Word |
English & Tamil Meaning |
---|---|
எத்துவாளி | ettu-v-āḷi n. <> எத்து+ஆள். Cheat; ஏமாற்றுபவ-ன்-ள். Tinn. |
எதிர்க்கடை | etir-k-kaṭai n. <> எதிர்+. Opposition; எதிர்ப்பு. Loc. |
எதிர்க்கதவு | etir-k-katavu n. <> id.+. Folding door, double door; ஆடுகதவு. Pond. |
எதிர்க்கொத்தளம் | etir-k-kottaḷam n. <> id.+. Protecting wall in front of the rampart; கொத்தளத்துக்கு முன்னுள்ள காப்புச்சுவர். Pond. |
எதிர்த்தாக்கு | etir-t-tākku n. <> id.+. Counter attack in self-defence; தற்காப்பின் பொருட்டுத் தாக்குகை. Pond. |
எதிர்ப்பு | etirppu n. <> எதிர்-. Omen; சகுனம். Loc. |
எதிர்மறுப்பு | etir-maṟuppu n. <> எதிர்+. Contradictory statement; முன்னொடுபின் முரணக்கூறுகை. (யாழ். அக.) |
எதிர்மொழி | etir-moḻi n. <> id.+. Statement by the defendant in a suit; வழக்கில் பிரதிவாதி கொடுக்கும் உத்தரம். (சுக்கிரநீதி, 272.) |
எதிர்வாக்கு | etir-vākku n. <> id.+. See எதிர்வார்த்தை. (பெண்மதிமாலை, 3.) . |
எதிர்வாய் | etir-vāy n. <> id.+. Foreshore of a lake; ஏரியின் முன்வாய். Loc. |
எதிர்வார்த்தை | etir-vārttai n. <> id.+. Retort; reply; பதிற்சொல். சங்கத்தார்க்கு ஒரு போதும் எதிர்வார்த்தை சொல்லார்களே (தமிழறி. 32). |
எதிர்விற்பனை | etir-viṟpaṉai n. <> id.+. Competition in trade; போட்டிவியாபாரம். Pond. |
எதிர்விஷம் | etir-viṣam n. <> id.+. Antidote; விஷத்தை முறிக்கும் மருந்து. Pond. |
எதிரடையோலை | etir-aṭai-y-ōlai n. <> id.+. A deed of authority given by the lessor to the lessee; அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் ஆதரவுச் சீட்டு. நிலக்கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடையோலை காட்டினபடியாலும் (S. I. I. vii, 385). |
எதிரதுதழுவு - தல் | etiratu-taḷuvu- v. tr. <> எதிர்+. To bear anticipatory reference; வரக்கடவதனையுங் குறித்து நிற்றல். எதிரது தழீஇய வெச்சவும்மை (நன்.). |
எதிரதுபோற்று - தல் | etiratu-pōṟṟu- v. tr. <> id.+. See எதிரதுதழுவு-. (நேமிநா. 52, உரை.) . |
எதிராத்தம் | etirāttam adv. <> yathārtham. Truly; உண்மையாய். (யாழ். அக.) |
எதிளை | etiḷai n. of. எகின். Tamarind; புளியமரம். (சங். அக.) |
எதேச்சாதிகாரம் | etēccātikāram n. <> yathēcchādhikāra. Autocracy; இஷ்டப்படி அதிகாரஞ் செலுத்துகை. Mod. |
எந்திரன் | entiraṉ n. <> yantra. Car; தேர். ( யாழ். அக.) |
எம்பெருமான்வெட்டு | emperumāṉ-veṭṭu n. <> எம்பெருமான்+. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 134.) |
எமங்கிசம் | emaṅkicam n. perh. ஏமம்+அமிசம். Gold-coloured antimony; பொன்னிமிளை. (சங். அக.) |
எய் | ey n. prob எய்-. Poverty; வறுமை. எய்யுரையான் (ஏலா. 33). |
எய் - த்தல் | ey- 11 v. intr. To be within one's depth; காலூன்றி நிற்கும்படி நீர் ஆழமில்லாதிருத்தல். Loc. |
எய்துமாலன் | eytumālaṉ n. Long pepper; திப்பிலி. (சங். அக.) |
எய்ப்பில்வைப்பு | eyppil-vaippu n. <> எய்ப்பு+. That which, though itself feeble, is a source of strength and support to other things; தான் தளர்ந்தும் பிறரைத் தாங்குவது. (யாழ். அக.) |
எயில்காத்தல் | eyil-kāttal n. <> எயில்+. (Puṟap.) A theme which treats of the defence of a fortress by its owner; அகத்தோன் உள்ளிருந்து கோட்டையைக் காத்து நிற்றலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 67, உரை.) |
எரி | eri n. <> எரி-. 1. A comet; வால்நட்சத்திரவகை (புறநா. 395.) 2. Ceylon leadwort; 3. Fire-drill; |
எரிகுட்டம் | eri-kuṭṭam n. <> id.+. A kind of leprosy; குட்டநோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 114.) |
எரிச்சல் | ericcal n. <> id. Aversion; வெறுப்பு. Loc. |
எரிசிகை | eri-cikai n. <> id.+. Indian acalypha; குப்பைமேனி. (நாமதீப.) |
எரிபூடு | eri-pūṭu n. prob. id.+. A seaside plant; சமுத்திரக்கரையில் உண்டாகும் ஒருவகைப்பூடு. Loc. |
எரிமலை | eri-malai n. <> எரி+. Volcano; நெருப்பைக் கக்கும் மலை. Mod. |