Word |
English & Tamil Meaning |
---|---|
அடித்துக்கொள்(ளு) - தல் | aṭittu-k-koḷ- intr. <>id.+. 1. To beat oneself repeatedly; அறைந்து கொள்ளுதல். தலையில் அடித்துக்கொண்டாள். Colioq. 2. To say or cry repeatedly; 3. To quarrel; |
அடித்துவிழு - தல் | aṭittu-viḻu- v. intr. <>id.+. To lament and beat the breasts and fall down at the entrance of a house where death has occurred; சாவீட்டில் மார்பிலடித்து விழுந்தழுதல். Colloq. |
அடித்தூறு | aṭi-t-tūṟu n. <>அடி3+ Stump of a tree; மரத்தின் அடிக்கட்டை. |
அடித்தேறு | aṭi-t-tēṟu n. <>அடி-+எறி-. Injustice; அநீதி. Loc. |
அடித்தொழில் | aṭi-t-toḻil n. <>அடி3+. Menial service; குற்றேவல். அப்பிறப்பியா னின்னடித் தொழில் கேட்குவன் (மணி. 22, 134). |
அடித்தோழி | aṭi-t-tōḻi n. <>id.+. Chief woman attendant, confidante of a lady; தலைமைத்தோழி..(சிலப். வாழ்த்து.) |
அடிதடி | aṭi-taṭi n. <>அடி2+. [K. aditadi.] Quarrel that ends in blows; சண்டை. Colloq. |
அடிதண்டம் 1 | aṭi-taṇṭam n. <>id.+ 1. Sudden blow that floors one; தலையெடுக்க வொட்டாத அடி. Loc. 2. Flogging; |
அடிதண்டம் 2 | aṭi-taṇṭam n. <>அடி3+ Prostration of a pilgrim who measures his way with his body in going to a temple; ஆலயத்துக்குச் செல்லும்போது வழிமுழுதும் தண்டனிடுகை. Loc. |
அடிதண்டம்பிடிதண்டம் | aṭi-taṇṭam-piṭi-taṇṭam n. <>id.+. Person or animal under complete subjection; பூர்ணமாக வசப்பட்ட பொருள். அவன் அவனுக்கு அடிதண்டம் பிடிதண்டம். Loc. |
அடிதண்டா | aṭi-taṇṭā n. Shovel; மண்வெட்டி. (C.E.M.) |
அடிதலை | aṭi-talai n. <>அடி3+. 1. Upside down; கீழ்மேல. (W.) 2.Beginning and end; |
அடிதவ்வு - தல் | aṭi-tavvu- v. intr. <>id.+. To jump over, as an exercise of boys; அடிதாண்டி விளையாடுதல். (W.) |
அடிதிரும்பு - தல் | aṭi-tirumpu- v. intr. <>id.+. Sun's shadow turning eastward; பொழுதுசாய்தல். Colloq. |
அடிதொடு - தல் | aṭi-toṭu- v.intr. <>id.+. To take an oath, by touching another's feet; பிறர்பாதந்தொட்டுச் சபதம்பண்ணுதல். ஒழியப்போகேனுன்னடி தொட்டேன் (மணி. 18,171). |
அடிதொறும் | aṭi-toṟum adv. <>id.+. See அடிதோறும். (சீவக. 106.) |
அடிதோறும் | aṭi-tōṟum adv. <>id.+. Repeatedly; அடிக்கடி. |
அடிநகர் - தல் | aṭi-nakar- v.intr. <>id.+. To be dislodged; இடம்விட்டுப்பெயர்தல். |
அடிநாள் | aṭi-nāḷ n. <>id.+. Early life, younger days; ஆதிகாலம். அடிநாளில் யான்முயன்ற தறியீர் போலும் (பிரபோத. 38, 20). |
அடிநிலை | aṭi-nilai n. <>id.+. Sandal; மரவடி. |
அடிநிழலார் | aṭi-niḻalār n. <>id.+. Subjects of a king; குடிகள். (P.) |
அடிநீறு | aṭi-nīṟu n. <>id.+. Dust on the feet; பாததூளி. (தி. திருவாய். 5, 9, 2.) |
அடிப்பட்டகாந்தி | aṭi-p-paṭṭa-kānti n. <>அடிப்படு-+ A prepared arsenic; தீமுறுகற்பாஷாணம். (மூ.அ.) |
அடிப்பட்டசான்றோர் | aṭi-p-paṭṭa-cāṉṟōr n. <>id.+. Recognized scholars of yore; பூர்விகரான புலவர். (நன். 266. மயிலை.) |
அடிப்பட்டவழக்கு | aṭi-p-paṭṭa-vaḻakku n. <>id.+. Ancient usage; பழைமையாக வரும் வழக்கு. |
அடிப்படர் - தல் | aṭi-p-paṭar- v.intr. <>அடி3+ 1. To spread underneath, as roots, creepers; கீழ்ப்பரவுதல். 2. To be propitious; |
அடிப்படு - தல் | aṭi-p-paṭu- v.intr. <>id.+. 1. To be worn by passing feet, as a path; அடிச்சுவடு படுதல். (நாலடி. 154.) 2. To do another's will willingly; 3. To become accustomed to; 4. To be long established; |
அடிப்படுத்து - தல் | aṭi-p-paṭuttu- v.intr. <>id.+. To subdue, subject, as a country a foe; கீழ்ப்படுத்துதல். பிறபுலங்க ளடிப்படுத்து (பெரியபு. ஐயடி.2). |
அடிப்படை | aṭi-p-paṭai n. <>id.+. 1. Lowest layer of mud or brick in a wall, basement; சுவரின் அடித்தளம். 2. Base, foundation; |
அடிப்பணி | aṭi-p-paṇi n. <>id.+. Menial service; குற்றேவல். அன்னவற்குறிய னென்ன வடிப்பணி செய்வல் (சீவக. 552). |