Word |
English & Tamil Meaning |
---|---|
தலபாடம் | tala-pāṭam n. <>தலை+. That which is thoroughly learnt, as a lesson; கடை தலைப்பாடம். Tinn. |
தலம் | talam n. <>dala. Petal; இதழ். (திவ். திருச்சந்த. 25, வ்யா. பக். 74.) |
தலை | talai n. prob. sthala. Place; இடம் நனந்தலை நல்லெயில் (புறநா. 15). |
தலைக்கயிறு | talai-k-kayiṟu n. <>தலை+. Reins of a bullock; மாட்டின் மூக்குச் கயிற்றிற் கட்டப்பட்டுக் கையிற்பிடிக்குங் கயிறு. Colloq. |
தலைக்காநாள் | talaikkā-nāḷ n. <>id.+ஆ-+. The previous day; முந்தினநாள். Nā. |
தலைக்கீடு | talai-k-k-īṭu n. <>id.+. Cause; காரணம். இறைதரியாரெனு நிலைமை தலைக்கீடா (பெரியபு. திருஞான. 61). |
தலைக்குடை | talai-k-kuṭai n. <>id.+. Cover of plaited palmyra leaves used as a protection for the head against rain; தலையில் வைத்துக்கொள்ளும் ஓலைக்குடை. Nā. |
தலைக்குயர்ந்தபிள்ளை | talaikkuyarnta-piḷḷai n. <>id.+உயர்-+. One who has attained age; வயது வந்தவன். Loc. |
தலைக்குழம்பு | talai-k-kuḻampu n. <>id.+. A medicinal oil used for applying on the head only; தலையில் மாத்திரம் தேய்த்துக்கொள்ள உதவும் மருந்தெண்ணெய். Nā. |
தலைக்கேறு - தல் | talai-k-k-ēṟu- v. intr. <>id.+. To grow in intensity; முதிர்தல். அவனுக்குக் கர்வம் தலைக்கேறி யிருக்கிறது. |
தலைக்கோடி | talai-k-kōṭi n. <>id.+. New clothes presented to the bridegroom on the day of talaiyōṇam; மணமகனுக்குத் தலையோணத்தன்று கொடுக்கும் புதுவேட்டி. Nā. |
தலைச்சம்மாடு | talai-c-cammāṭu n. <>id.+ சும்மாடு. Responsibility; பொறுப்பு. இப் பொன்னுக்குத் தலைச்சம்மாடாய் ஒரு நொந்தாவிளக்கெரிப்போம் (S. I. I. v, 238). |
தலைச்சி | talaicci n. <>தலை. Eldest daughter, first-born daughter; தலைமூத்த மகள். Pond. |
தலைச்சுழி | talai-c-cuḻi n. <>id.+. Fate; தலையெழுத்து. Loc. |
தலைசுருளி | talai-curuḷi n. <>id.+. A herb; பூடுவகை. (யாழ். அக.) |
தலைத்துலுக்கம் | talai-t-tulukkam n. <>id.+துலக்கு-. Nodding one's head, as in agreement; தலையாட்டம். தலைத்துலுக்கங்கொண்டு தன் விசுவாசம்போல் (சரவண. பணவிடு. 115). |
தலைதப்பு - தல் | talai-tappu- v. intr. <>id.+. To escape death; உயிர்பிழைத்தல். தாசிவீடு வந்தவர்கள் தலைதப்பிப்போகிறதோ (கோவ. க. 42). |
தலைதொட்டபிதா | talai-toṭṭa-pitā n. <>id.+தொடு-+. Godfather; ஞானபிதா. (யாழ். அக.) |
தலைநின்றொழுகு - தல் | talai-niṉṟoḻuku- v. intr. <>id.+நில்-+. To serve in an intimate capacity; தலைமையாக நின்று பணிசெய்தல். தலை நின்றொழுகும் பரத்தையர் (தொல். பொ. 147, உரை). |
தலைப்பற்று | talai-p-paṟṟu n. cf. தளப்பற்று. Large leaf of the talipot tree; தாளிப்பனையின் ஓலை. (J.) |
தலைப்பிறை | talai-p-piṟai n. <>தலை+. The piratamai titi of the bright fortnight; சுக்கிலபக்ஷத்துப் பிரதமை. (S. I. I. v, 497.) |
தலைப்பு | talaippu n. <>id. Source; origin, as of a river; உற்பத்தித்தானம். கங்கைக்குத் தலைப்பாகிய இமவானில். |
தலைப்பெட்டி | talai-p-peṭṭi n. <>id.+. A kind of ola covering for the head; தலையிற் கவிழ்த்துக்கொள்ளும் ஓலையாலான பெட்டி. (யாழ். அக.) |
தலைப்பேழை | talai-p-pēḻai n. <>id.+ prob. புழை. Head-sluice; வாய்க்காலின் தலைப்பு மதகு. (S. I. I. i, 151.) |
தலைபரி - தல் | talai-pari- v. intr. <>id.+. To go beyond the limit; எல்லைகடத்தல். (பு. வெ. 12, 8, கொளு, ஆண்பாற்.) |
தலைமட்டம் | talai-maṭṭam n. <>id.+. Top level; மேல்மட்டம். Colloq. |
தலைமடி - தல் | talai-maṭi- v. intr. <>id.+. To wane; to lose intensity; குறைதல். ஆசை தலை மடிந்ததுமல்ல (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 31). |
தலைமயங்கு - தல் | talai-mayaṅku- v. intr. <>id.+. To go astray, as a deer from its herd; பிரிதல். இனந் தலைமயங்கி (புறநா. 157, 9). |
தலைமூத்த | talai-mūtta adj. <>id.+மூ-. Eldest-born; முதலாவதாகப் பிறந்த. |
தலையகம் | talai-y-akam n. <>id.+அக்கம். Price of paddy prevailing immediately after the harvest; நெல் அறுவடையானவுடன் விற்கும் விலை. நீக்கிநின்ற நெல்லுக்குத் தலையகப்படி காசு இடவும் (S. I. I. vii, 499). |
தலையங்கம் | talai-y-aṅkam n. <>id.+. Mod. 1. Leader, leading article; பத்திரிகையின் முகப்பில் பத்திராதிபர் எழுதுதங் கட்டுரை. 2. Headline; |