Word |
English & Tamil Meaning |
---|---|
தண்டெடுப்பார் | tantetuppār n. <>தண்டு+எடு-. Palanquin bearers; பல்லக்குச் சுமப்பவர். (M. E. R. 570 of 26.) |
தண்டேசுரப்பெருவிலை | taṇṭēcura-p-peruvilai n. <>தண்டேசுரன்+. Price fixed by the temple authorities; கோயிலதிகாரின் தீர்மானிக்கும் விலை. (S. I. I. iv, 129.) |
தண்டைச்சுறவு | taṇṭai-c-cuṟavu n. perh. தண்டை+. A kind of fish; மீன்வகை. வெள்ளிறால் தண்டைச்சுறவு. |
தண்டைப்பூடு | taṇṭai-p-pūṭu n. perh. id.+. A parasitic plant growing on walls; சுவரொட்டி. (தெய்வச். 406.) |
தண்ணாயகர்மகமை | taṇṇāyakar-makamai n. <>தண்டநாயகர்+. A tax of contribution payable to the military commander; இராணுவவரிவகை. (M. E. R. 510 of 1921.) |
தண்ணிமை | taṇṇimai n. <>தண்-மை. Inferiority; தாழ்வு. கால்மாற்று தண்ணியபொன் (S. I. I. ii, 22). |
தண்ணீர்க்கொப்பு | taṇṇīr-k-koppu n. <>தண்ணீர்+. A water-vessel used by Buddhists; பௌத்தர் கைக்கொள்ளும் ஒருவகைப் பாத்திரம். (நீலகேசி, 250, உரை.) |
தண்ணீர்ப்பட்டி | taṇṇīr-p-paṭṭi n. <>id.+. Gift for providing drinking water; தண்ணீர்ப் பந்தலறத்துக்குவிட்ட நிலம். (S. I. I. iii, 365.) |
தண்ணீர்ப்பாடம் | taṇṇīr-p-pāṭam n. <>id.+. Anything well learnt, as a lesson or science; நன்றாக மனப்பாடமானது. Colloq. |
தண்ணீர்ப்பட்டபாடு | taṇṇīr-paṭṭa-pāṭu n. <>id.+படு-+. That which can be easily done or performed; easy work; எளிதாகச் செய்ய வல்லது. செய்யுளியற்றுவது இவர்க்குத் தண்ணீர்பட்டபாடு (மீனாட். சரித். ii, 278). |
தண்ணீர்விடு - தல் | taṇṇīr-viṭu- v. intr. <>id.+. To become stale or putrid; நீர் கசிந்து பண்டங் கெடுதல். சாதம் தண்ணீர்விட்டுப் போயிற்று. (W.) |
தண்பகம் | taṇpakam n. A kind of tree; ஒருவகை மரம். சண்பகந் தண்பகம் பாடலம் (மேருமந். 585). |
தணி - த்தல் | taṇi- 11 v. tr. <>தண்-மை. To bear; பொறுத்தல். மின்னு . . . . துன்னுவாட்டந் தணித்தலின் (சீவக. 867). |
தணிமரம் | taṇi-maram n. prob. தணி-+. Lever beam for starting a temple car; தேர்நெம்பு தடி. (ஈடு, 1, 4, 6, ஜீ. அரும்.) |
தத்தரம் | tattaram n. perh. tatara. A mode of coition; உபரித் தொழில்வகை. (தெய்வச். விறலி விடு. 256.) |
தத்தளங்கெனல் | tattaḷaṅkeṉal n. Onom. expr. signifying drum-beat; மத்தள வொலிக் குறிப்பு. தத்தளங்கென்றே பரதஞ் சாதிப்ப (கடம்ப. உலா, 107). |
தத்தாங்காரம் | tattāṅkāram n. prob. dagdha+aṅgāraka. A hell, one of mānarakam; மாநரகங்களு ளொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 203.) |
தத்துமடை | tattu-maṭai n. <>தத்து-+. Side-course in a water channel; நீர்வாய்க்காலின் பக்கத்து மடை. (W.) |
தத்துவசம்பிரதம் | tattuva-campiratam n. <>தத்துவம்+. Magic art by which one of the five elements is made to appear from another; ஒரு பூதத்தில் வேறொரு பூதந் தோற்றுவிக்கும் மகேந்திர சாலவித்தை. (சௌந்தரிய. ஆனந். 30, உரை.) |
தத்துவதரிசனம் | tattuva-taricaṉam n. <>id.+. (šaiva.) A spiritual experience of the soul, one of taca-kāriyam, q.v.; தசகாரியத்தொன்று. (சிவப். கட்.) |
தத்துவம் | tattuvam n. <>tat+tva. Soul; ஆன்மா. (தத்துவப். 8, உரை.) |
தத்துவான்மா | tattuvāṉmā n. <>tattva+. State of the soul when it is associated with the subtle body; சூக்குமதேகத்தைப்பற்றி நிற்கும் ஆன்மா. (சி. போ. பா. 6, 2, பக். 317.) |
ததுமல் | tatumal n. prob. ததும்பு-. (யாழ். அக.) 1. Confusion; குழப்படி. 2. Crowd; |
ததுளன் | tatuḷaṉ n. (யாழ். அக.) 1. Youth; இளைஞன். 2.Wind; |
தந்தக்குறி | tanta-k-kuṟi n. <>தந்தம்+. (Erot.) Marks made by the teeth of the lover on the limbs of his beloved; சம்போகக்காலத்திற் பல்லால் உண்டான அடையாளம். (கொக்கோ.) |
தந்ததாளி | tanta-tāḷi n. <>id.+. A kind of tooth-ache; பல்நோய்வகை. (பரராச. i, 218.) |
தந்தபுற்பம் | tanta-puṟpam n. <>id.+. A kind of tooth-ache; பல்நோய்வகை. (பரராச. i, 218.) |
தந்தவேட்டம் | tanta-vēṭṭam n. <>dantavēṣṭa. The gums; பல்ல¦று. (யாழ். அக.) |
தந்திப்படு - தல் | tantippaṭu- 6 v. intr. To be irritated; எரிச்சற்படுதல். (யாழ். அக.) |