Word |
English & Tamil Meaning |
---|---|
கல்லுளி 1 | kal-l-uḷi n. <>id.+. [K. M. kalluḷi.] Stone-cutter's chisel; கல்வெட்டும் உளி. |
கல்லுளி 2 | kalluḷi n. A species of Whortleberry; பேய்க்களா. (மலை.) |
கல்லுளிச்சித்தன் | kal-l-uḷi-c-cittaṉ n. prob. கல்லுளி1+. 1. Name of an ascetic who had the power of transporting himself to any place at will; ஒரு சித்தபுருஷர். 2. See கல்லுளிமங்கன். கல்லுளிச்சித்தன் போனவழி கதவுகளெல்லாந் தவிடுபொடி. |
கல்லுளித்தச்சன் | kal-l-uḷi-t-taccaṉ n. <>id. +. Sculptor, stone-cutter; கல்வேலை செய்யுந் தச்சன். (W.) |
கல்லுளிமங்கன் | kal-l-uḷi-maṅkaṉ n. prob. id.+. A pertinacious beggar who threatens to hack himself with his knife if he be not given alms; a kind of repulsive mendicant; அருவருப்பான செய்கையாற் பிடிவாதங்காட்டும் பிச்சைக்காரன். கல்லுளிமங்கன் போனவழி கதவுகளெல்லாந் தவிடுபொடி. |
கல்லுளியுருக்கு | kal-l-uḷi-y-urukkan n. <>id. +. A kind of very hard steel used for cutting stones; கல்லைச் செதுக்கும் எஃகு. (W.) |
கல்லுளுவை | kal-l-uḷuvai n. <>id.+. A sea-fish, whitish, attaining at least 5 in. in length, Percis punctata; ஒருவகைச் சிறுகடல்மீன். |
கல்லூசி | kal-l-ūci n. <>id.+. A medicinal stone; ஒருவகை மருந்துக்கல். (W.) |
கல்லூடான் | kal-l-ūṭāṉ n. <>id.+. A sea-fish, silvery attaining more than 9 in. in length, Gerres oblongus; சிறிய கடல்மீன்வகை. |
கல்லூரி | kal-l-ūri n. <>கல்-+ஊர் Academy, college, institution where instruction is given in arts and sciences; கல்விபயிலும் இடம். கல்லுரி நற்கொட்டிலா (சிவக.995). |
கல்லூற்று | kal-l-uṟṟu n. <>கல்+. Spring in a rocky soil; கல்லில் ஊறும் நீறுற்று. Colloq. |
கல்லூன்று - தல் | kal-l-uṉṟu- n. <>id. +. To erect temporarily a stone at a funeral ceremony to represent the deceased; சாச்சடங்காகப் பாஷாணஸ்தாபனஞ் செய்தல. Colloq. |
கல்லெடுப்பு | kal-l-eṭuppu n. <>id.+. Funeral rite of removing the stone, as a sign of the final departure of the dead; பாஷாணோத்து வாசனம் என்ற பிரேதக்கிரியை. |
கல்லெரிப்பு | kal-l-erippu n. <>id. +. See கல்லெரிப்புமேகம். கல்லெரிப்பு முதலவிடர்ப் பிணியால் (திருக்காளத். பு. 17, 25). . |
கல்லெரிப்புமேகம் | kal-l-erippu-mēkam n. <>id. +. Incontinence of urine; நீர்ச்சுருக்கு நோய். (W.) |
கல்லெறி | kal-l-eṟi n. <>id.+. 1. Throwing of a stone; கல்லைவீசுகை. கண்டனமாகிய கல்லெறிக்கஞ்சி (சிவசம. 45). 2. See கல்லெறிதூரம். (W.) 3. Sling |
கல்லெறிதூரம் | kal-l-eṟi-tūram n. <>id.+. [M. kallēṟidūram.] Distance of a stone's throw from a strong arm; முழுவலிமையோடு கல்லை வீசியெறிய அதுவிழும் தூரவளவு. Colloq. |
கல்லெனல் | kal-l-eṉal . Onom. expr. signifying excitement; ஒசைக்குறிப்பு. கல்லேன் பேரூர் (சிலப்12, 12). |
கல்லேறு | kal-l-ēṟu n. <>கல்+எறி. M. Kallēṟu. 1. Throwing of a stone; கல்லெறிகை. காயாத மரமீது கல்லேறு செல்லுமோ (தாயு. சச்சிதா. 8). 2. Flaw in a pearl; |
கல்லை 1 | kallai n. 1. Plate made of leaves sewn together; தையலிலைக் கலம். சருகிலையிணைத்த கல்லை (பெரியபு. கண்ணப்ப. 118). 2. Knob in wooden sandals; |
கல்லை 2 | kallai n. <>T. kalla. Calumny, aspersion; அவதூறு. கல்லைப்பட்டுப் போனவன். (W.) |
கல்லைகுத்து - தல் | kallai-kuttu- v. intr. <>கல்லை1+. To sew leaves together into a plate to eat from; இலைக்கலந் தைத்தல். |
கல்லைநீராக்கி | kalli-nir-ākki n. A kind of ore; மாமிசபேதி. (W.) |
கல்லொட்டர் | kal-l-oṭṭar n. <>கல்+. [K.kallodda] A caste of people usually employed to build stone walls; கற்சுவர் எடுக்கும் ஓட்டசாதியார். (W.) |
கல்லொட்டி | kal-l-oṭṭi n. <>id.+ஒட்டு-. Snail; நத்தை. (W.) |
கல்லோலம் | kallōlam n. <>kallōla. Billow, wave, surge; அலை. பெருங்கல்லோலப் புணரியின் முழ்க (திருவாலவா.9, 5,). |
கல்வம் | kalvam n. <>khalla. See கலுவம். Colloq. . |
கல்வருக்கை | kal-varukkai n. <>கல்+. Anjely. See காட்டுப்பலா. (W.) . |
கல்வழி | kal-vaḻi n. <>id.+. A kind of computation which the aid of concrete objects as pebbles கல்லைவைத் தெண்ணும் ஒருவகைக் கணக்கு (கணக்கதி. பாயி.) |