Word |
English & Tamil Meaning |
---|---|
உதாரத்துவம் | utārattuvam n. <>udāratva. See உதாரகுணம். . |
உதாரதை | utāratai n. <>udāra-tā. 1. Liberality; கொடை. ஊணிலான் செய்யு முதாரதையும் (சிறுபஞ். 12). 2. A figure of speech. See உதாத்தம். (வீரசோ. அலங். 29.) |
உதாரம் | utāram n. <>udāra. 1. Liberality, generosity, munificence; கொடை. உதாரசீலனுய ரங்கர்கோன் (பாரத. கிருட். 134). 2. Nobility, greatness; 3. (Poet.) Indication by indirect suggestion of the excellence or the eminence of a thing, a merit of poetic composition; |
உதாரன் | utāraṉ n. <>id. 1. Liberal man, generous person; கொடையாளி. 2. A person of good address, of confidence, of manliness; |
உதாரி | utāri n. <>id. See உதாரன். உதாரி மேவிய கானமே (சேதுபு. தரும. 9). |
உதாவணி | utāvaṇi n. <>dhāvani. A very prickly plant with diffuse branches. See கண்டங்கத்தரி. (மூ. அ.) . |
உதானன் | utāṉaṉ n. <>udāna. A vital air of the body, the ascending vāyu, one of tacavāyu, q.v.; தசவாயுக்களுள் ஒன்று. (பிங்.) |
உதி 1 | uti n. prob. உதி2-. 1. Goompain tree. See ஓதி. உதிமரக் கிளவி (தொல். எழுத். 243). 2. Falcate trumpet flower, m. tr., Dolichandrone falcata; 3. Metal-worker's bellows; |
உதி 2 - த்தல் | uti- 11 v. intr. cf. உதி3-. To swell, increase in size; பருத்தல். ஆள் உதித்துவிட்டான். |
உதி 3 - த்தல் | uti- 11 v. intr. <>udi. 1. To rise or appear, as a heavenly body; உதயமாதல். மீளவு முதித்தனன் (பாரத. இரண்டாம். 32). 2. To spring up, come into existence, arise, as primitive elements one out of another; 3. To commence, as a new year, an age; to be born, as a great personage; |
உதி 4 | uti n. <>உதி3-. Science, learning; வித்தை. உதியொரேழிரண்டுந் தந்த முனிவ (இரகு. அயனு. 19). |
உதிட்டிரன் | utiṭṭiraṉ n. <>yudhi-ṣṭhira. Yudhiṣṭhira, the eldest of the Paca-pāṇṭavar, q.v.; தருமபுத்திரன். (பிங்.) |
உதிதன் | utitaṉ n. <>ud-ita. One who is born; தோன்றினவன். உதிதற்குரியாள் பணியால் (சீவக. 23). |
உதிப்பு | utippu n. <>உதி3-. 1. Birth, appearance; தோற்றம். மரிப்பொ டுதிப்பு (பிரபுலிங். முத்தாயி. 23). 2. Wisdom; |
உதியஞ்சேரல் | utiya-cēral n. <>உதியன்+. The Cēra king who is said to have fed the armies of the Pāṇdavas in the Mahābhārata war; பழையசேரருள் ஒருவன். (பதிற்றுப். 20, பதிகம்.) |
உதியன் | utiyaṉ n. prob. உதி3-. Title of the Cēra dynasty; சேரன். (திவா.) |
உதிர் 1 - தல் | utir- 4 v. intr. [K. udir, M. utir,Tu. udur.] 1. To drop off, as leaves, fruits; to fall out, as hair; to be blasted, nipped, shaken with the wind; to drop down, as tears; கீழ் விழுதல். தீவளியா னற்கா யுதிர்தலு முண்டு (நாலடி, 19). 2. To crumble, fall to pieces, as cakes; 3. To die, used in imprecations; 4. To be demolished; |
உதிர் 2 - த்தல் | utir - 11 v. tr. caus. of உதிர்-. [K. udirisu, M. utir.] 1. To cast leaves or fruits, as trees; to cause to drop or fall in numbers or succession to shake off, beat off, peel off, strip; to knock out, as teeth; to shed, as tears; வீழ்த்துதல். குயில்குடைந் துதிர்த்த புதுப் பூஞ்செம்மல் (சிறுபாண். 4). 2. To break in pieces; 3. To shake out, as a cloth; |
உதிர் 3 | utir n. <>உதிர்1-. 1. Crumb, piece, fragment; துகள். உடைந்தன வுதிராகி (கந்தபு. சதமக். 13). 2. Straight-sedge tuber; |
உதிர்பன்னீர் | utir-paṉṉīr n. <>id.+. Dew-flower, m. tr., Guettarda speciosa; பன்னீர்மரம். Loc. |
உதிர்மணல் | utir-maṇal n. <>id.+. Loose damp sand; சிற்றீரமுள்ள மணல். (W.) |
உதிரக்கட்டு | utira-k-kaṭṭu n. <>rudhira+. (W.) 1. Stoppage of hemorrhage; இரத்தத்தை நிறுத்துகை. 2. Suppression of the menses; |
உதிரக்கல் | utira-k-kal n. <>id.+. Blood-stone, heliotrope; மாணிக்கவகை. (M. M.) |
உதிரக்கலப்பு | utira-k-kalappu n. <>id.+. Blood relationship, consanguinity; இரத்த சம்பந்தமுள்ள உறவு. |