English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Anodise
v. மின்பிரிமூலம் உலோகத்துக்குப் பூச்சுக்காப்பிடு.
Anodyne
n. நோயற்றும் மருந்து, மனத்துக்கு ஆறுதல் தருவது, (பெ.) துன்பந் தணிக்கிற.
Anoesis
n. (உள.) புலனுணர்ச்சி மட்டுமுள்ள உணர்வு நிலைப்பண்புடைய.
Anoetic
a. புலனுணர்வு மட்டுமுள்ள உணர்வு நிலப்பண்புடைய.
Anoint
v. எண்ணெய் பூசு, நறுநெய்யாட்டு.
Anointment
n. திரு நெய்யாட்டு, எண்ணெய்ச் சார்த்து, அபிடேகம், புனிதப்படுத்தும் செயல்.
Anomalistic
a. முறை விலகிய, நிரல் திறம்பிய, ஒழுங்கு முரணிய, நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய, (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற, நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
Anomalistical
a. முறை விலகிய, அமைதி நிலைக்கு மாறான ஒழுங்கற்ற.
Anomalous
a. ஒழுங்கு மீறிய, பொதுநிலை திறம்பிய,,ஒழுங்கற்ற, தாறுமாறான, ஒருசில வண்ணங்களைத் தௌதவாகக் காணமாட்டாத.
Anomalure
n. செதிள் வாலுடைய ஆப்பிரிக்க அணில்.
Anomaly
n. ஒழுங்கற்ற தன்மை, நெறி திறம்புதல், முறைகேடு, (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு, கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Anomocarpous
a. வழக்கத்துக்கு மாறாகக் காய்கனியுடைய, வழக்கத்துக்கு மாறாக விளைந்த.
Anomophyllous
a. ஒழுங்கு திறம்பிய இலை அமைப்புடைய.
Anon
adv. ஒரு கணத்துக்குள்ளாகவே, உடனே, உடனடியாக, விரைவில், இன்னொரு தடவை, என்ன அது.
Anona
n. சீத்தாப்பழ இனம்.
Anonaceous
a. சீத்தாப்பழ இனப்பிரிவு சார்ந்த.
Anonymity
n. பெயர் தெரியப்படாநிலை, பெயர் மறைவுநிலை.
Anonymous
a. பெயர் அறியப்படாத, எழுதியவர் பெயரில்லாத.
Anopheles
n. கொசுவகை, முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம்.
Anoplura
n.pl. மூட்டைப்பூச்சியினம்.