Word |
English & Tamil Meaning |
---|---|
கலக்கு 2 | kalakku n. <>கலக்கு-. [T. kalakuva, K. kalaku.] See கலக்கம். பெருங்கலக் குற்றன்று (புறநா. 41, 16). . |
கலக்கு 3 | kalakku n. <>கல-. Joint; பொருத்து. சகடங் கலக்கழியக் காலோச்சி (திவ. திருப்பா. 6 ). |
கலகக்காரன் | kalaka-k-kāraṉ n. <>kalaha +. 1. Insurgent, rebel; கலகஞ்செய்வோன். 2. Jangler, quarrelsome person, wrangler, one who bickers; |
கலகக்குருவி | kalaka-k-kuruvi n. <>id. +. 1.Common kingfisher. See மீன்குத்தி. . 2. Mischievous person, meddler; |
கலகக்கை | kalaka-k-kai n.<>id.+. (Nāṭya.) A gesture in which the fingers of both hands are brought together and bent from an upright position; இருகைவிரல்களையும் நிமிர்த்து வளைக்கும் அபிநயக்கை. (பரத. பாவ 59.) |
கலகப்பிரியன் | kalaka-p-piriyaṉ n. <>id.+. One who delights in creating troubel or quarrel; கலகம் மூட்ட விரும்புவோன். |
கலகம் | kalakam n. <>kalaha. 1. Strife, quarrel, wrangle, altercation; சச்சரவு. மாலொடொரு கலகந்தனை வாளா வருவித்தாள் (சேதுபு, சேதுமா. 24). 2. Inciting one to break off from another; 3. Uproar, tumult; 4. Insurrection, revolt, rebellion; 5. War, fight, skirmish; |
கலகல 1 | kala-kala n . [K. Tu. kalakala.] Onom. See கலகலெனல். கலகல கூஉந் துணையல்லால் (நாலடி, 140). . |
கலகல 2 - த்தல் | kala-kala- 11 v. intr. <>கலகல. 1. To reiterate in sound; to rustle, as dry leaves; to tinkle, as little bells; to chink, as money; to clink, as chains; to rattle, as pebbles in a shell; கலகலவென்று ஒலித்தல். வற்றிய வோலை கலகலக்கும் (நாலடி, 256). 2. To become shaky, get loose in the joints, as an old cart; |
கலகலக்கக்காய் - தல் | kalakalakka-k-kāy- v. intr. <>கலகல-+. To dry thoroughly; நன்றாக உலர்தல். Colloq. |
கலகலத்தவாய் | kalakalatta-vāy n. <>id.+. 1. A chatterbox, an incessant jabberer; அலப்பும் வாய். 2. An outspoken man; |
கலகலப்பு | kalakalappu n. <>id. 1. Rustling; ஒலிக்கை. 2. Sociability; 3. Joyfulness, exhilaration; 4. Sound health; |
கலகலம் | kala-kalam n. <>கலகல. [T. kalakalamu.] 1. Chirping of birds; பறவையொலி. 2. Hullabaloo, confused noise of a crowd; |
கலகலெனல் | kala-kal-eṉal n. <>id. [T. galagala.] Onom. expr. signifying tinkling, chinking; ஓர் ஒலிக்குறிப்பு. பசும்பொன் வளையல் கலகலென (தனிப்பா.ii, 2, 2). |
கலகவாயன் | kalaka-vāyaṉ n. <>kalaha +. Pugnacious, quarrelsome person; சண்டைக்காரன். |
கலகி 1 - த்தல் | kalaki- 11 v. intr. <>id. To create a disturbance, cause a commotion; கலகஞ் செய்தல் |
கலகி 2 | kalaki n. <>id. Quarrelsome, intriguing, woman; கலகக்காரி. மால் கலகியாம் (சினேந் 269). |
கலங்கடி - த்தல் | kalaṅkaṭi- v. tr. <>கலங்க+அடி-. To discomfit, put to rout, as the forces of an enemy; கலங்கச்செய்தல். எதிரி சேனையைக் கலங்கடித்தான். |
கலங்கரைவிளக்கம் | kalaṅ-karai-viḷak-kam n. <>கலம்+கரை-+. Lit., light that invites vessels; beacon light; light-house; கப்பல்களை அழைக்கும் தீபஸ்தம்பம். இலங்குநீர் வரைப்பிற் கலங்கரைவிளக்கமும் (சிலப்.6, 141). |
கலங்கல் 1 | kalaṅkal n. <>கலங்கு-. 1. Turbidity, muddiness; கலங்குகை. தெளிவிலாக் கலங்கனீர்சூழ் (திவ். திருமாலை, 37). 2. Muddy water; 3. Weeping; 4. Fear; 5. Perturbation; 6. Toddy; |
கலங்கல் 2 | kalaṅkal n. <>கலிங்கு Calingula of a tank. See கலிங்கு. Loc. . |
கலங்காவரிச்சு | kalaṅkā-variccu n. <>கலங்கு-+. Thin rafters fixed equidistantly in a roof; இடைவிட்டுக்கட்டிய வரிச்சுக்கட்டு. (W.) |
கலங்கு - தல் | kalaṅku- 5 v. intr. [T. kalagu, K. Tu. kalaṅku, M. kalaṅṅu.] 1. To be stirred up, agitated, ruffled, as water; நீர் முதலியன குழம்புதல். கலங்க முந்நீர் கடைந்து (திவ். பெரியதி. 6, 5, 1). 2. To be confused, confounded; 3. To be abashed, embarrassed, perplexed; 4. To fear; to be intimidated; to be cowed; 5. To be sad; to grieve; to experience sorrow; 6. To fail; |