Word |
English & Tamil Meaning |
---|---|
எரியவிட்டமருந்து | eriya-viṭṭa-maruntu n. <> எரி-+விடு-+. Calcined medicinal powder; மருந்து பஸ்மம். (யாழ். அக.) |
எரியெண்ணெய் | eri-y-eṇṇey n. <> id.+. A mixture of ghee, castor oil and sesame oil, burnt in a ladle and poured on food; கறண்டியிலிட்டுக் காய்ச்சிச் சோற்றிலே ஊற்றும் முக்கூட்டெண்ணெய். Loc. |
எரிவட்டம் | eri-vaṭṭam n. <> எரி+. A hell; நரகவகை. (W.) |
எருக்கு | erukku n. <> எருக்கு-. Harm; துன்பம். தூதர்தம்முயிர்க் கெருக்கிடை யெய்தினு மெண்ணற் பாலரோ (புரூரவ. போர்புரி. 6). |
எருத்துவாலன் | eruttu-vālaṉ n. <> எருத்து+. cf. எருவை. Sedge tuber; கோரைக்கிழங்கு. (சங். அக.) |
எருந்து | eruntu n. perh. எருத்து. Mortar; உரல். (அக. நி.) |
எருமைக்காளை | erumai-k-kāḷai n. prob. எருமை+. A kind of paddy; நெல்வகை. (A.) |
எருமைத்தக்காளி | erumai-t-takkāḷi n. <> id.+. Indian winter-cherry; பெருந்தக்காளி. Loc. |
எருமைநாக்குமோகரா | erumai-nākku-mōkarā n. prob. id.+நாக்கு+. An ancient coin; பழைய நாணய வகை. (சரவண. பணவிடு. 62.) |
எருமைப்பொன் | erumai-p-poṉ n. prob. id.+. A tax; வரிவகை. (S. I. I. vi, 155.) |
எருவண்டு | eru-vaṇṭu n. prob. எரி+. A kind of beetle; வண்டுவகை. Pond. |
எருவை | eruvai n. Donkey; கழுதை. (அக. நி.) |
எல்லங்கார் | ellaṅkār n. A kind of paddy; நெல்வகை. (A.) |
எல்லரி | ellari n. Hand-bell; கைம்மணி. எல்லரி யோதை பொங்கி (இரகு. திக். 45). |
எல்லு - தல் | ellu- 5 v. intr. To become dim, as the sun; ஒளி மங்குதல். எல்லு மெல்லின்று ஞமலியு மிளைத்தன (குறுந். 179). |
எல்லைக்கட்டு | ellai-k-kaṭṭu n. <> எல்லை+. Payment of taxes; இறைக்கட்டு. (யாழ். அக.) |
எல்லைக்கால் | ellai-k-kāl n. <> id.+. Boundary stone; எல்லைக்கல். (யாழ். அக.) |
எலிச்செவிக்கள்ளி | eliccevi-k-kaḷḷi n. <> எலிச்செவி+. A kind of sedge; கள்ளிவகை. (தைலவ. தைல. 125, உரை.) |
எலித்துளசி | eli-t-tuḷaci n. <> எலி+. Rough basil; குழிமிட்டான். (சித். அக.) |
எலிவாணம் | eli-vāṇam n. <> id.+. A kind of rocket; வாணவகை. (W.) |
எலு | elu n. of. எலுவல். Friendship; தோழமை. (யாழ். அக.) |
எலும்பிலி | elumpili n. prob. எலும்பு+. A tree; மரவகை. (யாழ். அக.) |
எலும்புருக்கி | elumpurukki n. prob. id.+. (யாழ். அக.) 1. A shrub; பூடுவகை. 2. A tree; |
எவ்வு - தல் | evvu- 5 v. intr. To cause pain; துன்பமிழைத்தல். எவ்வுஞ் சிலையுடை (திவ். பெரியாழ். 3, 2, 5, வ்யா. பக். 543). |
எவ்வை | evvai n. <> எவ்வம். Care, anxiety; கவலை. எவ்வையில்லா வள்ளியம்மை கவ்வைமனதாகும் (வள்ளி. கதை. Ms.). |
எவற்று | evaṟṟu inter. pron. <> எவன். What; எது. (யாழ். அக.) |
எழல் | eḻal n. Grief; துக்கம். (யாழ். அக.) |
எழில்பிடி - த்தல் | eḻil-piṭi- v. tr. <> எழில்+. To be attracted by smell; மணம்பிடித்தல். (யாழ். அக.) |
எழுகளம் | eḻu-kaḷam n. <> எழு-+. Conclution of the annual harvest; ஆண்டு அறுவடை முடிவு. Tj. |
எழுகு | eḻuku n. Steel; எஃகு. (சித். அக.) |
எழுச்சி | eḻucci n. <> id. Physical charm; தோற்றப்பொலிவு. |
எழுத்தச்சு | eḻuttaccu n. <> எழுத்து+. Letter-type; அச்சிட உதவும் எழுத்தமைந்த உரு. (R.) |
எழுத்தாணிக்கள்ளன் | eḻuttāṇi-k-kaḷḷaṉ n. <> எழுத்தாணி+. One who fabricates accounts; கள்ளக்கணக்கு எழுதுவோன். எழுத்தாணிக்கள்ளர் பிரட்டெல்லா முன்காரணமே (சரவண. பணவிடு. 160). |
எழுத்தாணிக்குருவி | eḷuttāṇi-k-kuruvi n. <> id.+. Wood-pecker; மரங்கொத்திக் குருவி. Loc. |
எழுத்தாணிப்பூச்சி | eḻuttāṇi-p-pūcci n. prob. id.+. Silver-fish, insect, Lepisma; பூச்சிவகை. Loc. |
எழுத்துக்குத்து | eḻuttu-k-kuttu n. <> எழுத்து+. Written evidence; document; எழுத்துமூலமான சாட்சியம். Tinn |