English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Antakali
n. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான பொருள்.
Antalkaline
a. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான.
Antaphrodisiac
n. சிற்றின்பம் தணிக்கும் மருந்து, (பெ.) சிற்றின்ப வேட்கை தணிக்கிற.
Antarctic
n. தென்துருவமடுத்த பெரும் பனிப்பரப்பு, (பெ.) தென்துருவமடுத்த, தென்துருவப்பகுதி சார்ந்த.
Ant-bear
n. எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம், தென் ஆப்பிரிக்கக் கரடியினம்.
Ant-cow
n. 'தேனா', உடலிலுள்ள தேன் கசிவுக்காக எறும்பினத்தால் வளர்க்கப்படும் பூச்சியினம்.
Ante
-1 n. பந்தயச் சீட்டாட்டக்காரரால் சீட்டுப்பார்ப்பதற்கு முன்னே கட்டப்படும் பூச்சியினம்.
Ante
-2 adv. முன்னால், மேலே.
Ante meridiem,(a.m.)
முற்பகலில், நண்பகலுக்கு முன்.
Anteater
n. எறும்பைத் தின்னும் விலங்குவகை.
Ante-bellum
a. போருக்கு முந்திய.
Antecedence
n. முன்னிகழ்வு, முந்திய நிலை, முதன்மைநிலை, முற்பகுதி, முன்மொழி, பீடிகை, (வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம், கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம்.
Antecedent
n. முன்னோடி, முன்னிகழ்ச்சி, முற்சான்று,(இலக்.) பொருள் முதற்சொல், மறுபெயர், மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல், மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம், (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம், (கண.) தகவெண்ணின் முகவெண், வீதஎண்ணிணையின் முன்னிணை.
Antecedents
n.pl. முற்பண்புகள், முன்னடத்தை, முன்வரலாறு.
Antechamber
n. இடைக்கூடம், கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
Antechapel
n. திருக்கோட்டத்தின் வாயிற்கூடம், கோட்டத்திருறன்.
Antedate
-1 n. மெய்யான காலத்துக்கு முற்பட்டதாக்க குறிக்கப்படும் காலம் முற்பாடாகக் குறிக்கப்பட்டகாலம்,
Antedate
-2 v. முந்துநாள் குறி, மெய்யான தேதிக்கு முற்படத்தேதியீடு, முன்னாட்களுக்குரியதாக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே செயல்முறைப்படுத்து, முற்படு, முன்தேதியுடையதாயிரு, விரைவுபடுத்து, முன்கூட்டிச்செல்.
Antediluvial
a. உலக்பபெரு வௌளத்துக்கு முற்பட்ட, முன்னுழிக்குரிய, மிகப்பழமைப்பட்ட, நாகரிகமற்ற.
Antediluvian
n. விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வௌளத்துக்கு முற்பட வாழ்ந்தவர், ஊழி மூதாளர், நீள்வாழ்வுகண்டவர், முதுபேராளர், காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர், (பெ.) உலகப்பெருவௌளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய, பழம்பேரூழி சார்ந்த, தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள, காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட, உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.