English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Anorak
n. வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை.
Anorexia, anorexy
உணவவாவின்மை, பசிச்சுவையின்மை.
Anorthic
a. மூன்று முரண்பாடான ஊடச்சுக்களையுடைய.
Anosmia
n. முகர்வுணர்வு இழப்பு.
Another
pron வேறொருவர், இன்னும் ஒருவர், இன்னும் ஒன்று, வேறொன்னு, ஒப்புடைய இன்னும் ஒருவர், ஒத்த இன்னொன்று (பெ.) வேறொரு, இன்னும் ஒரு, ஒப்புடைய ஒரு, இனத்தில் இன்னொரு.
Anoxia
n. இழைமங்களுக்கு உயிர்வளியின் வருவளம் போதாமை, உயிரகக் குறைபாடு.
Anoxic
a. உயிரகக் குறைபாடுடைய.
Anserine
a. வாத்தின் இயல்புடைய, மடமை மிக்க, முட்டாள்தனமான.
Answer
n. மறுமொழி, விடை, பதில், மறுப்பு,வினா எதிர்விளக்கம், புதிர் விடுவிப்பு, சிக்கலின் தீர்வு, ஒப்புக்கொள்ளுகை, எதிர்மாறு, மாற்று, எதிர்ச்செயல், எதிரொலி, (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு,(வினை.) மறுமொழிபப்ர், விடைகூறு, பதில் எழுது, எதிர்மாற்றம் அனுப்பு, இணங்கநட, இசை, இசைவாயிரு, அளவொத்திரு, ஒத்திசை, புதிர்விடுவி, பிரச்சனை, தீர்வு செய், தறுவாய்க்குப் போதியதாயிரு, நிறைவேற்று, சரியீடுசெய், தக்க தண்டனை பெறு, பொறுப்பேற்று நட, பொறுப்பேற்றுக்கொள், உத்தரவாதமாயிரு, விளைவு ஏற்றுக்கொள், தேறு, உறுப்படு, எதிர்ச்செயலாற்று, பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு, குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Answerable
a. மறுமொழி கூறத்தக்க, பொறுப்புடைய பொறுப்பேற்பதற்குரிய தக்க, நேர் எதிரான, ஒத்திசைந்த, அளவொத்த.
Anta
n. சுவர்ப்பட்டிகைக் கல், வாயிலருகே அல்லது மூலைஓரமாகச் சுவரில் குறுக்காகப் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பட்டிகைக் கல்,
Antacid
n. வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து, (பெ.) புளிப்பு மாற்றான, காடித்தன்மைக்கு எதிரீடான.
Antagonism
n. எதிர்ப்பு, பகைமை, முரண்பாடு.
Antagonist
n. எதிரி, பகைவன், (உட.) எதிர்த்தசை,(பெ.) எதிர்ச்செயலாற்றுகிற.
Antagonistic
a. எதிரான, எதிர்ப்பான, மாறான, பகையான.
Antagonize
v. எதிரியாக்கு, எதிர்ப்பைத் தூண்டு, எதிர்ச்செயலாற்று, எதிர்ததுப்போராடு.