Word |
English & Tamil Meaning |
---|---|
வர்த்தகன் | varttakaṉ n. <>vardhaka. Promoter; one who helps to increase or promote; விருத்தியாக்குவோன். உத்பந்நையான பக்திக்கு வர்த்தகர் ஆர் (ஈடு, முதல் ஸ்ரீய:பதி, அவ. பக்.94). |
வர்த்திப்பு | varttippu n.<>வர்த்தி-. Increase; பெருக்கம். Pond. |
வரக்கூலி | vara-k-kūli. n.<>வா-+. Hire or rent for carrying paddy, etc,; நெல் முதலியன எடுத்து வருவதற்குள்ள வண்டிச்சத்தம். (S. I. I. viii, 5.) |
வரத்து | varattu n. <>id. 1. Genealogy; lineage; வமிசாவளி. ஒருவனைக் கவிபாடும்போது அவனுடைய வரத்துச் சொல்லியிறே கவிபாடுவது (திவ். அமலனாதி. 1, வ்யா பக். 24). 2. Chirping of lizard indicating the arrival of guests; 3. Order; |
வரம்பழிதரிசு | varampaḻi-taricu n. <>வரம்பு+அழி-+. Waste land; பாழ்நிலம். (Pudu. Insc. 224.) |
வரவுசெலவு | varavu-celavu n. <>வரவு+. Colloq. 1. Income and expenditure; வருமான முஞ் செலவும். 2. Ledger entry; |
வரவோலை | varavōlai n. <>id.+. Letter of invitation; அழைப்புக் கடிதம். வரவேண்டுமென்று சொல்லி வரவோலை அனுப்புவித்தார் (கோவ. க. 17) |
வராகசம்மாரர் | varāka-cammārar n. <>வராகம்+. A manifestation of šiva; சிவபெருமானது மூர்த்தங்களு ளொன்று. (காஞ்சிப். சிவபுண். 31.) |
வராகபணம் | varāka-paṇam n. <>id.+. A coin; நாணயவகை. (S. I. I. viii, 87.) |
வராகமுத்திரை | varāka-muttirai n. <>id.+. A hand-pose, in whorship; கரமுத்திரைவகை. (சைவாநு. வி. 18.) |
வராகன்புள்ளிக்குளிகை | varākaṉ-puḷḷi-k-kuḷikai n. <>id.+. An ancient coin; பழைய நாணயவகை. (M. E. R. 1922-23, p. 114.) |
வராங்கம் | varāṅkam n. perh. varāṅga. The body of a celestial being; வானவரின் சரீரம். (R.) |
வரானி | varāṉi n. Wedge-leaved apeflower; பாலை. (வை.மூ.) |
வரி | vari n. (Pros.) A kind of musical composition, pertaining to dance; கூத்திற்குரிய வெண்டுறைப்பாட்டு ளொருவகை. (யாப் .வி. பக். 538.) |
வரிக்கற்றாழை | vari-k-kaṟṟāḷai n. <>வரி+. A kind of aloe; கற்றாழைவகை. (சித்.அக.) |
வரிக்கற்றை | vari-k-kaṟṟai n. prob. id.+. Bundle of straw, etc., suitable for roofing; கூரை வேய்தற்குதவும் புற்கற்றை முதலியன. வரிக்கற்றை இடுமடத்து (S. I. I. vi, 29). |
வரிக்காம்பு | vari-k-kāmpu, n. <>id.+. Pile of harvested tobacco plants; அறுத்த புகையிலைச் செடியின் அடுக்கு. Tinn. |
வரிக்காய் | vari-k-kāy n. <>வரி+. cf. வரிக்கடுக்காய். A species of chebulic myrobalan; கடுக்காய்வகை. (M. M.). |
வரிக்குமரி | vari-k-kumari n. <>id.+. See வரிக்கற்றாழை. (சங். அக.) . |
வரிசை | varicai n. Cultivator's share of produce; பயிர்விளைவில் உழவனுக்குரிய பங்கு. வரிசைக்கு உழும் (நேமிநா. சொல். 17, உரை). |
வரிசையார் | varicaiyār n. prob. வரிசை. Elder brother's wife; அண்ணன் மனைவி. Loc. |
வரிவளை | vari-vaḷai n. <>வரி+. A kind of bangles; வளையல்வகை. கோல்வளை கழல்வளை வரிவளை யென்னுமாபோலே (திவ். பெரியாழ். 3, 4, 8, வ்யா. பக். 618). |
வரீக்கு | vaṟīkku n. (Mus.) A kind of grace in music; இசைக்கமகவகை. (பூர். சங். எ.) |
வருக்கை | varukkai n. A kind of fish; மீன்வகை. திருக்கை வருக்கை (குருகூர்ப். 7). |
வருணப்பிரியை | varuṇappiriyai n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 104.) |
வருத்தமானம் | varuttamāṉam n. A mathematical treatise, not now extant; இறந்து பட்ட ஒரு கணிதநூல். (யாப். வி. பக். 528.) |
வருவு - தல் | varuvu- 5 v. tr. perh. வகுவு-. To open, as one's mouth; திறத்தல். கப்பியமேயென்று வாய் வருவுதலின் (நீலகேசி, 375, உரை). |
வரைக்கெண்டை | varai-k-keṇṭai n. <>வரை+. Carp; கெண்டைமீன்வகை. (நாநார்த்த.) |
வல்லவன் | vallavaṉ n. <>vallabha. The Western Caḷukya king; மேலைச்சளுக்கிய அரசன். (Insc.) |
வல்லூரி | vallūri n. Pig; பன்றி. (சங். அக.) |