Word |
English & Tamil Meaning |
---|---|
சொர்க்கப்படம் | corkka-p-paṭam n. <>svarga+. Board for a kind of back gammon; கட்டங்களிற் காய்கள் வைத்தாடும் ஒருவகைப் படம். Mod. |
சொர்க்கஸ்தரா - தல் | corkkastar-ā- v. intr. <>சொர்க்கம்+. To die; இறத்தல். பரமேசுரபோத்தரயர் சொர்க்கஸ்தராவது (S. I. I. iv, 10). |
சொர்ணம் | corṇam n. Excess; மிகுதி. (திருவர்வடுதுறைக். கோ. நூலாராய்ச்சி. பக். 21.) |
சொரிநெல் | cori-nel n. <>சொரி-+. Paddy heaped up; குவித்திருக்கும் நெல். (W.) |
சொருகுமுந்தானை | coruku-muntāṉai n. <>சொருகு-+. The end of a saree which is tucked in; புடைவையின் சொருகு தலைப்பு. (W.) |
சொருவம் | coruvam n. prob சொரூபம். Estate of Nambudri Brahmins, royal personages, etc.; நம்பூதிரி முதலியோரின் மனை முதலிய ஸ்தாவர சொத்து. நம்மிட சொருவத்துக்குள்ள (T. A. S. iii, 216). |
சொருவா | coruvā n. Gruel; கஞ்சி. (அக. நி.) |
சொரூபவித்து | corūpa-vittu n. <>svarūpavid. One who has attained self-realisation; தன்னியல்பினை யுணர்ந்தவன். சொரூபவித்தான மேலோர் சுபாவமே யாகுமன்றோ (விவேகசூடா. 43). |
சொல்லழிம்பு | col-l-aḷimpu n. <>சொல்+. Obscene word; இடக்கர்ச்சொல். அவன் சொல்லழிம்பு மகாமோசம். Colloq. |
சொல்லறிபுள் | col-l-aṟi-puḷ n. <>id.+அறி-+. 1. Parrot; கிளி. (யாழ். அக.) 2. Myna; |
சொல்லாடு - தல் | col-l-āṭu- v. intr. <>id.+. To be current in colloquial usage; பேச்சில் வழங்குதல். இப்படி ஒன்று சொல்லாடுகின்றது. Tj. |
சொல்லெடுப்பு | col-l-eṭuppu n. <>id.+. Emphasis; அழுத்தமாகச் சொல்லுகை. Pond. |
சொல்வல்லபம் | col-vallapam n. <>id.+. Power of speech, eloquence; பேச்சுவன்மை. (W.) |
சொல்வார்த்தை | col-vārttai n. <>id.+. (W.) 1. Admonition; புத்திமதி. 2. False accusation; |
சொலிதை | colitai n. <>jvalitā Brilliance; பிரகாசம். சொலிதை யுற்றிடும் விவேகர் (பாடு. 28, அடியவர்). |
சொலிப்பு | colippu n. <>சொலி-. Shining, glittering; பிரகாசம். (W.) |
சொற்கட்டு | coṟ-kaṭṭu n. <>சொல்+. Falsehood; fib; பொய். Loc. |
சொற்கலகம் | coṟ-kalakam n. <>id.+. Controversy; வாக்குவாதம். (W.) |
சொற்செல்(லு) - தல் | coṟ-cel- v. intr. <>id.+. To command obedience; அதிகாரமுடையவனாதல். எனக்கு அடைத்த விஷயத்தில் சொற்செல்லாதாகி லன்றோ எனக்குக் குறையாவது (ஈடு, 10, 2, 1). |
சொற்சேர்க்கை | coṟ-cērkkai n. <>id.+. Dictionary; அகராதி. Pond. |
சொற்பாடு | coṟ-pāṭu n. <>id.+படு-. Fame; புகழ். சூலத்தனிலிட்ட சொற்பாடும் (சொக்க. உலா, 259). |
சொன்மலைவு | coṉ-malaivu n. <>id.+. Self-contradictory statement; முன்பின் விரோதமாகக் கூறுகை. சொல்லலன் யானெனச் சொல்லுவையாயினுஞ் சொன்மலைவாம் (நீலகேசி, 384). |
சொஸ்தி | costi n. <>Persn. susti. Nothing; வெறுமை. சொத்தையெல்லாம் சொஸ்தியாக்கி விட்டான். |
சோக்கதார் | cōkka-tār n. <>Hind. caukī+. Chowkidar; சௌக்கிதார். சோக்கதார் கடிகை மின்ன (பிரதாப. விலா. 2). |
சோகசாவேரி | cōka-cāvēri n. perh. சோகம்+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 55.) |
சோகிதன் | cōkitaṉ n. <>šōkita. One who is sorrowful; துக்கமுற்றவன். (பாரதவெண்.28, உரை.) |
சோசியார்திருவடி | cōciyār-tiruvaṭi n. An officer of the king; அரசாங்க உத்தியோகஸ்தருளொருவகையான். (S. I. I. V, 339.) |
சோட்டா | cōṭṭā adj. <>Hind. chōṭā. Colloq. 1. Light; இலேசான. 2. Little, small; |
சோட்டாப்பையன் | cōṭṭā-p-paiyaṉ n. <>சோட்டா+. Boy-attender; ஊழியச் சிறுவன். Mod. |
சோட்டாஹஸ்ரி | cōṭṭa-hasri n. <>id.+ Arab. hāzirī. Light refreshment; chota hazari; சிற்றுணவு. Mod. |
சோட்டையன் | cōṭṭaiyaṉ n. perh. சொத்தை. Useless fellow; பயனற்ற ஆள். Tinn. |