Word |
English & Tamil Meaning |
---|---|
உடன்கூட்டாளி | uṭaṉ-kuṭṭāḷi n. <>id.+ Colloq. 1. Co-partner, participator, associate; கூட்டுப்பங்காளி. 2. Playfellow, companion, friend; equal in status, age or rank; |
உடன்கூட்டு | uṭaṉ-kūṭṭu n. <>id.+. Co-partnership; பங்காளியாயிருக்கை. |
உடன்கேடன் | uṭaṉ-kēṭaṉ n. <>id.+. Sharer with another in his grief and sorrow; கூடவே துக்கமனுபவிப்போன். உடன்கேடனாய்நின்று நோக்கும் (ஈடு, 1, 1, 3). |
உடன்கையில் | uṭaṉ-kaiyil adv. <>கையுடன்+இல் part. Immediately, as soon as; உடனே. உடன்கையிலே கூலி கிடைக்குமா? Loc. |
உடன்பங்கு | uṭaṉ-paṅku n. <>உடன்+. Joint share, joint heirship; கூட்டுப்பங்கு. (W.) |
உடன்படிக்கை | uṭaṉ-paṭikkai n. <>உடன்படு-. [T. odambadika, K. odabadike, M. udambadi, Tu. odambadike.] 1. Contract, agreement, covenant, treaty; ஒப்பந்தம். 2. Promise, assurance; |
உடன்படிக்கைக்கணக்கு | uṭaṉ-paṭikkai-k-kaṇakku n. <>உடன்படிக்கை+. Ledger; பேரேடு. (C.G.) |
உடன்படு - தல் | uṭaṉ-paṭu- v. intr. <>உடன்+படு-. [T. odambadu, K. odambadu.] To agree, assent, consent, acquiesce, yield; இசைதல். (பிங்.) |
உடன்படுத்து - தல் | uṭaṉ-paṭuttu- v. tr. caus. of உடன்படு-. [T. odambaratsu.] To persuade into giving consent, make one yield or agree; இணக்குதல். இசைந்துடன்படுத்தினான் (பாரத. குருகுல. 44). |
உடன்பாட்டுவினை | uṭaṉ-pāṭṭu-viṉai n. <>உடன்படு-+. Affirmative verb, opp. to எதிர்மறைவினை; விதிவினை. |
உடன்பாடு | uṭaṉ-pāṭu n. <>id. [T. odabāṭu.] 1. Consent, accord, acquiescence; இசைகை. (பிங்.) 2. Concord, harmony, unanimity; |
உடன்பிறந்தார் | uṭaṉ-piṟantār n. <>உடன்+. Children of the same parents; கூடப்பிறந்தவர். உடன்பிறந்தார் சுற்றத்தார் (வாக்குண். 20). |
உடன்பிறந்தாள் | uṭaṉ-piṟantāḷ n. <>id.+. Sister; கூடப்பிறந்தவள். |
உடன்பிறந்தான் | uṭaṉ-piṟantāṉ n. <>id.+. Brother; கூடப்பிறந்தவன். |
உடன்பிறப்பு | uṭaṉ-piṟappu n. <>id.+. 1. The state of being born of the same parents; சகோதரத்துவம். இன்றொடுந் தவிர்ந்ததன்றே யுடன்பிறப்பு (கம்பரா. கும்பக. 166). 2. Person or persons born of the same parents; |
உடன்புணர்ப்பு | uṭaṉ-puṇarppu n. <>id.+. (Log.) Inseparable concomitance; சமவாயம். (மணி. 27, 243, அரும்.) |
உடன்போக்கு | uṭaṉ-pōkku n. <>id.+. (Akap.) The going away of an unmarried young woman with her lover to his own place without the knowledge of her parents; பெற்றோரறியாமல் தலைவி தலைவனுடன் செல்கை. (நம்பியகப். 181.) |
உடன்வந்தி | uṭaṉ-vanti n. <>id.+ வா-. Inseparable companion, as one's shadow; கூடவே வருவது. உடன்வந்தியான வல்வினை (ஈடு, 5, 8, 5). |
உடன்வயிற்றோர் | uṭaṉ-vayiṟṟōr n. <>id.+. Those born of the same mother; சகோதரர். (சிலப். 10, 227.) |
உடன்வயிறு | uṭaṉ-vayiṟu n. <>id.+. See உடன்வயிற்றோர். பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் (புறநா. 183). |
உடன்வாரம் | uṭaṉ-vāram n. <>id.+. Gross produce before it is divided between landlord and tenant; மேல்வாரம் குடிவாரமாகப் பிரிக்கப்படாத நெல். (T.A.S. i, 7.) |
உடன்றல் | uṭaṉṟal n. <>உடல்-. War; போர். (திவா.) |
உடன்ஜப்தி | uṭaṉ-japti n. <>உடன்+. (Law) 1. Immediate seizure of property according to legal decree; நியாயசபைக்கட்டளைப்படி பொருட்பறிமுதல் செய்கை. 2. Attachment before judgment; |
உடனா - தல் | uṭaṉ-ā- v. intr. <>id.+. To be in company with, associate; கூடிநிற்றல். (சி. சி. 2, 80.) |
உடனாளி | uṭaṉ-āḷi n. <>id.+. See உடன் கூட்டாளி. . |
உடனிகழ் - தல் | uṭaṉikaḻ- v. intr. <>id.+. To happen simultaneously; ஒருங்கு சம்பவித்தல். |
உடனிகழ்ச்சி | uṭaṉikaḻcci n. <>id.+. Happening simultaneously; ஒருங்கு சம்பவிக்கை. (நன். 297, விருத்.) |
உடனிகழ்ச்சியணி | uṭaṉikaḻcci-y-aṇi n. <>id.+. See புணர்நிலையணி. (அணியி. 21.) . |
உடனிகழ்வான் | uṭaṉikaḻvāṉ n. <>id.+ நிகழ்-. Companion, comrade; துணைவன். (திவா.) |
உடனிகழ்வு | uṭaṉikaḻvu n. <>id.+. See உடனிகழ்ச்சி. (நன். 297.) . |