Word |
English & Tamil Meaning |
---|---|
வாய்க்குடுமி | vāy-k-kuṭumi n. <>id.+. Beard; தாடி. Colloq. |
வாய்க்கேட்பார் | vāy-k-kēṭpār n. <>id.+. Personal secretary, as to a king; அரசன் முதலியோரது வாய்மொழிகேட்டுக் காரியம் நிர்வகிக்கும் அதிகாரிகள். (S. I. I. ii, 353.) |
வாய்கூசுதல் | vāy-kūcutal n. <>id.+. Being ashamed to use indecent words; தீச்சொற்கள் பேசுவதில் அருவருப்புக் கொள்ளுகை. Colloq. |
வாய்ச்சேதி | vāy-c-cēti n. <>id.+ செய்தி. 1. Casual mention; பேச்சுவாக்கு. நாடியதை வாய்ச்சேதியா யுரைக்க வாயெடுக்கு முந்தி (பஞ்ச. திருமுக. 1198.) 2. Oral communication; |
வாய்ப்பொருத்து | vāy-p-poruttu n. <>id.+. Joint, as of two planks; மூட்டுவாய். கதவின் வாய்ப்பொருத்து விலகிவிட்டது. |
வாய்ப்பார் - த்தல் | vāy-pār- v. intr. <>id.+. To listen to a talk without taking part in it; பிறருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருத்தல். Tp. |
வாய்மருந்து | vāy-maruntu n. <>id.+. Spittle spit by the doctor into the mouth of a snake-bitten patient, as an antidote or poison; விஷந்தீண்டப்பட்டோரின் வாயில் விஷ மருந்தாக மருத்துவர் உமிழும் வாயெச்சில். (திவ். நாய்ச். 13, 5, அரும். பக். 313.) |
வாய்மூட்டு | vāy-mūṭṭu n. <>id.+. See வாய்ப்பொருத்து. . |
வாய்விடு - தல் | vāy-viṭu- v. intr. <>id.+. To make noise; ஒலித்தல். பொழிலுறு பறவையாவும் வாய்விடா தொழிந்த (இரக்ஷணிய. பக். 36). |
வாயவன் | vāyavaṉ n. <>id. Ambassador; தூதன். சொல்லென வாயவன் விளம்பலும் (புரூரவ. போர்புரி. 5). |
வாயிழு - த்தல் | vāy-iḻu- v. intr. <>id.+. To pick a quarrel; சண்டை போடுதல். Tp. |
வாயுநுட்பம் | vāyu-nuṭpam n. <>வாயு+. Hydrogen; சலவாயு. Pond. |
வாயுமானி | vāyu-māṉi n. <>id.+. Gasometre; வாயுவை அளக்குங் கருவி. Pond. |
வார் - த்தல் | vār- 11 v. intr. To appear, as pock in small-pox; அம்மை நோயில் முத்து வெளிப்படுதல். அம்மை வார்த்த மூஞ்சி. Colloq. |
வார்த்தைப்பாடு | vārttai-p-pāṭu n. <>வார்த்தை+. Sweet, pleasant words; நய வார்த்தை. Pond. |
வார்ப்பாலை | vārppālai n. <>வார்ப்பு+. Foundry; இரும்பு முதலியன உருக்கி வார்க்கு மிடம். Pond. |
வார்ப்பு | vārppu n. <>வார்-. Encasing, as precious stones in an ornament; இரத்தினத்தில் ஏற்றின மேற்பூச்சு. (திவ். பெரியாழ். 3, 3, 3, வ்யா. பக். 567.) |
வார்ப்புலை | vārppulai n. <>வார்ப்பு+. See வார்ப்பாலை. Pond. . |
வாரக்காணம் | vāra-k-kāṇam n. <>வாரம்+. A tax; வரிவகை. (S.I. I. vi, 155.) |
வாரடி | vār-aṭi n. <>வார்+. Whipping; சாட்டையடி. Pond. |
வாரப்புன்செய் | vāra-p-puṉcey n. <>வாரம்+. Dry crops liable to be taxed; வரியிடத்தக்க புன் செய்ப்பயிர். (P. T. L.) |
வாரம் | vāram n. perh. வார்-. Post, pillar; தூண். (பெருங். உஞ்சைக். 58, 46.) |
வாரமிழந்தான் | vāram-iḻantāṉ n. <>வாரம்+. Lightning on the north-west; வடமேற்கில் உண்டாம் மின்னல். (J. N.) |
வாரவட்டை | vāravaṭṭai n. Bressummer. See பாம்புச்சட்டம். Madr. |
வாரொழுக்கு - தல் | vār-oḻukku- v. intr. <>வார்+. To set nets; கயிற்றுவலை கட்டுதல். ஒடியெறிந்து வாரொழுக்கி (பெரியபு. கண்ணப்ப. 75). |
வால்பேரி | vāl-pēri n. prob. வால்+. English pear; பேரிவகை. Loc. |
வாலிபி | vālipi n. <>வாலிபம். Fem. of வாலிபன். Young woman; இளம்பிராயத்தாள். Pond. |
வாலுகி | vāluki n. <>vālukī. Kakri melon; கக்கரி. Pond. |
வாலை | vālai n. The Cittira river, a tributary of the Tāmiraparuṇi; சித்திராநதி. (நாமதீப. 528.) |
வாலைக்காட்டு - தல் | vālai-k-kāṭṭu- v intr. <>வால்+. See வாலைக்கிளப்பு-. Colloq. . |
வாலைக்கிளப்பு - தல் | vālai-k-kiḷappu- v. intr. <>id.+. To become mischievous; குறும்பு செய்தல். (W.) |
வாலைசாரம் | vālai-cāram n. <>வாலை+. Catticāram, a salt; சத்திசாரம். (மூ. அ.) |
வாலையாட்டு - தல் | vālai-y-āṭṭu- v. intr. <>வால்+. See வாலைக்கிளப்பு-. Colloq. . |
வாவனாற்றி | vāvaṉāṟṟi n. <>வாவல்+நால்- A kind of verse; வாவன்ஞாற்று. (யாப். வி. பக். 502). |