Word |
English & Tamil Meaning |
---|---|
தாட்புழு | tāṭ-puḻu, n. prob. தாள்+. A disease affecting paddy; நெற்பயிரிற் காணும் நோய்வகை. (நீலகேசி, 366, உரை.) |
தாடியிடு - தல் | tāṭi-y-iṭu-, v. tr. <>தாடி+. To attack; தாக்குதல். அருட்சேனை தாடியிடுஞ் சொக்கநாதா (சொக்க. வெண். 45). |
தாண்டகச்சதுரர் | tāṇṭaka-c-caturar, n. <>தாண்டகம்+. Tirunāvukkaracu-nāyaṉār; திருநாவுக்கரசுநாயனார். (பெரியவு. குங். 32.) |
தாண்டுவெட்டி | tāṇṭu-veṭṭi, n. <>தாண்டு-+. Forked post, used as a stile; ஆடுமாடுகள் புகாதபடி வழியில் நடப்பட்ட கவைக்கால். Loc. |
தாணையக்காரன் | tāṇaiya-k-kāraṉ, n. <>தாணையம்+. Bailiff's man; அமீனாச்சேவகன். Pond. |
தாணையச்சேவகன் | tāṇaiya-c-cēvakaṉ, n. <>id.+. See தாணையக்காரன். Pond. . |
தாதிகர்மம் | tātikarmam, n. Devouring a piece of thin wet cloth 15 cubits long and then pulling it out of one's mouth; 15 முழ நீளமுள்ள மெல்லிய துணியை நனைத்து விழுங்கிப் பின்வெளியிலெடுக்கை. (யோகஞானா. 33.) |
தாதிரி 1 | tātiri, n. <>dātr. Donor; கொடையாளி. (யாழ். அக.) |
தாதிரி 2 | tātiri, n. Singing contest in viṟ-pāṭṭu; விற்பாட்டிற் போட்டியிட்டுப் பாடுகை. Nā. |
தாதுமான் | tātumāṉ, n. <>dhātumān. Temple with 344 towers and 44 storeys; 344 சிகரங்களையும் 44 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) |
தாதுராகம் | tātu-rākam, n. <>தாது+. Red ochre; காவிக்கல். (கம்பரா. வரைக்காட். 44.) |
தாதுவர்த்தனி | tāṭu-varttaṉi, n. <>id.+. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந்.) |
தாதெழுத்து | tāteḻuttu, n. <>id.+. (Gram.) A kind of letter; எழுத்துவகை. (யாப். வி. 536.) |
தாமதி - த்தல் | tāmati-, 11 v. intr. <>தாமதம். To stay; தங்குதல். அந்த ஊரில் இரண்டுநாள் தாமதிப்பேன். Loc. |
தாய்பிள்ளை | tāy-piḷḷai, n. <>தாய்+. Relation; உறவின-ன்-ள். Tinn. |
தாயவலந்தீர்த்தான் | tāy-avalan-tīrttāṉ, n. <>id.+அவலம்+தீர்-. Garuda; கருடன். |
தாயனார் | tāyaṉār, n. Arivāṭṭāya-nāyaṉār; a canonized šaiva saint; அரிவாட்டாயநாயனார். (பெரியபு. அரிவாட். 5.) |
தார்குடிகள் | tār-kuṭikaḷ, n. perh. தார்+. Substantial tenants; பூஸ்திதியுள்ள குடிகள். (P. T. L.) |
தார்ச்சூடன் | tār-c-cūṭaṉ, n. <>தார்+. Naphthalene ball; கீலெண்ணெயிலிருந்து செய்யப்படுஞ் சூடன்போன்ற பண்டம். Mod. |
தார்மணி | tār-maṇi, n. <>id.+. Collar of tinklers for horse's neck; குதிரையின் கழுத்திலிடுங் கிண்கிணிமாலை. (யாழ். அக.) |
தாரன் | tāraṉ, part. <>dhāra. A termination indicating male owner; உடையவனைக் குறிக்குஞ் சொல். வார்சுதாரன். |
தாரா | tārā, n. <>Tārā. (Jaina) A Jaina Goddess; ஒரு ஜைன தேவதை. (நீலகேசி, 236, உரை.) |
தாரிபாரி | tāripāri, n. cf. Persn. darbār. Relative merit; தரம். தாரிபாரிகள் தெரிந்து சகல சம்மானஞ் செய்யும் (கனம் கிருஷ்ணையர், 117). |
தாலம் | tālam, n. <>tāla. A lineal measure of three hands; மூன்று பிடிகொண்ட நீட்டலளவு. (சுக்கிரநீதி, 197.) |
தாலி | tāli, n. <>தாளி. Palmyra palm; பனை. (திவ். பெரியாழ். 2, 6, 1, வ்யா. பக். 361.) |
தாலித்துக்கம் | tāli-t-tukkam, n. <>தாலி+. Mourning observed by a woman on her widowhood; கணவன் இறந்ததாலுண்டாந் துயரம். Loc. |
தாலிம்கானா | tālim-kāṉā, n. <>Arab. tālīm+. Fencing ground; சிலம்பம் பயிலும் இடம். (தட்சிண. இந். சரித்திரம். பக். 224.) |
தாலுப்பொதுச்செலவு | tālu-p-potu-c-celavu, n. perh. தாலுக்கா+. General expenditure of a public institution; பொதுஸ்தலத்தில் தர்மம் முதலாயவற்றிற்காகுஞ் செலவு. (சரவண. பணவிடு. 149.) |
தாவந்தம் | tāvantam, n. perh. tāpa-da. [T. dāvantamu.] Poverty, depressed condition; வறுமை. Loc. |
தாவளையம் | tāvaḷaiyam, n. prob. தாவள-. Jump; குதி. காளியன் சீறும்படி தாவளையத்திலே வாலைப்பற்றி இழுத்து (திவ். பெரியாழ். 2, 10, 3, வ்யா. பக். 490, 1). |
தாழ்சீலை | tāḻcīlai, n. cf. தாய்ச்சீலை. 1. Covering for the privities; கோவணம். Pond. 2. Lion-cloth; |