Word |
English & Tamil Meaning |
---|---|
தகணிதம் | takaṇitam n. perh. dahana. cf. தகணை. Oxide of metals; உலோக மணல். (விவ. ரசா. 6.) |
தகரம் | takaram n. <>dahara. Young of an animal; விலங்கின் பிள்ளை. (யாழ். அக.) |
தகவன் | takavaṉ n. <>தகவு. Worthy man; தகுதியுடையவன். தகவா தகவல்லது செய்தனையே (சீவக. 1382). |
தகன் | takaṉ n. <>dahana. (யாழ். அக.) 1. Fire; தீ. 2. Pūrāṉ, a centipede; |
தகனகரம் | takaṉa-karam n. <>id.+kara. Oxygen; பிராணவாயு. (விவ. ரசா. 5.) |
தகனோபலம் | takaṉōpalam n. <>dahanō-pala. Sun-stone; சூரியகாந்தக்கல். (யாழ். அக.) |
தகுணி | tatuṇi n. cf. தகுணிச்சம். A kind of drum; வாச்சியவகை. சங்கம் பொற்றாளம் தகுணி துடிபடகம் (சிவக். பிரபந். தஞ்சைப்பெரு. 51). |
தங்கக்கம்பி | taṅka-k-kampi n. <>தங்கம்+. Person of amiable character; நல்ல குணமுடையவ-ன்-ள். தம்பிமேலே சங்கையு மன்புள்ளவன் தங்கக்கம்பி (பெண்மதிமாலை, பக். 6). |
தங்கப்பட்டை | taṅka-p-paṭṭai n. <>தங்கு-+. Strap for the saddle; சேணங் கட்டுங் கச்சு. (யாழ். அக.) |
தங்கப்பூவிராகன் | taṅka-p-pū-virākaṉ n. <>தங்கம்+பூ+. A kind of gold mohur; பொன்னாணயவகை. (யாழ். அக.) |
தங்கரளி | taṅkaraḷi n. <>id.+அரளி. cf. தங்கலரி. Common yellow trumpet-flowered tree; நாகசெண்பகம். (B.) |
தங்கி | taṅki n. <>தங்கு-. Support, stay; ஆதாரமானது. Pond. |
தச்சதுலாம் | taccatulām n. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. iv, 79.) |
தசமம் | tacamam n. <>dašama. One-tenth part; பத்திலொன்று. (யாழ். அக.) |
தசராத்திரஞாதி | taca-rāttira-āti n. <>தசம்+ராத்திரம்+. Agnatic relations within the 7th degree, as persons for whom pollution for 10 days is ordained on occasions of birth and death; பத்துநாள் தீட்டுத் காத்தற்குரிய ஏழுதலை முறைக்குட்பட்ட தாயாதி. Brah. |
தசாதரு | tacā-taru n. perh. தசம்+. Ten marks of horses; குதிரைச் சுழிகள் பத்து. (அசுவ. 17.) |
தசிரம் | taciram n. cf. dasra. Drizzling; மழைத்தூறல். (யாழ். அக.) |
தஞ்ஞன் | taaṉ n. <>dakṣa. Wise man; அறிஞன். (யாழ். அக.) |
தட்சணநட்சத்திரராசி | taṭcaṇa-naṭcattira-rāci n. <>தட்சிணம்+நட்சத்திரம்+. The southern constellations; இராசி மண்டல நட்சத்திரங்களுக்குத் தென்பாலுள்ள நட்சத்திரத் தொகுதி. (M. Navi, 109.) |
தட்டஞ்சுற்று - தல் | taṭṭa-cuṟṟu- v. intr. <>தட்டம்+. To go round the deity in a temple with a lighted salver in hand, during the evening service; திருவந்திக்காப்பிற் கடவுளைத் தீபத் தட்டுடன் வலம்வருதல். Loc. |
தட்டடுவு | taṭṭaṭuvu n. A Tax; வரிவகை. (T. A. S. iii, 216.) |
தட்டழி - தல் | taṭṭaḻi- v. intr. <>தட்டு+. To deteriorate; சீர்கெடுதல். சாப்பாடு மெல்ல மெல்லத் தட்டழிந்து (பஞ்ச. திருமுக. 274). |
தட்டாரநாயகன் | taṭṭāra-nāyakaṉ n. <>தட்டான்+. An ancient coin; பழைய நாணய வகை. (சரவண. பணவிடு. 58.) |
தட்டாரப்பொட்டு | taṭṭāra-p-poṭṭu n. <>id.+. Ostentation, show; வெளிவேஷம். (யாழ். அக.) |
தட்டான் | taṭṭāṉ n. cf. தட்டான்கொட்டோசை. Common snake-gourd; புடோல். (யாழ். அக.) |
தட்டானுப்பி | taṭṭāṉuppi n. A kind of creeper; செடிவகை. (W.) |
தட்டுக்கடுதாசி | taṭṭu-k-kaṭutāci n. <>தட்டு+. Single sheet of paper; தனிக்காகிதம். Pond. |
தட்டுக்குதிரை | taṭṭu-k-kutirai n. <>id.+. Pony; குதிரைவகை. Loc. |
தட்டுடை | taṭṭuṭai n. <>id.+. Cloth worn round the loins, without passing it between the legs; தட்டாடை. வேறு மடியொன்றைத் தட்டுடையாக உடுத்திக்கொண்டு (மீனாட். சரித். ii, 152). |
தட்டுப்புழுகு | taṭṭu-p-puḻuku n. <>id.+. Secretion from the gland in the anal pouch of the civet-cat; புனுகுச்சட்டம். தட்டுப்புழுகுஞ் சாத்தி (S. I. I. viii, 186). |
தட்டுமாற்று | taṭṭu-māṟṟu n. <>id.+. Stratagem; தந்திரம். (W.) |
தட்டொலி | taṭṭoli n. An ancient tax; வரிவகை. (S. I. I. ii, 114.) |