Word |
English & Tamil Meaning |
---|---|
ஏரங்கிமுட்டான் | ēraṅkimuṭṭāṉ n. cf. இறங்கமாட்டான். A kind of paddy; நெல்வகை. (A.) |
ஏரடம் | ēraṭam n. perh. ஏறு. Thunder; இடி. (சங். அக.) |
ஏரண்டி | ēraṇṭi. n. <> ēraṇdhi. Long pepper; திப்பிலி. (சங். அக.) |
ஏரம்பம் | ērampam n. <> hēramba. Elephant; யானை. (நாமதீப.) |
ஏரிப்பட்டி | ēri-p-paṭṭi n. <> ஏரி+. Endowment made for carrying out repairs to the tank; ஏரி மராமத்துக்காகக் கொடுக்கும் மானியம். (S. I. I. iii, 225.) |
ஏரிமேரை | ēri-mērai n. <> id.+. A portion of the crop set apart to meet the expense of keeping the reservoir and water-courses in repair; ஏரி மதகு கலிங்கல் இவைகளின் மராமத்துச் செலவிற்காக ஒதுக்கப்படும் மாசூலின்பகுதி. (W. G.) |
ஏரியவீரி | ēriyavīri n. prob. ஏறு-+வீரம். Cavvīrapāṣāṇam, a mineral poison; சவ்வீர பாஷாணம். (சங். அக.) |
ஏரியால் | ēriyāl n. perh. airiṇa. Rock-salt; கல்லுப்பு. (சங். அக.) |
ஏலவை | ēlvai n. prob. ஏல்-. A tax; வரிவகை. (S. I. I. v, 96.) |
ஏலக்கோலம் | ēla-k-kōlam n. Readiness; ஆயத்தம். (யாழ். அக.) |
ஏலபிலி | ēlapili n. Indian mustard; கடுகு. (சங். அக.) |
ஏலாதிகடுகம் | ēlāti-kaṭukam n. <> ஏலம்+ஆதி+. A medicine; மருந்துவகை. (யாழ். அக.) |
ஏலாபத்திரம் | ēlā-pattiram n. <> ēlā+. Cubeb; தக்கோலம். (சங். அக.) |
ஏலான் | ēlāṉ n. <> ஏறான். See ஏற்றான். Nā. . |
ஏவருகன் | ēvarukaṉ n. Liquorice-plant; அதிமதுரம். (சங். அக.) |
ஏவிவிடு - தல் | ēvi-viṭu- v. intr. <> ஏவு-+. To raise an evil spirit and set it on one's enemy; பூதபிசாசுகளை யெழுப்பிப் பிறரைத் துன்புறுத்த அனுப்புதல். (யாழ். அக.) |
ஏவு | ēvu n. cf. எவ்வம். Misery; துன்பம். (யாழ். அக.) |
எழகத்தார் | ēḻakattār n. perh. ஏழு+. A class of military men; படைவகுப்பாருள் ஒரு வகையார். (Colas. ii, 105.) |
ஏழாநீர்ச்சடங்கு | ēḻā-nīr-c-caṭaṅku n. <> id.+ஆ-+நீர்+. Ceremonial oil-bath taken by newly married couple on the seventh day after the marriage; மணமான ஏழாநாள் மணமக்கள் எண்ணெய் தேய்த்து முழுகுஞ் சடங்கு. Loc. |
ஏழாம்பொருத்தம் | ēḻām-poruttam n. <> id.+ஆ-+. Enmity; total disagreement; தீராவிரோதம். Tinn. |
ஏழில் | ēlil n. Seven-leaved milk-plant; ஏழிலைப்பாலை. (குறுந். 138, உரை.) |
ஏற்பாடு | ēṟ-pāṭu n. <> ஏல்-+. Fitness, appropriateness; பொருத்தம். (யாழ். அக.) |
ஏற்பி - த்தல் | ēṟpi- 11 v. tr. Caus. of ஏல்-. To entrust; ஒப்படைத்தல். Loc. |
ஏற்றப்புவாரம் | ēṟṟa-p-pu-vāram n. prob. ஏற்றம்+பூ+. Share of the produce, as a charge for watering lands; நீர்க்கூலி. (W. G.) |
ஏற்றான் | ēṟṟāṉ n. <> ஏறு-. First boy to be present at school, on a day; ஏறான். Tinn |
ஏற்றிவா - தல் [ஏற்றிவருதல்] | ēṟṟi-vā- v. tr. <> ஏற்று-+. To add; கூட்டுதல். தடிமூன்றினால் ஏற்றிவந்த நிலம் (S. I. I. vi, 11). |
ஏற்று - தல் | ēṟṟu- 5 v. tr. To establish by evidence; நிரூபித்தல். அடிமையென்ற வெவ்வுரை யெம்முன் னேற்றவேண்டும் (பெரியபு. தடுத்தாட். 55). |
ஏற்றுமதிச்சீட்டு | ēṟṟumati-c-cīṭṭu n. <> ஏற்றுமதி+. Manifest; கப்பலிலுள்ள மாலுமிகளின் பெயர் பயணக்காரர் தொகை சரக்குகளின் விவரம் முதலிய குறிப்புக்கள் அடங்கியுள்ள சீட்டு. (M. Navi. 123.) |
ஏறக்கட்டு - தல் | ēṟa-k-kaṭṭu- v. tr. <> ஏறு-+. To strengthen by bands, etc,; பலப்படுத்துதல். (யாழ். அக.) |
ஏறடம் | ēṟaṭam n. Liquorice-plant; அதிமதுரம். (சங். அக.) |
ஏறிட்டுக்கொள்(ளு) - தல் | ēṟiṭṭu-k-koḷ- v. tr. <> ஏறிடு-+. To accept or assume responsibility; அங்கீகரித்தல். என்னுடைய ரக்ஷை உனக்கே பரமாக ஏறிட்டுக் கொள்ளவேணும் (ரஹஸ்ய. 338). |
ஏறிடு - தல் | ēṟiṭu- v. tr. <> ஏறு-+. To enter on the credit side of account; கணக்கிலிடுதல். வரும் மாடை நாட்டிலே ஏறிட்டுக் கொண்டு (S. I. I. v, 493). |
ஏறு | ēṟu n. cf. சேமரம். A kind of tree; மரவகை. (அக. நி.) |