English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Apostatize
v. சமயக் கொள்கைகளை எதிர்ப்பவராகிவிடு.
Apostil, apostille
பக்கக்குறிப்பு, ஓரக்குறிப்பு.
Apostle
n. திருத்தூதர், இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர், ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர், சீர்திருத்தத்தலைவா, செயல்துணையாளர்.
Apostleship
n. திருத்தூதர் நிலை.
Apostolate
n. திருத்தூதர் நிலை, கொள்கை பரப்புவதில் முதன்மை, இயக்கத்தலைமை.
Apostolic, apostolical
a. திருத்தூதர்களுக்குரிய, திருத்தூதர் இயல்புள்ள, போப்பாண்டவர் சார்ந்த, போப்பாண்டவர் நிலை சார்ந்த.
Apostolicism, apostolicity
n. திருத்தூதர் நிலைக்குரிய இயல்பு.
Apostrophe
-1 n. முன்னிலையணி, சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல், எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம், முனைத்த ஔதக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
Apostrophe
-2 n. எழுத்தெச்சக்குறி, உடைமை வேற்றுமைக்குறி.
Apostrophic
-1 a. முன்னிலையணிக்குரிய.
Apostrophic
-2 a. எழுத்தெச்சக்குறி சார்ந்த.
Apostrophize
v. இறந்தாரை அல்லது உடன் இராதவரை முன்னிலைப்படுத்திப்பேசு.
Apotheosis
n. தெய்வமாக்கல், புகழ்ந்து போற்றுதல், கடவுள்மங்கலம், பிரதிட்டை, அடியவர் குழாத்தில் சேர்த்தல், கொள்ளை வழிபாடு.
Apotheosize
v. தெய்வமாக்கு.
Apotropaic
a. தீங்குவிலக்குகிற தீமை விலக்கத்தக்க.
Apozem
n. வடிசாறு, கியாழம்.
Appal
v. திகைச்சுவை அச்சுறுத்து.
Appalling
a. திகைக்க வைக்கிற.
Apparatus
n. ஆய்கருவி, செய்கருவி, கருவிகலம், இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு, இயற்கை உறுப்பமைவு, ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்,
Apparel
n. கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை, உடை, (வினை,) அணிவி ஒப்பனை செய்.