Word |
English & Tamil Meaning |
---|---|
ஏககுண்டலன் | ēka-kuṇṭalaṉ n. <> ēka+. Kubēra, the God of Wealth; குபேரன். (யாழ். அக.) |
ஏககுரு | ēka-kuru n. <> ēka-guru. Fellow-student; உடன் கற்றோன். (யாழ். அக.) |
ஏகசரம் | ēkacaram n. <> ēkacara. Rhinoceros; காண்டாமிருகம். (யாழ். அக.) |
ஏகசிருங்கி | ēka-ciruṅki n. <> ēka-šrṅga. See ஏகசரம். (நாமதீப.) . |
ஏகதிரீத்துவம் | ēka-tirīttuvam n. <> ēka+tri-tva. Unity in trinity; ஒன்றில் மூன்று தத்துவங்கள் உள்ள நிலை. Chr. |
ஏகதேசாகாரம் | ēkatēcākāram n. <> ēka-dēša+. Finite form; அளவுபட்ட வடிவு. உபாதி பற்றி ஏகதேசாகாரம் உயிரெனவும் அகண்டாகாரமீச னெனவும் (உபநிடதம், பக். 12). |
ஏகப்பட்ட | ēka-p-paṭṭa adj. <> ஏகம்+படு-. Plenty; numerous; மிகுதியான. Tinn |
ஏகபந்தனம் | ēka-pantaṉam n. <> ēka+. Uniting; fastening; ஒன்றிப்பு. (யாழ். அக.) |
ஏகபாதாதனம் | ēka-pātātaṉam n. <> id.+pāda+. (šaiva.) A yōgic posture; யோகாசன வகை. (தத்துவப். 108, உரை.) |
ஏகபோகம் | ēka-pōkam n. <> id.+. Mutual reciprocal enjoyment; இருவருக்கு மொத்த போகம். ஏகபோகமாய் நீயுநானுமாய் இறுகும்வகை பரமசுக மதனையருள் . . . பெருமாளே (திருப்பு. 862). |
ஏகம் | ēkam n. cf. ஏகம்பட்சாரம். Bell-metal; வெண்கலம். (சங். அக.) |
ஏகரூபன் | ēka-rūpaṉ n. <> ēka+. God; கடவுள். (யாழ். அக.) |
ஏகல் | ēkal n. of. ஏ. Height; உயரம். (J.) |
ஏகாக்கிரம் | ēkākkiram n. <> ēka+. Rich meal; வளமான சாப்பாடு. (S. I. I. vii, 233.) |
ஏகாங்கம் | ēkāṅkam n. <> ēkāṅga. 1. Solitude; தனிமை. (யாழ்.அக) 2. Sandalwood; |
ஏகாங்கரூபகம் | ēkāṅka-rūpakam n. <> ēka+aṅga+. (Rhet.) A kind of metaphor; உருவகவகை. (மாறனலங். பக். 181.) |
ஏகாங்கி | ēkāṅki n. <> ஏகாங்கம். Ascetic; சன்னியாசி. (யாழ். அக.) |
ஏகாடம் | ēkāṭam n. [T. āgadamu.] Scoffing, jest; பரிகாசம். ஏன்னத்துக்கிந்த ஏகாடஞ் செய்கிறீர் (கனம் கிருஷ்ணையர், கீர்த். 6). |
ஏகாந்தன் | ēkāntaṉ n. <> ēka+. Devotee whose mind is fixed on God alone; அந்தரங்க பக்தன். மாதேவர்க் கேகாந்த ரல்லராகில் (தேவா. 1230, 10). |
ஏகாந்தி | ēkānti n. <> ஏகாந்தம். 1. See ஏகாந்தன். Colloq. . 2. One who looks at things from only one point of view; |
ஏகார்ணவம் | ēkārṇavam n. <> ēka+. Cosmic deluge; ஊழிப்பெருவெள்ளம். இப்படி ஏகார்ணவத்திலே தனியே சாய்ந்தருளுகிறவன்தான் ஆர் என்னில் (ஈடு, 1, 5, 4, பக். 235). |
ஏகீயன் | ēkīyaṉ n. <> ēkīya. Friend; தோழன். (யாழ். அக.) |
ஏகூன் | ēkūṉ n. <> Mahr. ēkūṇ-ēk. Whole; முழுவதும். (P. T. L.) |
ஏச்சோறு | ēccōṟu n. of. எச்சோறு. Food given gratis; தண்டச்சோறு. ஏச்சோறு பொங்கி யிட்டே (ஆதியூரவதானி, 3). |
ஏசி | ēci n. <> ஏசு-. Contempt; இகழ்ச்சி. (அரு. நி.) |
ஏடகம் | ēṭakam n. perh. ஏடு+. Plank; பலகை. (அக. நி.) |
ஏடன் 1 | ēṭaṉ n. <> ēda. Deaf man; செவிடன். (யாழ். அக.) |
ஏடன் 2 | ēṭaṉ n. cf. ஏடா. Companion, friend; தோழன். (யாழ். அக.) |
ஏடாசிரியன் | ēṭāciriyaṉ n. <> ஏடு+. One who has learnt from books and not from a teacher; குருவின்றி ஏட்டின் உதவி கொண்டே கற்றோன். (யாழ். அக.) |
ஏடு | ēṭu n. of. idā. 1. World; உலகம். (அக. நி.) 2. Sole of foot; |
ஏடுகம் | ēṭukam n. <> ēduka. Grave; பிரேதக்கல்லறை. (யாழ். அக.) |
ஏணகம் | ēṅakam n. cf. அரேணுகம். A drug; ஒருவகை மருந்துச்சரக்கு. (நாமதீப. 395.) |
ஏணம் 1 | ēṇam n. <> ēṇa. Deer skin; மான் தோல். (W.) |
ஏணம் 2 | ēṇam n. cf. ஏண். (யாழ். அக.) 1. Strength; வலிமை. 2. Bone; |
ஏணிக்காணம் | ēṇi-k-kāṇam n. prob. ஏணி+. Tree tax; மரத் தீர்வை. (T. A. S. ii, 67.) |
ஏணை | ēṇai n. prob. ēda. Goat or sheep; ஆடு. (யாழ். அக.) |