Word |
English & Tamil Meaning |
---|---|
தலையடிநெல் | talai-y-aṭi-nel n. <>id.+அடி-+. Paddy obtained at the first threshing of sheaves, considered superior; நெற்கதிரின் முதலடிநெல். Tinn. |
தலையரை | talai-y-arai n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. vi, 155.) |
தலையற்றநாள் | talai-y-aṟṟa-nāḷ n. <>id.+அறு-+. The nakṣatras, puṉarpūcam, vicākam, pūraṭṭāti; புனர்பூசம் விசாகம் பூரட்டாதி என்ற நட்சத்திரங்கள். (சோதிடகிரக. 40.) |
தலையாடை | talai-y-āṭai n. <>id.+. Top portion of the stem of plants, like sugar-canes, etc.; கரும்பு முதலியவற்றின் நுனிப்பாகம். எட்டுக் கண்ணான கரும்பிலே வேர்ப்பற்றுந் தலையாடையும் கழிந்தால் (ரஹஸ்ய. 820). |
தலையீடு | talai-y-īṭu n. <>id.+. 1. That which is nearest or first; தலைப்பிலிருப்பது. ஆற்றங்கரையில் தலையீட்டுக்கொல்லையில் (S. I. I. vii, 18). 2. First delivery or yeaning; first crop; 3. (Arch.) Coping; |
தலையெடு - த்தல் | talai-y-eṭu- v. intr. <>id.+. Colloq. 1. To begin one's life; சீவனகாரிய முதலியன தொடங்குதல். பிள்ளை இப்படித் தலையெடுத்துவிட்டான். 2. To crop one's head; 3. To shave one's head; |
தலையெழுத்து | talai-y-eḻuttu n. <>id.+. (Gram.) Vowels, as the primary letters; உயிரெழுத்து. (பேரகத். 8, உரை.) |
தலையோணம் | talai-y-ōṇam n. <>id.+. The first ōṇam celebration after one's marriage; கல்யாணமானபிறகு வரும் முதல் ஓணம். Nā. |
தலைவடி | talai-vaṭi n. <>id.+. Alcohol; சாராயச் சத்து. Pond. |
தலைவரம்பு | talai-varampu n. <>id.+. Acme, highest point; மேலான எல்லை. முன்பெருமைக்குத் தலைவரம்பாகிய பெருமை (நீலகேசி, 180, உரை). |
தவ்வியம் | tavviyam n. <>dravya. Substance; திரவியம். தவ்வியந் தேசமே காலபாவமென்று (மேருமந். 660). |
தவக்காய் | tavakkāy n. cf. தவக்கை. Frog; தவளை. Tinn. |
தவக்கிடை | tava-k-kiṭai n. <>தவம்+. Observing a fast; பட்டினிகிடக்கை. Nā. |
தவச்சட்டை | tava-c-caṭṭai n. <>id.+. Sack-cloth; முருட்டுத் துணியாலான போர்வை. Pond. |
தவட்டை | tavaṭṭai n. Kamela dye; கபிலப்பொடி. (L.) |
தவணைக்காடி | tavaṇai-k-kāṭi n. prob. தவணை+. A kind of tax; வரிவகை. தவணைக்காடியென்றும் (S. I. I. v, 383). |
தவணைவட்டி | tavaṇai-vaṭṭi n. <>id.+. Interest on fixed deposit; வரையறுக்கப்பட்ட கெடுவுக்குள் திரும்பக் கொடுக்கும் பணத்துக்குரிய வட்டி. Loc. |
தவளாம்பரி | tavaḷāmpari n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களூ ளொன்று.ங். சந். சந். 47.) |
தவளைக்கடி | tavaṇai-k-kaṭi n. <>தவளை+. A kind of eruption; சொறிப்புண்வகை. (தஞ். சர. iii. 159.) |
தவளைவாய் | tavaḷai-vāy n. <>id.+. An ornament; ஆபரணவகை. (S. I. I. v, 212.) |
தவளைவெட்டு - தல் | tavaḷai-veṭṭu- v. intr. <>id.+. To strike at the muscles of the arm so that they gather up into a protuberance; கைமுண்டாவில் சதை திரளூம்படி குத்துதல். Loc. |
தவனச்செட்டி | tavaṉa-c-ceṭṭi n. A sect of ceṭṭi caste; செட்டிவகையினர். (S. I. I. viii, 98.) |
தவாங்கம் | tavāṅkam n. <>tāpāṅga. Hermit's garb; தவவேடம். (மகாராஜாதுறவு, 66.) |
தவாளி - த்தல் | tavāḷi- 11 v. tr. To be unable to manage; சமாளிக்க இயலாது தத்தளித்தல். Pond. |
தவிட்டுச்சோளம் | taviṭṭu-c-cōḷam n. <>தவிடு+. A kind of maize; சோளவகை. (விவசா. 3.) |
தவிட்டுமச்சி | taviṭṭumacci n. prob. id.+ ஊமச்சி. A plant; செடிவகை. (விவசா. 6.) |
தவிட்டுமுருங்கை | taviṭṭu-muruṅkai n. prob. id.+. cf. தவசுமுருங்கை. A species of horse-radish tree; முருங்கைவகை. Nā. |
தவிட்டுமேனி | taviṭṭu-mēṉi n. <>id.+. Carbonate of soda; சவட்டுப்பு. (யாழ். அக.) |
தவிட்டுவிலை | taviṭṭu-vilai n. <>id.+. Low, nominal price; மிகக்குறைவான விலை. (யாழ். அக.) |
தவிப்பில்லாக்குருவி | tavippillā-k-kuruvi n. <>தவி-+இல்+ஆ-+. Swallow; தரையில்லாக் குருவி. Pond. |
தழுதணை | taḻutaṇai n. Lichen; கற்பாசி. Pond. |