Word |
English & Tamil Meaning |
---|---|
தள்ளிவிடு - தல் | taḷḷi-viṭu- v. tr. <>தள்ளு-+. To evade, as responsibility; பொறுப்பு முதலியவற்றை விலக்குதல். Pond. |
தளபஞ்சி | taḷapaci n. <>dalabhajin. Horse that, except for a white spot in the forehead, is of a single colour other than white; நெற்றியில் வெள்ளைப் புள்ளியையும் வெண்மையல்லாத வேறு ஒரேநிறத்தினையுமுடைய குதிரை. (சுக்கிர நீதி, 317.) |
தளபாடம் | taḷapāṭam n. [M. taḷavāṭam.] Army; சேனை. திருவடிராச்சியத்துக்கு மன்னரையும் தளபாடமும் அனுப்பியருளி (S. I. I. vii, 21). |
தளம் | taḷam n. <>taḷa. 1. Basis; foundation; அடிப்படை. நாராயணாதி சப்தங்களிலே விவக்ஷிதமான ஸம்பந்தத்தை ஸித்தாந்தத்துக்குத் தளமாக்கி (ரஹஸ்ய. 166). 2. Chunam; |
தளாபம் | taḷāpam n. <>dalābha. A kid of gem; இரத்தினவகையு ளொன்று. (சுக்கிரநீதி, 186.) |
தளிகைச்சிறப்பு | taḷikai-c-ciṟappu n. <>தளிகை+. Food offering; நைவேதனம். (S. I. I. iv, 103.) |
தளும்பு - தல் | taḷumpu- 5 v. intr. cf. தளம்பு-. To be perturbed; to be distressed; மனங்கலங்குதல். அநுகூல ஜனமானது தளும்பிற்று என்கிறாள் (திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713). |
தளையாள் | taḷai-y-āḷ n. <>தலை+. Bondman, slave; அடிமை. தனக்கொன்றும் பயனின்றித் தளையாளென்றான் (நீலகேசி, 185). |
தற்குறிமாட்டெறி - தல் | taṟ-kuṟi-māṭ-ṭeṟi- v. intr. <>தற்குறி+மாட்டு+. To witness the execution of a document by an illiterate person stating that the mark is that of the executant; பெயரெழுதத் தெரியாதவன் கைக்கீறல் இது என்று எழுதிச் சாட்சிபோடுதல். கூத்தன் தற்குறிக்கு தற்குறிமாட்டெறிந்தேன் திருவேங்கடமுடையான் (S. I. I. v, 152). |
தற்சிறப்புப்பாயிரம் | taṟ-ciṟappu-p-pāyiram n. <>தன்+சிறப்பு+. (Gram.) Author's own introduction consisting of verses of invocation and Verses containing a statement of the subject-matter of his work; தெய்வவணக்கமும் செயப்படுபொருளு முரைத்து ஆசிரியர் நூன்முகப்பிற் கூறும் பாயிரம். (காரிகை, 1, உரை.) |
தற்பிரியன் | taṟ-piriyaṉ n. <>id.+. One who is given to self-adulation; தன்னைப் பெருமையாகப் பேசிக்கொள்பவன். Loc. |
தற்பெருமை | taṟ-perumai n. <>id.+. Self-praise, self-complacency; தற்புகழ்ச்சி. Loc. |
தறிவாய் | taṟi-vāy n. <>தறி-+. Lopped side; cut edge; வெட்டுவாய். (யாழ். அக.) |
தறுதம்பு | taṟutampu n. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. v, 374.) |
தறும்பன் | taṟumpaṉ n. cf. darpa. Proud person; கருவமுள்ளவன். (நீலகோசி, 282, உரை.) |
தன்காரியக்குட்டி | taṉ-kāriya-k-kuṭṭim n. <>தன்+காரியம்+. Extremely selfish person; தன்காரியத்திலேயே கண்ணாயிருப்பவன். Nā. |
தன்காலம் | taṉ-kālam n. prob. id.+. 1. Proper season or time; உரியபருவம். (யாழ். அக.) 2. Period when toddy is available in plenty; |
தன்பாசனம் | taṉ-pācaṉam n. <>id.+. Direct flow of water without baling; தானாகப் பாயும் நீர்ப்பாய்ச்சல். Tr. |
தன்மதாவளர் | taṉma-tāvaḷar n. <>தன்மம்+. See தன்மவாரியப்பெருமக்கள். (S. I. I. vii, 497.) . |
தன்மப்பலிசை | taṉma-p-palicai n. <>id.+. Equitable interest; நியாயவட்டி. (M. E. R. 506 of 1920.) |
தன்மவாணியர் | taṉma-vāṇiyar n. <>id.+. A sect of merchants; வணிகவகையினர். (S. I. I. viii, 64.) |
தன்மவாரியப்பெருமக்கள் | taṇma-vāriya-p-perumakkaḷ n. <>id.+. Members of the managing committee of a charitable endowment; அறநிலயங்களை மேற்பார்க்குஞ் சபையோர். (S. I. I.iii, 10.) |
தன்மையெழுத்து | taṉmai-y-eḻuttu n. perh. தன்மை+. (Gram.) A kind of letter; எழுத்துவகை. (யாப். வி. 536.) |
தன்வந்தரிமால் | taṉvantari-māl n. <>Dhanvantari+. Hospital; வைத்தியசாலை. அரமனைத் தன்வந்தரிமால் வைத்தியருள் (தஞ். சர. iii, 88). |
தன்னமை | taṉ-ṉ-amai n. <>தன்+அமை-. Kindred; சுற்றத்தார். தன்னமை பகையுஞ் சரி அயலத்தார் உறவுஞ் சரி. Tinn. |
தன்னரசுநாடு | taṉ-ṉ-aracu-nāṭu n. <>id.+அரசு+. Despotic state; ஒருவன் தன் இச்சைப் படி ஆளும் நாடு. இராவணாகாரமாகி . . . . தன்னரசு நாடு செய்திருக்கும் (தாயு. மௌன. 9). |
தன்னலம் | taṉṉalam n. <>id.+. Selfishness; சுயநலம். Colloq. |
தன்னிறமாக்கி | taṉṉiṟam-ākki n. <>id.+ நிறம்+. Gold; பொன். (யாழ். அக.) |