English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Apocalypse
n. கடவுள் அருள் வௌதப்பாட, தூயதிருயோவானுக்கு வௌதக்காட்டுப்பட்டட செய்தி, புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு, பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Apocalyptic, apocalyptical
a. கடவுள் அருள் வௌதப்பாட்டுக்குரிய, கடவுள் அருள் வௌதபாட்டுத் தன்மை வாய்ந்த.
Apocarpous
a. (தாவ.) சூல் இணையாத, சூலகம் வேறாக உடைய.
Apocope
n. கடைக்குறை, சொல்லின் இறுதி எழுத்தை நீக்கிவிடல்.
Apocrypha
n.pl. மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
Apocryphal
a. ஏற்கப்படாத, மேற்கோளாக ஏற்கப்படமுடியாத, ஐயத்துக்கிடமான, போலியான, கட்டுக்கதையான.
Apod
n. கால்கள் அல்லது வயிற்றடிச்செதிள்கள் இல்லாத உயிரினம்.
Apodosis
n. நிபந்தனை வாக்கியத்தின் முடிந்த வாசகம், தொடர் வாக்கியத்தின் நிலைவாசகம்.
Apodyterium
n. குளிப்புக்கூட ஆடை மாற்றும் அறை.
Apogamous
a. பால் தொடர்பற்ற இன மரபுடைய.
Apogamy
n. பால் கலவா மாற்றுத் தலைமுறையுடைமை.
Apogeal, apogean
நிலவுலகச் சேண்சார்ந்த, ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த.
Apogee
n. (வான்.) புவிச்சேணிலை, ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை, பூமி உச்சநிலை, முகடு.
Apogeotropic
a. நில ஈர்ப்பின் திசைக் கெதிராகத் திரும்புகிற.
Apograph
n. மெய்ப்படி, முற்றிலும் சரியான பகர்ப்பு.
Apolaustic
n. இன்பநாட்டக்கோட்பாடு,(பெ.) இன்பநுகர்ச்சி நாட்டமுடைய, தற்கட்டுப்பாடின்றி இன்பத்தில் மிதக்கிற.
Apollinaris
n. பிரஷ்யா நாட்டில் ஆர் பள்ளத்தாக்கில் ஊறும் மருந்து நீர்.
Apolline
n. அப்போலோ என்ற கிரேக்க தெய்வத்துக்குரிய.
Apollo
n. கிரேக்க ஞாயிற்றுக்கடவுள், கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
Apollonian, apollonic
அப்போலோவின் இயல்புகளமைந்த.