Word |
English & Tamil Meaning |
---|---|
உய்கதியால் | uykatiyāl n. See உய்தடி. (J.) . |
உய்கை | uykai n. <>உய்1-. 1. Salvation, deliverance; ஈடேறுகை. 2. Escape from hard-ship, relief from distress; |
உய்த்தலில்பொருண்மை | uyttal-il-poruṇmai n. <>உய்3-+. (Poet.) The merit of transparency of sense achieved by a careful choice of unambiguous simple words, a merit of poetic composition; கருதிய பொருள் தெளிவாகப் புலப்படுமாறு எளிய சொல்லுடைமையாகிய குணம். (தண்டி. 21.) |
உய்த்தறி - தல் | uyttaṟi- v. tr. <>id.+. See உய்த்துணர்-. இப்பொருள் உய்த்தறியத்தக்கது. |
உய்த்துணர் - தல் | uyttuṇar- v. tr. <>id.+. To know by careful investigation; ஆராய்ந்தறிதல். உய்த்துணர்ந்தவ ருரைத்த (சூளா. சீய. 37). |
உய்த்துணர்வு | uyttuṇarvu n. <>id.+. 1. Knowledge obtained by study, keen research and observation; ஆராய்ந்துணரும் அறிவு. உய்த்துணர் வில்லெனி னில்லாகும் (நீதிநெறி. 5). 2. Wisdom; |
உய்த்துணரவைப்பு | uyttuṇara-vaippu n. <>id.+. (Gram.) A literary method consisting in the use in exposition of such expression as would stimulate thought or further enquiry, one of 32 utti, q.v.; ஓர் உத்தி. (நன்.14.) |
உய்தடி | uy-taṭi n. <>உய்1-+ Live hedge stick; கிளைக்கும் வேலிக்கொம்பு. (J.) |
உய்தி | uyti n. <>id. 1. Salvation, deliverance; ஈடேற்றம். சார்பறுத் துய்தியும் (மணி. 25, 5). 2. Remedy, atonement, expiation; 3. Ceasing; |
உய்மணல் | uy-maṇal n. Black sand; கருமணல். (W.) |
உய்யக்கொண்டான் 1 | uyya-k-koṇṭāṉ n. <>உய்1-+. Saviour; உஜ்ஜீவிக்கச்செய்தவன். |
உய்யக்கொண்டான் 2 | uyyakkoṇṭāṉ n. 1. White bracted jasmine. See எருமைமுல்லை. (மூ. அ.) . 2. Guava. See கொய்யா. (மூ. அ.) |
உய்யவந்ததேவநாயனார் | uyya-vanta-tēva-nāyaṉār n. <>உய்1-+. 1. The author of the Tiru-v-untiyār, native of Tiruviyalūr, 12th c.; சைவசித்தாந்தசாத்திரங்களுள் திருவுந்தியா ரியற்றியவர். 2. The author of Tiru-k-kaḷiṟṟu-p-paṭiyār, native of Tirukkaṭavūr, 12th c.; |
உய்யானம் | uyyāṉam n. <>Pāli, uyyāna. <>ud-yāna. Park, pleasure garden. See உத்தியானம். உய்யானத்திடை யுணர்ந்தோர் செல்லார் (மணி. 3, 52). |
உய்வனவு | uyvaṉavu n. <>உய்1-. (J.) 1. Flourishing, reviving, as a tree; செழிப்பு. 2. Living, subsistence, maintenance; 3. Attaining eternal bliss; |
உய்விடம் | uyviṭam n. <>உய்வு + இடம். Asylum, place of refuge, shelter; பிழைக்குமிடம். உய்விட மறியே மாகி (குறிஞ்சிப். 166). |
உய்வு | uyvu n. <>உய்1-. 1. Escaping from danger; உயிர்தப்புகை. எரியாற் சுடப்படினு முய்வுண்டாம் (குறள், 896). 2. See உய்தி, 3. See உய்தி, |
உயக்கம் | uyakkam n. <>உயங்கு-. Suffering, distress, trouble; வருத்தம். உண்ணா வுயக்கத்து (மணி. 7, 66). |
உயங்கு - தல் | uyaṅku- 5 v. intr. 1. To suffer, to be in distress, to be pained in body or mind; வருந்துதல். உயங்குவள் கிடந்த கிழத்தியை (தொல். பொ. 146). 2. To grow thin, become emaciated; 3. To be flexible, slender; |
உயத்தி | uyatti n. A mineral poison; வெள்ளைப்பாஷாணம். (W.) |
உயர் 1 - தல் | uyar - 4 v. intr. [M. uyar.] 1. To rise, as water; to ascend, as a body in the air; to move toward the meridian, as a heavenly body; மேலெழுதல். வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் (கந்தபு. பாயி. 63). 2. To be high, elevated, tall, lofty; 3. To grow, increase, expand; 4. To be excellent, exalted, eminent, dignified, superior; 5. To vanish, disappear, to be removed; |
உயர் 2 | uyar n. <>உயர்1-. Greatness, nobility, renown; உயர்ச்சி. உயர்மிக்க (சீவக. 473). |
உயர் 3 - த்தல் | uyar - 11 v. tr. caus. of உயர்1 See உயர்த்து-. மேன்மே லுயர்த்து நிறுப்பானும் (நாலடி, 248). |
உயர் 4 | uyar n. Crab's-eye. See குன்றி (மலை.) . |