Word |
English & Tamil Meaning |
---|---|
தயிலி | tayili n. <>U. thailī. Purse, pouch; பணப்பை. ரூபாயை . . . தயிலியில் போட்டுக் கட்டி (P. T. L. 176). |
தயினாத்து | tayiṉāttu n. <>Arab. taayyunāt. 1. Appointment; நியமனம். 2. Attendance; |
தர்க்கம் | tarkkam n. <>tarka. Duet, song in the form of a dialogue, sung alternately by two characters in a play; வினாவிடையாக நாடகவரங்கிற் பாடும் பாடல். Colloq. |
தர்தூது | tartūtu n. <>Arab. taraddud. Exertion, endeavour, contrivance; முயற்சி. அதற்கு வேண்டிய தர்தூது செய்யச் சொல்லியும் (P. T. L. 180). |
தர்ப்பகன் | tarppakaṉ n. perh. kandarpa. God of Love; மன்மதன். (R.) |
தர்பாறு | tarpāṟu n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 104.) |
தர்மபத்தர் | tarma-pattar n. <>dharma+. Officer in charge of the administration of charities; தருமவிசாரணை செய்வோர். (T. A. S. v, 150.) |
தர்மவதி | tarmavati n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களூள் ஒன்று. (சங். சந்.) |
தர்மிஷ்டி | tarmiṣṭi n. <>dharmiṣṭha. Charitable person; தருமவான். உலகத்திலே நல்ல தர்மிஷ்டி யனைவோர்க ளுண்டு (அருணா. பு. பக். 632). |
தர்வில்லா | tarvillā adv. <>Persn. dar-in-wilā. In this connection; இதுசம்பந்தமாய். (P. T. L.) |
தர்ஜி - த்தல் | tarji- 11 v. tr. <>tarj. To censure, blame; to deride; இகழ்தல். சகலஜனங்களும் தர்ஜித்து அவனது வசனங் கொண்டிலர் (நீலகேசி, 182, உரை.) |
தரண் | taraṇ n. Pure gold; சுத்தமான தங்கம். தரணென்று நன்றென்றாள் (நீலகேசி, 284). |
தரணியன் | taraṇipaṉ n. <>dharaṇipa. Sun; சூரியன். (சாதகசிந். 27.) |
தரதமவிபாகம் | tara-tama-vipākam n. <>tara+tama+vi-bhāga. Comparison; classification as belonging to comparative and superlative degrees; உயர்ந்தது அதனினும் உயர்ந்தது என்னும் பாகுபாடு. தரதமவிபாகம் பாராதேயிருக்கைக்கு அடி என்? (ஈடு, 1, 6, 1). |
தரமிலிநிலம் | taram-ili-nilam; n. <>தரம்+ இல் (neg.)+. Unclassified land; தீர்வைத்தரம் ஏற்படாத நிலம். (S. I. I. viii, 30.) |
தரவாடு | taravāṭu n. <>M. tarawād. Matriarchal family; மருமக்கட்டாயக் குடும்பம். Nā. |
தரவிடுநெல் | taraviṭu-nel n. <>தரவு+இடு-+. Paddy measured out in lieu of wages; கூலியாக அளக்கும் நெல். ஒரு கூறு நெல்லு நிமந்தக் காரருக்குத் தரவிடுநெல்லாக இறுக்கவும் (S. I. I. vii, 487). |
தரவுகொள்(ளு) - தல் | taravu-koḷ- v. intr. <>தரவு+. To take a receipt; ரசீதுபெறுதல். இவர் கையால் தரவுகொள்வோமாகவும் (S. I. I. v, 143). |
தரவுசாத்து | taravu-cāttu n. An officer in the Cōḻa administration; சோழராசாங்கத்து உத்யோகஸ்தருளொருவர். (M. E. R. 119 of 1916.) |
தராப்பு | tarāppu n. prob. Arab taraf. Accommodation ladder; கப்பலின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் ஏணி. (M. Navi. 174.) |
தரிசுதூறுவிடு - தல் | taricu-tūṟu-viṭu- v. tr. <>தரிசு+தூறு+. To allow to remain waste or uncultivated சாகுபடிசெய்யாமற் பாழாக விடுதல். புருஷார்த்தத்தில் எல்லை நிலத்தை தரிசுதூறு விடா தொழியப் ப்ராப்தம் (ரஹஸ்ய. 546). |
தரியிடு - தல் | tari-y-iṭu- v. tr. <>தரி-+. To establish securely; நிலைநிறுத்துதல். தொண்டர் குழாஞ் சற்றுமலையாமல் தரியிட்டான் (நெல்விடுதூது, 63). |
தரிஸாபள்ளி | tarisā-paḷḷi n. perh. Arab. darjā+. Syrian Christian church; கிறிஸ்தவக் கோயில். (T. A. S. ii, 73, 80.) |
தருணசுரம் | taruṇa-curam n. <>taruṇa+. A fever of nine days' duration ஒன்பதுநாள் காயுஞ் சுரவகை. (ஜீவரட். 30.) |
தருமப்பிணம் | taruma-p-piṇam n. <>தருமம்+. Corpse buried or cremated at the expense of the public; ஊராராற் சுடப்படும் அனாதைப்பிணம். (W.) |
தருமவைத்தியசாலை | taruma-vaittiya-cālai n. <>id.+. Hospital, free dispensary; நோயாளிகளுக்குப் பொருள் வாங்காது மருத்துவஞ் செய்யுமிடம். Pond. |
தரைச்சேனை | tarai-c-cēṉai n. <>தரை+. Army, land-force, dist. fr. kaṭaṟ-cēṉai; தரையில் போர் செய்யவல்ல படை. (M. Navi. 26.) |
தரைமட்டம் | tarai-maṭṭam n. <>id.+. Ground level; நிலமட்டம். (W.) |
தல்லால் | tallāl n. <>Arab. dallāl. Broker, intermediary; தரகுக்காரன். Loc. |