Word |
English & Tamil Meaning |
---|---|
கற்கட்டு 2 | kaṟ-kaṭṭu n. <> id. + . Stone building; கல்லாலாகிய கட்டடம். கறகட்டாகிய மடமும் காணியும் (தண்டலை. 43). |
கற்கட்டுமோதிரம் | kaṟ-kaṭṭu- mōtiram n. <> id. +. Ring set with one or more precious stones; மணிபதித்த மோதிரம். |
கற்கடகசிங்கி | kaṟkaṭaka-ciṅki n. <> karkaṭa-šṟṅgī. Japanese wax-tree. See கர்க்கடக சிங்கி (சீவக.1277, உரை.) . |
கற்கடகம் | kaṟkaṭakam n.<> karkaṭaka. 1. See கர்க்கடகம். . 2. (Nāṭya.) Gesture with both hands in which the fingers are interlaced in teri-nilai, pose, resembling a crab; |
கற்கண்டு | kaṟ-kaṇṭu n. <> கல் + . Rockcandy; பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக் கட்டி. (பதார்த்த. 188.) |
கற்கண்டுப்பானகம் | kaṟ-kaṇṭu-p-pāṉakam n. <> கற்கண்டு + . A syrup of rock-candy and other ingredients; கற்கண்டு முதலாகிய பண்டங்களைக் கூட்டிசெய்த குடிநீர். |
கற்கந்து | kaṟ-kantu n. <> கல் + . Stone pillar; கற்றூண். கற்கந்தும் எய்ப்போத்தும் ... அனையார்(இறை. 2, உரை, 27). |
கற்கம் 1 | kaṟkam n. 1. Mahwa flower; இருப்பைப்பூ. (w.) 2. Lotus; |
கற்கம் 2 | kaṟkam n. 1. See கல்கம். (தைலவ. தைல. 135.) . 2. Residuum or sediment of decoctions, oil or ghee; 3. Medicinal drug; |
கற்கரி | kaṟ-kari n. <> கல் +. Anthracite, hard compact mineral coal; ஒருவகை நிலக்கரி. |
கற்கருசிலை | kaṟkarucilai n. A plant of the Cucurbita genus; ஒருவகைப் பூடு. (w.) |
கற்கலை | kaṟ-kalai n. <> கல் + . Cloth dyed in red ochre; காவிவஸ்திரம் வார்செஞ்சடையுங் கற்கலையும் (திருவானைக். (திருநீ.7) |
கற்கவி | kaṟ-kavi n. <> id. + கவி1- Stone vault put up on the portal or doorway; கதவு நிலையின் மேலே இடப்பட்டிருக்கும் பாவுகல். (நெடுநல். 86) உரை தமிழ்நா.256.) |
கற்கவுதாரி | kaṟ-kavutāri n. <>id. +. Common sand grouse, pterocles exustus; காட்டுக்கோழிவகை (M.M.761) |
கற்கனல் | kaṟ-kaṉal n. <>id. +. a mineral poison ஒருவகைப் பாஷாணம் (W.) |
கற்கா | kaṟ-kā n. <>கல் + கா3. See கற்கநாடு (நன்.272, மயிலை) . |
கற்காக்காச்சி | kaṟ-kākkācci n. <>id. + காக்காச்சி. A redcoloured sea fish, Holocentrum rubrum; ஒருவகைக் கடல்மீன். |
கற்காசா | kar-kācā n. <>id. + Prob. காசாம்பாரை. A sea-fish, greyish, attining 6 in. in length, Holacanthus xanthurus கடல்மீன்கடல்மீன்வகை |
கற்காண்டல் | kaṟ-kāṇṭal n. <>கல்+. (Puṟap.) Theme of selecting a stone to cut the form and inscribe the memoirs of a fallen hero போரிற்பட்ட வீரனது உருவம் வகுப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்துகொள்ளவதக் கூறும் புறத்துரை. (பு வெ.10, பொதுவியற்.8) |
கற்காணம் 1 | kāṟ-kāṇam n. prob. Stone oil-press கல்லாலமைந்த செக்கு., |
கற்காணம் 2 | kaṟ-kāṇam n. prob. கரு-மை+jaraṇa. Black cumin See கருஞ்சீரகம். (மலை) |
கற்காந்தம் | kaṟ-kāntam n. <>கல்+. A kind of load-stone ஒருவகைக் காந்தக்கல். |
கற்காநாடு | kaṟkā-nāṭu n. <>கற்கா+. Rocky portion of Coimbatore district on the eastern side of the Western Ghats, one of 12 koṭuntamiḻ-nāṭu, q.v. கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஓன்றாய்க் கோயம்புத்தூர்ஜில்லாவைச் சார்ந்து மேற்குத்தொடர்ச்சி மலையின் கீழ்ப்புறத்தில் கற்குன்றுகள் நிறைந்துள்ள நாடு. (தொல். சொல். 400, சேனா.) |
கற்காப்பு | kaṟ-kāppu n. <>கல்+. Stone wall erected to close the entrance to the inner sanctuary of Hindu temple, to keep it safe in times of foreign invasion கலாபகாலங்களில் கோயில் மூலஸ்தானத்தைக் காப்பதற்காக அதன்வாயிலைஅடைத்தெழப்பும் கற்சுவர்.(யதிர்ந்திரப்.10) |
கற்காமி | kaṟ-kāmi n. <>id.+kāma. See கன்மதம். (W.) . |
கற்காரம் 1 | kaṟ-kāram n. <>id.+kāra. Stone-work கல்வேலை. புலிமுகமான சோபானத்துக்கு வேண்டும் பொன்னிட்டுக் கற்காரந்செய்வித்தான் |
கற்காரம் 2 | kaṟ-kāram n. <>id.+kṣāra. A kind of caustic mineral; காரக்கல் |
கற்காரு | kaṟ-kāru n. கரு-மை+prob. agaru. See அகில் (சங். அக.) . |
கற்காவி | kaṟ-kāvi n. <>கல்+. Ochre; கவிக்கல். (தைலவ. தைல.135) |
கற்கி 1 | kaṟki n. cf scotch kirk. Temple; கோயில். (சது.கற்கிளர் கற்கிசெய்தோன் (சேதுபு. இராமநா.43) |
கற்கி 2 | kaṟki n. <>Kalki. 1. The future incarnation of Viṣṇu, when he is to assume the form of a horse, to restore righteousness, one of tacāvatāram, q.v. திருமாலின் தசாவதாரங்களுள் இனி நிகழம் அவதாரம். தாமோதரனாய்க் கற்கியுமானான்றன்னை (திவ். பெரியதி. 8, 8, 10). 2. Horse |