Word |
English & Tamil Meaning |
---|---|
திரள | tiraḷa, adv. <>திரள்-+. Concisely, briefly; சங்கிரகமாக. ஸர்வார்த்தங்களையும் திரளச் சொல்லுகிற மந்த்ரமிறே (திவ். திருநெடுந். 4, வ்யா. பக். 37). |
திராகம் | tirākam, n. Throwing up and catching; உயர எறிந்து பிடிக்கை. (யாழ். அக.) |
திராசம் | tirācam, n. A flaw in rubies; மாணிக்கக்குற்றங்களு ளொன்று. (S. I. I. ii, 78.) |
திராசனிமுத்திரை | tirācaṉi-muttirai, n. (šaiva.) A hand-pose; கைமுத்திரைவகை. (செந். x, 425.) |
திராட்டிலேவிடு - தல் | tirāṭṭilē-viṭu-, v. tr. <>திராட்டு+. To leave in the lurch; திண்டாடவிடுதல். Colloq. |
திராட்டு | tirāṭṭu, n. <>E. trot. 1. Trot; குதிரைநடை வகை. Loc. 2. Difficult situation; |
திராணம் | tirāṇam, n. <>trāṇa. Sheath, cover; உறை. (யாழ். அக.) |
திராமரம் | tirāmaram, n. Coral tree; பவள மல்லிகை. (W.) |
திராவகநீர் | tirāvaka-nīr, n. <>திராவகம்+. See திராவகரசம். Pond. . |
திராவகரசம் | tirāvaka-racam, n. <>id.+. Elixir; காயகற்ப மருந்து. Pond. |
திரி | tiri, n. <>திரி-. 1. Small roll of cloth put into the pierced lobe of a child's ear for widening the aperture; காதுக்கிடுந் திரி. திரியை எரியாமே காதுக்கிடுவன் (திவ். பெரியாழ். 2, 3, 2). 2. cf. திரிகை. Grinding stone; |
திரிகம் | tirikam, n. <>trika. Joint of thighbone and the trunk; முதுகின் கீழ்ப்பக்கத்தோடு இரண்டு தொடை யெலும்புகளுஞ் சேர்ந்திருக்குமிடம். (சுக்கிரநீதி, 309.) |
திரிகி | tiriki, n. cf. திகிரி. Potter's wheel; குயவன் சக்கரம். (யாழ். அக.) |
திரிகுப்தி | tirikupti, n. <>tri-gupti.(Jaina.) Restraint of one's self in mind, word and deed; மனம் வாக்குக் காயமான மூன்றையுமடக்குகை. (மேருமந். 144, உரை.) |
திரிச்சிரமம் | tiri-c-ciramam, n. prob. tri+šrama. Daily prayer in the morning, noon and evening; முக்கால அனுஷ்டானம். |
திரிசரம் | tiri-caram, n. <>tri-sara. Threestringed necklace; மூன்று கொத்துக்களுடைய மாலை. திரிசரம் பஞ்சசரம் ஸப்தசரம் என்றாப்போல சொல்லுகிற . . . . முத்துவடங்களையும் (திவ். அமலனாதி. 10, வ்யா. பக். 10). |
திரிசூலமுத்திரை | tiri-cūla-muttirai, n. <>tri-šūla+.(šaiva.) A hand-pose; கைமுத்திரைவகை. (சைவாநு. பி. 20.) |
திரிதகர்மம் | tirika-karmam, n. perh. dhrta+.(Yōga.) Gazing at the tip of one's nose till tears gather in the eyes; கண்ணிலிருந்து நீர்வடியும்வரை நசிநுனியைப் பார்த்துக் கெண்டிருக்கை. (யோகஞானா. 34.) |
திரிப்பு | tirippu, n. cf. திருப்புவாரம். Portion of land revenue assigned to a temple or a charitable institution; கோயில் முதலிய தரும ஸ்தாபனங்களுக்கு நிலவரியினின்று கொடுக்கப்படும் பகுதி. Nā. |
திரியணுகம் | tiri-y-aṇukam, n. <>tryaṇuka. Minute; நுண்மை. (திப். பெரியதி. 1, 2, 3, வ்யா. பக். 65.) |
திரியாபுரம் | tiriyā-puram, n. cf. திரியாவிரம். Mischief; குறும்பு. (யாழ். அக.) |
திரிலிங்கம் | tiri-liṅkam, n. <>திரி+.(Gram.) The three genders; ஆண் பெண் அலிகளாகிய முப்பால். (W.) |
திருக்கண்சாத்து | tirukkaṇ-cāṭṭu, n. <>திருக்கண்+. Cocoanut, plantain fruits, etc., intended as offerings to a temple deity taken out in procession during a festival; சுவாமியின் வீதிப்புறப்பாட்டில் நிவேதனத்திற்கு வைத்திருக்குந் தேங்காய் பழம் முதலியன. Nā. |
திருக்கண்சாத்து - தல் | tirukkaṇ-cāttu-, v. intr. <>id.+. To make offerings of coconut, etc., when a temple deity is taken out in procession during a festival; சுவாமியின் வீதிப்புறப்பாட்டில் தேங்காய் பழம் முதலியன நிவேதித்தல். Nā. |
திருக்கண்டவாளி | tiru-k-kaṇṭa-vāḷi, n. <>திரு+கண்டம்+. A kind of necklace; கழுத்தணிவகை. (S. I. I. iii, 476.) |
திருக்கண்ணமுதம் | tiru-k-kaṇ-ṇ-amutam, n. <>id.+கன்னல்+. cf. திருக்கண்ணமுது. Sweet milk-pudding; பாயசம். Loc. |
திருக்கண்ணோக்கு | tiru-k-kaṇ-ṇōkku, n. <>id.+கண்+. Taking a temple deity to a maṇṭapam; சுவாமியை மண்டபப்படிக்கு எழுந்தருளச் செய்கை. (S. I. I. v, 109.) |
திருக்கு - தல் | tirukku-, 5 v. tr. Caus. of திருகு-. Loc. 1. To twist; முறுக்குதல். 2. To set on; to screw up, as a person; |