Word |
English & Tamil Meaning |
---|---|
களை 3 - த்தல் | Kaḷai- 11 v. intr. To be fatigued or exhausted; to be languid; to flag, faint, swoon; இளைப்பாறுதல். ஓடிக் களைத்தோ (இராமநா. பக். 20). |
களை 4 | Kaḷai n. <> களை3-. Weariness, exhaustion அயர்வு. வேட்கையாற் களையினோடு கதுமெனச் சென்று (கந்தபு ததீசியுத். 55). |
களை 5 | Kaḷai n. <> kalā. 1. A digit of the moon; சந்திரகலை. களைப்பான் மதிமுகக் காரிகையீர் (வெங்கைக்கோ. 61). 2. Beauty, splendour, glow, lustre; 3. (Mus) The element of time-measure which specifies the various sub-divisions of akṣarakālam, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; |
களைக்கட்டு - தல் | Kaḷai-k-kaṭṭu- v. intr. <> களை + . To sound effectively, as music with in an enclosure; இசைக்கருவிகளின் நாதம் அடக்கமான இடத்தில் நன்கு ஒலித்தல். Colloq. |
களைக்கொட்டு | Kaḷai-k-koṭṭu n. <> களை2 + கெர்த்து Weeding-hook, grass-hoe, small iron pick with broad blade and wooden handle; களைபறிக்குங் கருவி. |
களைக்கொத்து | Kaḷai-k-kottu n. <> id .+ . See களைக்கொட்டு. . |
களைக்கோல் | Kaḷai-k-kōl n. <> id. + . See களைக்கொட்டு. காரியன் றீந்த களைகோலும் (தமிழ்நா 45). . |
களைகட்டி | Kaḷai-kaṭṭi n. <> id. + கள்-. See களைகொட்டு. Loc. . |
களைகண் | Kaḷai-kaṇ n. <> களை1- + கண் Suff. support, as relieving distress; பற்றுக்கோடு. மற்றோர் களைக ணில்லேன் (தேவா, 645, 1) |
களைகள் - தல் [களைகட்டல்] | Kaḷai-kaḷ- v. intr. <> களை2 + . See களைபறி-. பைங்கூழ் களைகட்டதனோடு நேர் (குறள், 550). . |
களைச்சத்தகம் | Kaḷai-c-cattakam n. <> id. + . See களைக்கொட்டு. (j.) . |
களைஞன் | Kaḷaiaṉ n. <> களை1-. 1. One who weeds; களைபறிப்போன். களைஞர்தந்த ... நெய்தல் (பெரும்பாண். 213). 2. Villain, wretch; |
களைப்பு | kaḷaippu n. <> களை3-. Fatigue, exhaustion; சோர்வு. களைப்பாச்சோ வென்பார் (குற்றா. குற.27). |
களைப்புல் | kaḷai-p-pul n. <> களை2+. Grasslike weed; பயிருக்குட் களையாக முளைக்கும் புல். (யாழ். அக.) |
களைபறி - த்தல் | kaḷai-paṟi- v. intr . <> id. +. 1. To weed; களைபிடுங்குதல். 2. To remove a hindrace; |
களையவாரம் | kaḷaiyavāram n. <> T. kalavaramu. Confusion; குழப்பம். Loc. |
களையறு - த்தல் | kaḷai-y-aṟu- v. intr. <> களை2 + . See களைபறி-. கைங்கர்யத்திற் களையறுக்கிறது (அஷ்டாதச முமுட்சு.த்வய.63). . |
களையாற்று - தல் | kaḷai-y-āṟṟu- v. tr. <> களை4 + . To remove the effect of fatigue or weariness; இளைப்பாற்றுதல். |
களையேறு - தல் | kaḷai-y-ēṟu- v. intr. <> களை5 + . 1. To increase in lustre, as one's countenance; ஒளி மிகுதல். 2. To grow in lustre on account of the increased manifestation of Godhead in an idol; 3. To increase, as the phase of the moon; |
களைவாங்கு - தல் | kaḷai-vāṅku- v. intr. <> id. +. 1. To decrease in lustre, as one's countenance; அழகுகுறைதல். 2. To lose lustre on account of the decreased manifestation of Godhead in an idol; |
களைவாரி | kaḷai-vari n. <> களை2 + வாரு- See களைக்கொட்டு (w.) . |
களைவு | kaḷaivu n. <> களை1- Rejection; extirpation; weeding; stripping off; நீக்குகை பிறர்தம் மதமேற் கொண்டு களைவே (நன்.10). |
களைவெட்டி | kaḷai-veṭṭi n. <> களை2 + . Jumper, a tool that works with a jumping motion; களைவெட்டுங் கருவிவகை. (C.E.M.) |
கற்கசம் 1 | kaṟkacam n. <> karkaša. 1. Hardness, harshness, severity; கடினம். (பிங்.) 2. Close-fistedness, stinginess, miserliness; |
கற்கசம் 2 | kaṟkacam n. Hedge cotton. See வேலிப்பருத்தி. (தைலவ. தைல.112.) . |
கற்கசன் | kaṟkacaṉ n <> karkaša Hard hearted person; வன்னெஞ்சன் (பிங்.) |
கற்கட்டி | kaṟkaṭṭi n. Corr. of கட்கட்டி. Loc. . |
கற்கட்டியிடையர் | kaṟ-kaṭṭi-y-iṭaiyar n. <> கல் + கட்டு. + இடையர். Division of the Iṭaiyacaste, whose women wear glass-beads with tāli; பெண்பாலார் தாலியுடன் கருகுமணிகோத்துக் கட்டுவதை வழக்கமாகவுடைய இடைச்சாதி வகை. (E.T.) |
கற்கட்டு 1 - தல் | kaṟ-kaṭṭu- v. tr. <> id . +. 1. To wall, as a well with stone or brick; கிணறு முதலியவற்றைக் கருங்கல்லாலேனும் செங்கல்லாலேனும் கட்டுதல். 2. To set stones in the frame work of jewel; |