Word |
English & Tamil Meaning |
---|---|
அடிபிடி | aṭi-piṭi n. <>அடி2+. Broil, fray, scuffle; சண்டை. Loc. |
அடிபிறக்கிடு - தல் | aṭi-piṟakkiṭu- v.intr. <>அடி3+. To fall back, retreat; பின்வாங்குதல். அடிபிறக்கிட்டோனையும் (தொல்.பொ.65,உரை). |
அடிபெயர 1 - தல் | aṭi-peyar- v.intr. <> id.+. To move a step, move from the spot where one stands; காலெடுத்துவைத்தல். |
அடிபெயர் 2 - த்தல் | aṭi-peyar- v.intr. See அடிபெயர்தல். . |
அடிம்பு | aṭimpu n. Indian jalap. See சிவதை. (மலை.) |
அடிமடி | aṭi-maṭi n. <>அடி3+. Inner fold of the waist cloth; ஆடையி னுள்மடிப்பு. Colloq. |
அடிமடை | aṭi-maṭai n. <> id.+. Head of sluice; முதன் மடை |
அடிமண் | aṭi-maṇ n.+. 1. Soil underneath; கீழ்மண். 2. Earth that has been touched by a person's foot, taken for witchcraft against him; |
அடிமணியிடு - தல் | aṭi-maṇi-y-iṭu- v.intr. <> id.+. To make a beginning, as placing gems in the place where a foundation is to be laid; தொடங்குதல். இனிமுடிக்கும் வெற்றிக் கடிமணி யிட்டாய் (கம்பரா. மகுடபங். 42). |
அடிமணை | aṭi-maṇai n. <> id.+. Support, basis; ஆதாரம். எல்லாப் பண்ணிற்கும் இஃது அடிமணையாதலின் (சிலப். 3, 63, உரை). |
அடிமறி | aṭi-maṟi n. <> id.+. See அடிமறி மாற்று. (தொல். சொல்.407.) |
அடிமறிமண்டிலம் | aṭi-maṟi-maṇṭilam n. <> id.+. Kind of āciriya verse so constructed that the lines are interchangeable without change of meaning; அகவற்பாவகையு ளொன்று. (காரிகை, செய்.8.) |
அடிமறிமாற்று | aṭi-maṟi-māṟṟu n. <> id.+. Mode of construing in which the lines of a verse have to change places to give the intended meaning, or can change places without the rhythm and meaning changing at the same time, one of eight poruḷ-kōḷ, q.v.; அடிகளை எடுத்துப் பொருளுக்கு ஏற்றபடி கூட்டுவதும், எந்த அடியை எங்குக்கூட்டினும் பொருளும் ஓசையும் ஒப்ப வருவதுமாகிய பொருள்கோள். (நன்.419.) |
அடிமனை | aṭi-maṉai n. <> id.+. Main walls of a building; சுற்றுச்சுவர். (சீவக.837,) |
அடிமாடு | aṭi-māṭu n. <>அடி-+ Cattle for slaughter; கொல்லுவதற் குரிய மாடு. |
அடிமாண்டுபோ - தல் | aṭi-māṇṭu-pō- v.intr <>அடி3+. To perish completely, root and branch; நிர்மூலமாதல். |
அடிமுடி | aṭi-muṭi n. id.+. Beginning and end; ஆதியந்தம். அடிமுடியொன் றில்லாதவகண்ட வாழ்வே (தாயு. பன்மாலை, 3). |
அடிமுந்தி | aṭi-munti n. <>id.+. See அடிமுன்றானை. . |
அடிமுரண்டொடை | aṭi-muraṇṭoṭai n. <> id.+. (Pros.) Concatenation in which the first word of the first line or its sense is antithetical to the first word of the second line or its sense; செய்யுளின் ழதலில் வரும் சொல்லாவது பொருளாவது அடுத்த அடியின் சொல்லோடும் பொருளோடும் மாறுபடத் தொடுப்பது. (காரிகை, உறுப்.18, உரை.) |
அடிமுன்றானை | aṭi-muṉṟāṉai n. <>id.+. End of a woman's cloth, which is worn inside; சேலையின் உள்முகப்பு. |
அடிமை | aṭimai n. <> id. [K. adime, M. aṭima.] 1. Slavery, bondage, servitude; தொண்டுபடுந் தன்மை. ஒன்னார்க் கடிமை புகுத்தி விடும் (குறள், 608). 2. Slave, formerly attached to land and transferable with it; 3. Servant, devotee; |
அடிமைப்பத்திரம் | aṭimai-p-pattiram n. <>அடிமை.+. Bond of a slave; அடிமையோலை. |
அடிமைபூண்(ணு) - தல் | aṭimai-pūṇ- v.intr. <> id.+. To become a bond servant, as of the Deity; தொண்டனாதல். நானடிமை பூண்டேன் (திவ். பெரியதி. 7, 2, 5). |
அடிமையோலை | aṭimai-y-ōlai n. <> id.+. Bond of a slave; அடிமைப்பத்திரம். |
அடிமோனைத்தொடை | aṭi-mōṉai-t-toṭai n. <>அடி3-+. (Pros.) Concatenation in which all the lines of a verse begin with the same letter or letters related according to the laws of mōṉai; அடிகடோறும் முதலில் மோனை யெழுத் தொன்றிவரத் தொடுப்பது. (காரிகை, உறுப். 18, உரை.) |
அடியடியாக | aṭi-y-aṭiyāka adv. <>id.+. In succession, as the descent of a title; தலைமுறை தலைமுறையாக. (J.) |
அடியந்தாதி | aṭi-y-antāti n. <>id.+. Mode of versification in which a line that ends one stanza begins the following stanza; ஒரு செய்யுளி னீற்றடி அடுத்த செய்யுளின் முதலடியாகத் தொடுக்கப்படுவது. (யாப்.வி.52,பக்.186.) |