Word |
English & Tamil Meaning |
---|---|
எழுத்துச்சிற்றாடை | eḻuttu-c-ciṟṟāṭai n. <> id.+. Embroidered cloth for children; சித்திரவேலைப்பாடமைந்த சிற்றாடைவகை. (திவ். பெரியாழ். 1, 3, 8, வ்யா. பக். 64, அரும்.) |
எழுத்துச்சுதகம் | eḻuttu-c-cutakam n. <> id.+. Verse composed with a play on words; அக்கரச் சுதகம். (யாப். வி. 509.) |
எழுத்துநடை | eḻuttu-naṭai n. <> id.+. See எழுத்துவாசனை. (யாழ். அக.) . |
எழுத்துப்பட்சி | eḻuttu-p-paṭci <> id.+. Birds representing vowels, in paṭci-cāt-tiram; உயிரெழுத்துக்களுக்குரியவாகச் சோதிடத்திற் கூறப்படும் பறவைகள். (சோதிடகிரக. 253.) |
எழுத்துப்பானை | eḻuttu-p-pāṉai n. <> id.+. Painted pot, usually sent by the bride's people to her father-in-law's house along with poṅkaṟpāṉai; பொங்கற்பானையோடு மாப்பிள்ளை வீட்டுக்குப் பெண்வீட்டார் அனுப்புஞ் சித்திரமெழுதிய பானை. Nā. |
எழுத்துப்புடைவை | eḻuttu-p-puṭaivai n. <> id.+. Printed saree; சித்திரமெழுதிய சீலை. (யாழ். அக.) |
எழுத்துமடக்கு | eḻuttu-maṭakku n. <> id.+. (Rhet.) Repetition of the same letter in a verse; செய்யுளில் எழுத்து மடங்கிவருஞ் சொல்லணிவகை. (W.) |
எழுத்துவாசனை | eḻuttu-vācaṉai n. <> id.+. The art of reading and writing; எழுதவும் வாசிக்கவும் பழகிய பயிற்சி. (W.) |
எழுத்துவினியோகம் | eḻuttu-viṉiyōkam n. <> id.+. A tax; வரிவகை. (S. I. I. vii, 458.) |
எழுது - தல் | eḻutu- 5 v. tr. To gild; பூசுதல். செம்பொனா லெழுதிவேய்ந்த (தேவா. 6, 8). |
எழுந்தேற்றம் | eḻuntēṟṟam n. <> எழு-+ஏறு-. Random; கவனிப்பின்மை. (யாழ். அக.) |
எழுநயம் | eḻu-nayam n. <> எழு+. (Jaina.) The seven-fold formula of the doctrine of qualified predication; சப்தபங்கிநியாயம். எழுநயம் பகர்ந்த பிண்டியாய் (திருக்கலம். 11). |
எழுப்பு | eḻuppu n. <> எழுப்பு-. Zeal, enthusiasm; உற்சாகம். Pond. |
எழும்பல் | eḻumpal n. prob. எழும்பு-. Hand-book of land-register; நிலவிவரம்பற்றிய கைக்குறிப்புப் புஸ்தகம். (யாழ். அக.) |
எழுமுத்தி | eḻumutti n. A minor deity; ஒரு சிறு தெய்வம். ஐயன் என்றும் எழுமுத்தி என்று மிதெல்லையாக ஆசண்டாளம் ஆச்ரயணீயரைக் கற்பித்தான் (திவ். திருமாலை, 10, வ்யா. பக். 45). |
எள்ளு - தல் | eḷḷu- 5 v. tr. To omit; தள்ளுதல். (யாழ். அக.) |
எள்ளுவன்னம் | eḷḷu-vaṉṉam ṅ. <> எள்ளு+. A kind of saree; சீலைவகை. Loc. |
எளிவிலையன் | eḷi-vilaiyaṉ n. <> எளி-மை+. Cheap article; விலைகுறைந்த பண்டம். கொள்வார் கொடுப்பாரின்றியே எளிவிலையனாய்ப் போம் (ஈடு, 10, 2, 9). |
எற்று - தல் | eṟṟu- 5 v. tr. To lift, take; எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி. 23). |
எற்றை | eṟṟai inter. pron. <> என்று. When; என்று. (யாழ். அக.) |
எறி - தல் | eṟi- 4 v. tr. 1. To rebuke; இடித்துரைத்தல். தெவ்வர்போலத் தீதற வெறிந்தும் (சீவக. 1895). 2. To stroke, pat; |
எறுப்பிடைச்செய்யுள் | eṟuppiṭai-c-ceyyuḷ n. <> எறும்பு+இடை+. (Pros.) A kind of metre; பிபீலிகாமத்திமம். (யாப். வி. பக். 481.) |
எறும்பி | eṟumpi n. Ant. எறும்பு. எறும்பி யளையிற் குறும்பல் சுனைய (குறுந்.12). |
என்பி - த்தல் | eṉpi- v.tr.Caus. என்-. To cause to be known; to proclaim; பிரசித்தியாக்குதல். என் சொல்லால் யான்சொன்ன இன்கவியென்பித்து(திவ். திருவாய். 7,9,2). |
என்பிலி | eṉpili n.<>என்பு+இல் neg. Worm; புழு(நாதீப.) |
என்றூழ் | eṉṟūḻ n. Wind காற்று.(அக. நி.) |
என்னம்பு | eṉṉampu inter.pron. See என்னம்புது. நீ எனக்கு என்னம்பு தருவாய்(திவ். பெரியாழ். 2,3,11, வ்யா.பக் 302). . |
என்னம்புது | eṉṉamputu inter.pron. perh. என்னென்னபது. What; என்னது. அதென்னம் புது என்ன (திவ். திருக்குறுந். 4.வ்யா). |
எனைத்து | eṉaittu inter.pron. Of what sort; எத்தன்மைத்து(யாழ். அக.) |
ஏக்கிரிபோக்கிரி | ēkkiri-pōkkiri n. of. ஏக்கிபோக்கி. Destitute person; அகதி. Loc. |
ஏக்கோசம் | ēk-kōcam n. <> Hind. ēk+. Registry of the lands of a village in the name of a single ryot; கிராமநிலங்களை ஒருவர்பேரிற் பதிவுசெய்கை. (P. T. L.) |