Word |
English & Tamil Meaning |
---|---|
உடனிலை | uṭaṉilai n. <>id.+ நிலை. 1. The state of being together; கூடிநிற்கை. உரோணியோ டுடனிலை புரிந்த மறுவுடை மண்டலக்கடவுளை (பெருங். இலாவாண. 9, 67). 2. (Purap.) Singing in praise of two companions; |
உடனிலைக்குதிரைச்சேவகர் | uṭaṉilaik-kutirai-c-cēvakar n. <>id.+. Mounted bodyguards; பரியேறும் மெய்காவலர். (S.I.I. ii, 274.) |
உடனிலைச்சிலேடை | uṭaṉilai-c-cilēṭai n. <>id.+. Paronomasia as a literary embellishment in a stanza conveying both the natural as well as a hidden meaning; ஒருபாட்டு நேரேவரும் பொருளையன்றி வேறுமொரு பொருள்கொண்டு நிற்கும் அணி. (திருக்கோ. 1, உரை.) |
உடனிலைச்சொல் | uṭaṉilai-c-col n. <>id.+. See ஒப்புமைக்கூட்டம். (வீரசோ.அலங். 31.) . |
உடனிலைமெய்ம்மயக்கம் | uṭaṉilai-meym-mayakkam n. <>id.+. (Gram.) Doubling of any consonant other than ர் 'r' or ழ் 'ḻ' whether in single or in compound words, as in அப்பம், அப்படி. opp. to வேற்றுநிலைமெய்ம்மயக்கம்; 'ர், ழ்' என்னும் இரண்டுமொழிந்த 16 மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான் நின்றுமயங்குகை. (நன். 110, உரை.) |
உடனுக்குடனே | uṭaṉukkuṭaṉē adv. <>id.+. [K. odanōdane.] Then and there; அப்போதைக்கப்போது. வந்த கடிதத்துக்கு உடனுக்குடனே பதிலெழுது. Colloq. |
உடனுறை | uṭaṉ-uṟai n. <>id.+. (Akap.) Suggestive meaning conveyed indirectly by means of a specific reference to a distinctive feature of any tract of land; ஒரு நிலத்தில் உடனுறைகின்ற கருப்பொருளாற் பிறிதொரு பொருள் பயப்பமறைத்துக்கூறும் இறைச்சி. (தொல். பொ. 242.) |
உடனுறைவு | uṭaṉ-uṟaivu n. <>id.+. Cohabitation; புணர்ச்சி. (பெரியபு. திருநீலகண். 5.) |
உடனே | uṭaṉē adv. <>id. [K. odane, M. udanē.] 1. Immediately; தாமதமின்றி. 2. Simultaneously; 3. Entirely; |
உடனொத்தவன் | uṭaṉ-ottavaṉ n. <>id.+. Equal, fellow, compeer; சமமானவன். Colloq. |
உடாய் - த்தல் | uṭāy- 11 v. tr. <>U. udanā. Colloq. 1. To oppose, struggle with; எதிர்த்தல். 2. To impose upon, deceive; |
உடான் | uṭāṉ n. <>U. udān. Fib, lie uttered for fun; விளையாட்டாகச்சொல்லும் பொய். Vul. |
உடான்விடு - தல் | uṭāṉ-viṭu- v. intr. <>id.+. To fib; விளையாட்டாகப் பொய்ச்சொல்லுதல். Vul. |
உடானடி - த்தல் | uṭāṉ-aṭi- v. intr. <>id.+. See உடான்விடு-. Vul. . |
உடு 1 - த்தல் | uṭu- 11 v. tr. [K. M. udu.] 1. To put on, as clothes; ஆடைமுதலியன தரித்தல். பட்டுந்துகிலு முடுத்து (நாலடி, 264). 2. To surround, encircle; |
உடு 2 | uṭu n. <>உடு-. Ditch or moat around a fort; அகழி. (பிங்.) |
உடு 3 | uṭu n. <>udu. Star; நட்சத்திரம். (பிங்.) |
உடு 4 | uṭu n. <>hudu. Goat, sheep; ஆடு. (பிங்.) |
உடு 5 | uṭu n. cf. huda. 1. Point where the arrow is pressed against the bow-string; நாணைக் கொள்ளுமிடம். (குறிஞ்சிப். 170.) 2. Arrow; 3. Feather of an arrow; 4. Arrow-head; 5. Oar, boatman's pole; |
உடு 6 | uṭu n. Black sirissa. See உசில். . |
உடுக்கு | uṭukku n. <>hudukka. See உடுக்கை2. . |
உடுக்கை 1 | uṭukkai n. <>உடு-. Raiment, clothing; உடை. உடுக்கை யிழந்தவன் கைபோல (குறள், 788). |
உடுக்கை 2 | uṭukkai n. <>hudkka. [T. uduka, M. udukka.] Small drum tapering in the middle; இடைசுருங்குபறை. நிலையாய் உடுக்கைவாசிப்பான். (S.I.I. ii, 254). |
உடுக்கோன் | uṭu-k-kōṉ n. <>udu+. Moon, lord of the stars; சந்திரன். உடுக்கோனாலும்... அகன்றிடாத் திமிரவீட்டம் (பிரமோத். 2, 40). |
உடுகாட்டி | uṭu-kāṭṭi n. prob. udu+காட்டு-. Alternanthera sessilis. See பொன்னாங்காணி. (W.) . |
உடுண்டுகம் | uṭuṇṭukam n. cf. bhaṇdika sirissa. See வாகை. (தைலவ. தைல. 135.) . |
உடுத்து - தல் | uṭuttu- 5 v. tr. caus. of உடு-. To dress one; ஆடையணிவித்தல். |
உடுப்பாத்தி | uṭuppātti n. A light-green, fresh-water fish, Etroplus suratensis; சிறு கடல் மீன்வகை. |
உடுப்பு | uṭuppu n. <>உடு-. [T. K. udupu, M. uduppu.] 1. Cloth, unsewn garment; ஆடை. மணிக்கோவை யுடுப்பொடு துயல்வர (மணி. 3, 140). 2. Clothes, clothing, vesture, dress; |