Word |
English & Tamil Meaning |
---|---|
திசையறிகருவி | ticai-y-aṟi-karuvi, n. <>திசை+அறி-+. Mariner's compass; திக்குகளைக் காட்டுங் கருவி. (M. Navi. 44.) |
திட்டப்பற்று | tiṭṭa-p-paṟṟu, n. <>திட்டம்+. Expenditure within the estimate; திட்டத்துக்குட்பட்ட செலவு. (சரவண. பணவிடு. 81.) |
திட்டிக்கிடாய் | tiṭṭi-k-kiṭāy, n. <>திட்டி+. Sheep presented to the zamindar by the villagers when he visits their village; ஜமீன்தார் கிராமத்தைச் சுற்றிப்பார்க்க வரும்போது கிராமத்தார் காணிக்கையாகச் செலுத்தும் ஆடு. Rd. |
திடிமம் | tiṭimam, n. cf. திண்டிமம். A kind of drum; பறைவகை. சீர்முழவம் பேரி திடிமமொலி யார்தக்கை (இலஞ்சி. முருகனுலா. 127). |
திடுக்கம் | tiṭukkam, n. perh. திடுக்கு. A disease; நோய்வகை. குறைப்பிணி திடுக்கம் (கடம்ப. பு. இல¦லா. 125). |
திடுக்கீடு | tiṭukkīṭu, n. <>id.+இடு-. Fright; terror; அச்சம். Pond. |
திடுகுமொட்டெனல் | tiṭuku-moṭṭeṉal, n. Onom. expr. of suddenness; திடீரெனற்குறிப்பு. திடுகுமொட்டெனக் குத்தி (தேவா. 918, 1). |
தித்தம் | tittam, n. <>dīpta. Effulgence; ஒளி. தித்த தவர் (மேருமந். 1097). |
தித்திவி - த்தல் | tittivi-, 11 v. tr. <>தீர்-. To repay, as loans; வாங்கிய கடன் முதலியவற்றைத் தீர்த்தல். வாங்கிய பொன் தித்திவிக்கும் வல்லமையும் (தெய்வச். விறலிவிடு. 81). |
திதலை | titalai, n. Golden streak; பொற்பிதிர்வு. திதலைத் திருவாசிச் சேவை (சொக்க. உலா, 63). |
திதன் | titaṉ, n. <>sthita. 1. One who is firm in mind; மனவுறுதியுடையவன். திதனாயெவருமறியாத பொருறைத் தெரிந்துகொண்டு (பகவற்கீதை, 2, 31). 2. That which is firm; |
திந்து | tintu, n. Ebony; கருங்காலி. Pond. |
திந்துகம் | tintukam, n. <>tinduka. A kind of tree; ஒருவகை மரம். (சுக்கிரநீதி, 228.) |
திபிதை | tipitai, n. prob. dvipadā. cf. திபதை. Distich, couplet; இரண்டடிக்கண்ணி. (ஸ்காந்தபு. கீர். பாயி. பக். 12.) |
திம் | tim, n. cf. தேம். Direction; திக்கு. (யாழ். அக.) |
திமிரம் | timiram, n. <>timira. Māyā; மாயை. திமிரக்கொடும்பிணியாற் றேகமெலிவானேனே (கதிரைமலை. காதல். 5). |
திமிலோகப்படு - தல் | timilōka-p-paṭu-, v. intr. <>துமிலம்+. To be performed with great eclat; தடபுடலாயிருத்தல். Loc. |
தியக்கோன் | tiyakkōṉ, n. Deacon; பூசைப்பரிசாரகன். Chr. |
தியக்கோனாடை | tiyakkōṉ-āṭai, n. <>தியக்கோன்+. Wide-sleeved coat of bishops, etc.; surplice; கிறிஸ்தவ குருமாரின் அங்கிவகை. Chr. |
தியாக்கர் | tiyākkar, n. See தியக்கோன். Pond. . |
தியாகமுத்திரை | tiyāka-muttirai, n. <>tyāga+.(šaiva.) A hand-pose; கைமுத்திரை வகை. (சைவா. வி. 20.) |
தியாத்துவம் | tiyāttuvam, n. prob. dhyā+. Contemplation, meditation; தியானம். (யாழ். அக.) |
தியானநானம் | tiyāṉa-nāṉam, n. <>dhyāna+. (šaiva.) Bathing in water, imagining it to be amirtam; நீரை அமுதமாகத் தியானித்து முழுகுகை. (தத்துவப். 51.) |
தியானயக்கியம் | tiyāṉa-yakkiyam, n. <>id.+. (šaiva.) One of paca-yākam; பஞ்சயாகத்து ளொன்று. (சி. சி. 8, 23, சிவாக்.) |
திரக்கிரசம் | tirakkiracam, n. prob. tiraskrta. Eyesore; கண்வலி. (யாழ். அக.) |
திரசர் | tiracar, n. <>E. Dresser; ஆசுபத்தரி வைத்தியருக்கு உதவிசெய்யும் வேலைக்காரன். Loc. |
திரட்டோசை | tiraṭṭōcai, n. <>திரட்டு-+. Bustle; உரப்பலோசை. (பிங்.) |
திரண்டவலகு | tiraṇṭa-v-alaku, n. <>திரள்-+. Blade of jack-plane; மட்டலகு. Loc. |
திரணை | tiraṇai, n. <>id. Mason's trowel for cornice work; எழுதக வேலைக்குதவுங் கொத்துக்கரண்டி. Loc. |
திரமம் | tiramam, n. <>Gk. drakme. An ancient Greek coin, used in India; பழைய கிரேக்க நாணயவகை. (T. A. S. iv, 30.) |
திரயாங்கநமஸ்காரம் | tirayāṅka-namas-kāram, n. <>tryāṅga+. Rendering obeisance by folding both hands over one's head; தலையிலே இரண்டு கைகளையுங் குவித்து வணங்குகை. (சிவாலயதரிசனவிதி, பக். 11.) |
திரவியப்பட்டை | tiraviya-p-paṭṭai, n. <>திரவியம்+. Bark of the lodhra tree; திருமஞ்சனப்பட்டை. Loc. |