Word |
English & Tamil Meaning |
---|---|
வளக்குவெல்லி | vaḷakkuvelli n. A plant; பூடுவகை. (தெய்வச். விறலிவிடு. 495.) |
வளகு | vaḷaku n. <>வளம். Fertility; செழிப்பு. வளகுபெறு பண்பைத் திருமலையும் (இலஞ்சி. முருகனுலா, 133). |
வளர்த்து - தல் | vaḷarttu- 5 v. tr. To stretch as a thing, on the ground; கிடத்துதல். தயிலத்தோணி வளர்த்துமினென்னச் சொன்னான் (கம்பரா. உயுத்த. இராவணண்சோகப். 61). |
வளரிக்கை | vaḷarikkai n. <>வளர்-. Talkativeness; வளர்த்துப் பேசுகை. வளரிக்கையாலே வம்பிலே போகுதென் வாணாள் (வள்ளி. கதை. Ms.) |
வளைக்காச்சுமணி | vaḷai-k-kāccu-maṇi n. <>வளை+. A kind of bead; சங்குமணி. (சிவரக. அபுத்தி. 5. ) |
வளைப்புக்கிட - த்தல் | vaḷaippu-k-kiṭa- v. tr. <>வளைப்பு+. 1. To besiege; to pester a person by surrounding him and not allowing him to escape; வெளியில் தப்பவிடாது சூழ்ந்துகொள்ளுதல். (திவ். பெருமாள்தி. 9, 2, வ்யா. பக். 126.) 2. To lie down, vowing not to get up unless one's request is granted; to sit dharna; |
வளைமணிவடம் | vaḷai-maṇi-vaṭam n. <>வளை+. A string of beads; அக்குவடம். திருவரையிற் சாத்தின வளைமணிவடமானது (திவ். பெரியாழ். 1, 7, 8, வ்யா. பக். 150). |
வளையல் | vaḷaiyal n. <>வளை-. Fetters; கைவிலங்கு. (T. C. M. ii, 2, 531.) |
வற்கெனவு | vaṟkeṉavu n. prob. வன்-மை. Beauty; அழகு. ஸ்வர்ணம் என்னும் வஸ்துவில் வற்கெனவும் வசஞ்செய்தலு முதலாயின அனுவிருத்த ஸ்வபாவம் (நீலகேசி, 380, உரை). |
வற்பனை | vaṟpaṉai n. A species of ragi; கேழ்வரகுவகை. (விவசா. 3.) |
வறட்கணம் | vaṟaṭ-kaṇam n. <>வறள்+ A kind of wasting disease; கணைநோய்வகை. (பாலவா. 41.) |
வறட்சேதம் | vaṟat-cētam n. <>id.+. Loss to growing crops on account of drought; மழையின்மையால் பயிர் விளையாமை. (P. T. L.) |
வன்பா - தல் | vaṉpā- 11 v. intr. <>வன்பு+. To become hard; கடினமாதல். வன்பாயிருப்பது பிறிதில்லை (குறள். 1063, மணக்.) |
வன்பாட்டம் | vān-pāṭṭam n. <>வன்-மை+. Fixed rent in kind due under a lease-deed which does not provide for any relief against loss due to drought; தீய்வு கரிவு காலத்திலும் குறையாமல் அளக்கவேண்டிய குத்தகை. நெல். பதினறுகலனே தூணியாக வன்பாட்டம் அளக்கவும். (S. I. I. v. 90.) |
வன்மி | vaṉmi n. <>வன்மம். Spiteful person; துவேஷபுத்தியுள்ளவன். காயிபாசெனுமோர் வன்மி (இரஷணிய. பக். 51). |
வன்னசாஸ்திரம் | vaṉṉa-cāstiram n. <>வன்னம்+. Science relating to colorus; வர்ணங்களைப்பற்றிய சாஸ்திரம். Pond. |
வன்னிசிகரம் | vaṉṉi-cikaram n. <>வன்னி+. Cock's-comb; சாவற்சூட்டுப்பண்ணை. pond. |
வனசம் | vaṉacam n. <>panasa. Jack tree; பலா. வனசச் கனியொ டந்தண் வாழையே (அலங்காரச்சிந்து, 12). |
வனப்பு | vaṉappu n. (Mus.) A tune; இசைவகை. பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பென்னும் வண்ணவிசை (பெரியபு. ஆனாய. 28). |
வனப்புள் | vaṉa-p-puḷ, n. prob. வனம்+. Shepherd koel; சாதகபட்சி. (வள்ளசத்தியஞான. 25.) |
வனமுருங்கை | vaṉa-muruṅkai n. <>id.+. Wild Indian horse-radish; காட்டுமுருங்கை. (நாநார்த்த.) |
வனஸ்பதி | vaṉaspati n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
வனைகோல் | vaṉai-kōl n. <>வனை-+. Painter's brush; படந்தீட்டுங் கருவி. செம்பொற்படாமும் வனைகேரலும் வாங்கினாள் நம்பி வடிவெழுத (அழகியநம்பியுலா, 147). |
வஸ்துகிருத்தியம் | vastu-kiruttiyam n. <>vastu+. Building work; கட்டடவேலை. வஸ்து கிருத்தியம் எப்பேர்ப்பட்டதும் (T. A. S. iii, 216). |
வாக்கின் | vākkiṉ n. <>E. Wagon; பண்டங்களேற்றும் ரயில்வண்டி. Mod. |
வாக்கு | vākku n. Manner, nature; விதம். ஏன் இன்னும் ஒருவாக்காயிருக்கிறாய் (பிரதாப. விலா. 105). |
வாக்குநிச்சயம் | vākku-niccayam n. <>வாக்கு+. Ceremonial confirmation of marriage agreement; நிச்சயதாம்பூலம். Loc. |