Word |
English & Tamil Meaning |
---|---|
வடசேடி | vaṭa-cēṭi n. <>வடக்கு+. The northern range of the mythical silver mountain; வெள்ளிமலையின் வடசார். (தக்கயாகப். 371.) |
வடசேர் | vaṭa-cēr n. prob. Hind. badā+E. sail. Main sail; கப்பலின் வடமரத்தில் விரிக்கப்படும் பாய். (M. Navi.) |
வடடவர்சேர் | vaṭa-ṭavar-cēr n. <>id.+. E. tower+. Main royal sail, வடடவர் மரத்திற் கட்டப்படும் பாய். (M. Navi.) |
வடடவர்மரம் | vaṭa-ṭavar-maram n. <>id.+id.+. Main royal mast; வடமரத்தின் உச்சிப்பாகம். (M. Navi.) |
வடதுருவசக்கரம் | vaṭa-turuva-cakkaram n. <>வடக்கு+துருவம்+. Arctic circle; பூமியின் வடகோடியிலுள்ள குளிர்ச்சியான மண்டலத்தை வரையறுக்குஞ் சுற்றுரேகை. (M. Navi.) |
வடமரம் | vaṭa-maram n. prob. Hind. badā+. Main mast; கப்பலின் நடுவிலிருக்கும் பாய்மரம். (M. Navi.) |
வடும்பு | vaṭumpu n. Tie-beam; சாத்துமரங்களின் குறுக்கே போடுங் கழி. Loc. |
வண்டாளை | vaṇṭāḷai n. A kind of paddy; நெல்வகை. (குருகூர்ப். 58.) |
வண்ணக்கன் | vaṇṇakkaṉ n. Manager; காரிய நிர்வாகி. Loc. |
வண்ணாத்தி | vaṇṇātti n. Myna; நாகணவாய்ப்புள். Pond. |
வண்ணாரம் | vaṇṇāram n. <>varṇakāra. Work of a dhoby or washerman; வண்ணான் தொழில். வண்ணாரந்துன்னார மச்சிகமே (நீலகேசி, 280). |
வண்ணானைக்கும்பிட்டார் | vaṇṇāṉai-k-kumpiṭṭār n. <>வண்ணான்+. St. Cēramāṉ-perumāḷ; சேரமான்பெருமாணாயனார். ஆண்டார் வண்ணானைக்கும்பிட்டார் எழுந்தருளி (S. I. I. vii, 321). |
வணக்குமார் | vaṇakkumār n. perh. வண்ணக்கர். Temple accountant; கோயில் மணியகாரர். (J. N.) |
வணை - த்தல் | vaṇai- 11 v. tr. To pour, as water from a pot; தண்ணீர் ஊற்றுதல். Rd. |
வத்தா | vattā n. Barber; நாவிதன். வத்தாவொருகத்தியினாலே வைக்கின்ற மயிர்ச்சிகையன்று (பாடு. 76, சிகை. 1). |
வத்திநயினி | vattinayiṉi n. Fainting, delirium; மயக்கம். (சித். அக.) |
வத்திரதாரு | vattiratāru n. Roselle; செம்புளிச்சை. (பச். மூ.) |
வத்துபேதம் | vattu-pētam n. <>வந்து+. (Jaina.) Doctrine which affirms both existence and non-existence; அஸ்திநாஸ்திவாதம். வத்துபேதங் கூறாரெழாத குழக்கன்றினுக்கு (நீலகேசி, 403). |
வத்தைச்சீட்டு | vattai-c-cīṭṭu n. <>வத்தை+. Bill of lading; கப்பலில் ஏற்றவாவது கரையில் இறக்கவாவது வத்தையில் போடப்படுஞ் சரக்கோடு கொத்தனுப்புஞ் சீட்டு. (M. Navi.) |
வந்தரியர் | vantariyar n. Fem. of வந்தரர். A class of goddesses, inhabiting the heaven; மேலுலகத்திலுள்ள வியந்திர ஸ்திரீகள். சுந்தரியர் வந்தியர் (மேருமந். 1032). |
வமிசாட்டவணை | vamicāṭṭavaṇai n. <>வமிசம்+. Genealogy; வமிசாவளி. Pond. |
வய - த்தல் | vaya- 12 v. tr. cf. vaša. To wish for; to desire; விரும்புதல். வயந்தே யுமக்காட்செய்து (தேவா. 946, 7). |
வயற்சூலம் | vayaṟ-cūlam n. <>வயல்+. (Astrol.) Nakṣatras, which are inauspicious for tilling; உழவுக்காகாத நட்சசத்திரங்கள். (சோதிட. சிந். 178.) |
வயிரப்படையோன் | vayira-p-paṭaiyōṉ n. <>வயிரம்+. Indra, as the wielder of thunderbolt; இந்திரன். வயிரப்படையோன் முதலமரர். (காசிக. தேவர்கள் அகப். 10). |
வயிரவுருக்கு | vayira-v-urukku n. <>id.+. That which melts or dissolves diamond; வைரத்தை உருக்கக்கூடிய பொருள். வயிரவுருக்கானது அரக்கையுருக்கச் சொல்லவேணுமோ. (திவ். திருநெடுந். 22, வ்யா. பக். 205). |
வயிறுவாழ் - தல் | vayiṟu-vāḻ- v. intr. <>வயிறு+. 1. To have enough of food; வேண்டும் உணவு உடையவனாதல். ஸ்வக்ருஹத்தில் ஜீவநமற்று வயிறுவாழாமல் செய்கிறானன்றே. (திவ். பெரியாழ். 2, 9, 3, வ்யா. பக். 457). 2. To make a living; |
வர்ணம் | varṇam n. <>varṇa. Degree of fineness, as of gold; மாற்று. கைங்கர்யைகப்ரயோ ஜனராயிருக்கு மவர்களுடைய பரமைகாந்தித்வம் ஷோடவர்ணஸ்வர்ணத்தோடொக்கும் (ரஹஸ்ய. 846). |
வர்த்தகம் | varttakam n. <>vardhaka. That which increases or promotes; விருத்திசெய்வது. இது ஆயுள் வர்த்தகம். |