கல் கெடக்கழுதையுதடாட்டங்கண் டென்பயன் (திவ். திருவாய். 4, 6, 7). 2. வற்றல். வெள்ளென் புணங்கலும் (மணி. 16, 67). 3. உணவு. ஓடுகையேந்தி... உணங்கல் கவர்வார் (தேவா. 1030, 3). 4. உலர்ந்த பூ. (பிங்.) |
உணங்கு - தல் | uṇaṅku- 5 v. intr. [K. oṇagu, M. uṇaṅṅu.] 1. To dry, as grain, vegetables or fish; உலர்தல். தினைவிளைத்தார் முற்றந்தினையுணங்கும் (தமிழ்நா. 154). 2. To become gaunt, as the body by fasting; to be emaciated; to become reduced; 3. To be dejected in mind; to languish; 4. To shrink, shrivel; 5. To pine away, droop, become listless; |
உணத்து - தல் | uṇattu- 5 v. tr. corr. of உலர்த்து-. 1. To cause to dry; காயவிடுதல். நெல்லை யுணத்தினான். Vul. 2. To emaciate, at the body; to attenuate; |
உணப்பாடு | uṇappāṭu n. <>உண்-+. Edibility, state of being eaten or consumed; உண்ணப்படுகை. (நன். 274, மயிலை.) |
உணர் 1 - தல் | uṇar- 4 v. [K. oṇar, M. uṇar.] tr. 1. To be conscious of; to know, make out, understand; அறிதல். முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect, consider, contemplate; 3. To examine, test, observe, scrutinize; 4. To experience, as a sensation; 5. To realize, conceive, imagine; 6. To feel; -intr. 1. To wake from sleep; 2. To get back to consciousness, recover from langour; 3. To separate; 4. To become reconciled, as a husband to his wife; to be reunited after a love quarrel; |