English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Archaeornithes
n. ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
Archaic
a. பழைய, தொன்மையான, இப்போது வழக்கில் இல்லாத.
Archaism
n. மொழியிலும் கலையிலும் பழமையையும் வழக்கற்றவைகளையும் வைத்துக் கொள்ளுதலும் பின்பற்றுத, அத்தகைய மனப்பாங்கு, தொல்சொல்.
Archaist
n. தொல்வழக்குகளைக் கையாள்பவர்.
Archaistic
a. தொல்வழக்குகளைப் பின்பற்றுபவர்போல் நாட்டிக்கொள்கிற, பண்டை வழக்குகுளைக் கடைப்பிடிக்கிற.
Archaize
v. பண்டைய வழக்கைப் பின்பற்று, தொல்வழக்கைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக்கொள், தொல்வழக்குடையதாகச் செய்.
Archangel
n. தலைமைத் தேவதூதன், பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை, வறட்டு முட்செடிவகை, ஒருவகைப்புறா.
Archbishop
n. தலைமைக்குரு, அதிமேற்றிராணியார், தலைமைக் கண்காணிப்பாளர்.
Archbishorpric
n. தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம், அதிமேற்றிராசனம்.
Arch-builder
n. புகழ்வாய்ந்த கட்டிடச் சிற்பி.
Archdeacon
n. மேற்றிராணியர், கண்காணியருக்கு அடுத்த பெரிய அதிகாரி.
Archdiocese
v. அதிமேற்றிராசனம்.
Archduchess
n. பெரிய கோமகனின் மனைவி, ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
Archduchy
n. கோமகனின் அல்லது கோமகனின் ஆட்சிப்பரப்பு.
Archduke
n. பெரிய கோமகன், ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன்.
Arched
a. கவான் வடிவன்ன, வில்வளைவு கவிந்துள்ள.
Arch-enemy
n. பெரும்பகைவன், முதல்எதிரி, சாத்தான்.
Archenteron
n. கருமுளையில் முதலில் தோன்றும் குடல்.
Archer
n. வில்லாளர், தனுசு இராசி.
Archeress
n. விற்றொழில் கைவந்த பெண்.