Word |
English & Tamil Meaning |
---|---|
கான்மரம் | kāṉ-maram, n. <>கால்1+. Banyan tree, as having branches which root themselves over great extent. See ஆல்1. (திவா.) |
கான்மா | kāṉ-mā, n. <>கான்3+. Wild boar; காட்டும்ப்பன்றி. (W.) |
கான்மாறு - தல் | kāṉ-māṟu-, v. intr. <>கால்5+. To pass way, disappear, as the rays of the sun; கழிந்துபோதல். சுடர் கான்மாறிய செவ்வி நோக்கி (சிறுபாண். 171). |
கான்மிகம் | kāṉmikam, n. <>kārmika. See கான்மியம். (சி. சி. 2, 39, சிவாக்.) . |
கான்மியம் | kāṉmiyam, n. <>kārmya. (šaiva.) One of the three eternal obstructive priniciples which creates bondage for the soul as a result of good and evil deeds; மும்மலத்துள் ஒன்றாய் அநாதியாயுள்ள கன்மமலம். (சி, சி. 2, 39, ஞானப்.) |
கான்மிரம் | kāṉmiram, n. <>Kāšmīra. See காசுமீரம். இப்போ தணிகான்மிரநாட்டில் (திருவிளை. கல்லானை. 7). . |
கான்முரி - j;y | kāṉ-muri-, v. intr. <>கால்5+ To be uttely ruined, as breaking the leg; அடியோடு கெடுதல். பேதையான் வீழ்வானேற் கான்முரியும் (நன்மணி. 74). |
கான்முளை | kāṉ-muḷai, n. <>கால்1+. Son, child, as offshoot of the family; மகன். பின்னர்க் கான்முளை மன்னுத லிலரே (ஞானா. 21, 12). |
கான்மோதிரம் | kāṉ-mōtiram, n. <>id. +. ring usually worn on the second toe; கால் விரலணிகளுள் ஒன்று. (சிலப் 6, 83, உரை.) |
கான்யாறு | kāṉ-yāṟu, n. <>கான்3+. River in a sylvan tract; முல்லைநிலத்துள்ள யாறு. விரவு மல ரணிந்த வேனிற் கான்யாற்று (ஐங்குறு. 367). |
கான்றல் | kāṉṟal, n. <>கால்-. 1. Vomiting; வாந்திசெய்கை. (திவா.) coughing and ejecting phlegm |
கான்றியம் | kāṉṟiyam n. Prob. heat உழ்ணம் |
கான்றை | kāṉṟai n. a kind of tree மரவகை. கான்றையுஞ் சுரையுங் கள்ளியு மாடந்ரு (மணி6, 81) |
கானக்கல் | kāṉakkal n. கானம்2 +. See { kA akakkal } கானகக்கல். (சங்.அக) |
கானக்குதிரை | kāṉakkutirai n. <>id. +. yak, bos {ஞூgrunniens } காட்டுமான்வகை. (பிங்); wild horse |
கானக்குறத்திமுலைப்பால் | kāṉakkuṟattimulaippāl n. <>id. +. honey தேன் |
கானக்கூபரம் | kāṉakkūparam n. a kind of emerald நாகப்பச்சை. (யாழ.அக) |
கானக்கைதை | kāṉakkaitai n. <>கானம்2, +. travancore lancewood, l.tr., {ஈsageraca@dalzelli } ஒருவகைப் பெருமரம் |
கானக்கோழி | kāṉakkōḻi n. <>id. +. grey jungle fowl, {ஞூgallus@soneratii } காட்டுக்கோழி கானக்கொழியு நீர்நிறக் காக்கையும் (சிலப் 10, 116) |
கானகக்கல் | kāṉaka-k-kal, n. <>கானகம்1+ கல். A kind of metallic ore; கரும்புள்ளிக்கல் ஷ. (W.) |
கானகக்கூத்து | kāṉaka-k-kūttu, n. <>id. +. A kind of dancing; கூத்துவகை. கானக்ககூத்துங் கழைக்கூத்தும் ஆடுபவராகச் சாதிவரையறையிலராதலின் (தொல். பொ. 91, உரை). |
கானகச்சங்கம் | kāṉaka-c-caṅkam, n. <>id. + prob. šankha. A kind of beetle. See நாகர வண்டு. (யாழ். அக.) |
கானகத்தட்டான் | kāṉaka-t-taṭṭāṉ, n. <>id. +. Tawny leech; செவ்வட்டைவகை. (யாழ் .அக.) |
கானகத்தும்பி | kāṉaka-t-tumpi, n.<> id. +. A kind of black bettle; கருவண்டுவகை. (W.) |
கானகதூமம் | kāṉakatūmam, n. A mineral poison; கற்பாஷாணம். (W.) |
கானகநாடன் | kāṉaka-nāṭaṉ, n. <>கானகம்1+. 1. Chief of a sylvan tract; 1. முல்லைநிலத்தலைவன். (திவா.) 2. Chief of a mountain tract; |
கானகப்பச்சை | kāṉaka-p-paccai, n. <>id. +. A kind of emerald; ஒருவகைப் பச்சைமணி. (W.) |
கானகம் 1 | kāṉ-akam, n. n. <>கான்3+அகம். 1. Forest, wood; காடு கானகத்தே நடக்குந் திருவடி (திருவாச. 40, 8). 2. Black cumin. See |
கானகம் 2 | kāṉakam, n. <>கால்1+ nakha. Toe-nail; காலின் நகம். (W.) |
கானகுப்பிசம் | kāṉa-kuppicam, n. <>Kānyakubja. Kanouj, one of paca-kauṭam, q.v.; பஞ்சகௌடத்துள் ஒன்றாகிய கானியகுப்ஜ நாடு. (சங். அக.) |
கானங்கோழி | kāṉaṅ-kōḻi, n. <>கானம்2+. 1. See கானக்கோழி. (இறை. 1, 19.) . 2. Bald coot, Fulica atra; |
கானசரம் | kāṉa-caram, n. <>id. + šara. Kaus, a large and coarse grass. See நாணல் (பிங்.) |
கானடா | kāṉaṭā, n. A musical mode; ஓர் இராகம். |