English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Adulterous
a. ஒழுக்கங்கெட்ட, முறைகேடான.
Adultery
n. கூடா ஒழுக்கம், பிறர்மனை நயத்தல்.
Adumbral
a. நிழல் ஆர்ந்த, நிழல் கவிந்த.
Adumbrate
v. சிறுசாயை காட்டு, உருவரை தோற்றுவி, அரைகுறையாக உருவமை, இனங்குறி, முன்அறிவி, நிழல்கவி, நிழல்படர்வி.
Adumbration
n. நிழலடிப்பு.
Adumbrative
a. நிழல் உருக்காட்டுகிற, முன் அறிகுறியான.
Adurol
n. நிழற்படத் தௌதவுதரு வேதிப்பொருள்.
Advance
n. முன்னேற்றம், வளர்ச்சி, அபிவிருத்தி, மேம்பாடு, உயர்வு, ஏற்றம், முன்பணம், அச்சாரம், கடன், நாடி நணுகுதல், நட்பு நாட்டம், (பெ,) முன்னணியிலுள்ள, முன்னீடான, (வினை) முனை, முந்து, முனனேறு, முன்னேற்றமடை, உயர்வுபெறு, மதிப்படை, முன்னிடு, உயர்த்து, ஊக்கு, முன்கொணர், முன்னதாக வழங்கு, முன்பணம்கொடு, கடன்உதவு.
Advanced
a. முற்போக்கான, நாகரிகத்தில் மேம்பட்ட, உயர்தரமான.
Advancement
n. உயர்வு, மேம்பாடு, வளர்ச்சி, அபிவிருத்தி, ஊக்குவித்தல்,
Advantage
n. நன்மை, மேன்மை, அனுகூலம், இலாபம், பெறுதி, முன்வாய்ப்பு,(வினை) நலஞ்செய், பயன்கொடு.
Advantageous
a. மேன்மையான, அனுகூலமான, பயன்தருகிற.
Advent
n. வருகை, வந்தடைகை.
Adventist
n. இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர், இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
Adventitious
a. புறமிருந்து வருகிற, புறவளர்ச்சியான, இடைநிகழ்வான, கூடுதலான, (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த.
Adventive
n. வௌதயாள், வௌதப்பொருள், (பெ.) புறமிருந்து வருகிற, (தாவ.) நன்கு நிலைபெறாத.
Adventure
n. துணிவான செயல், வீரச்செயல், அபாயம், இடர், எதர்பாரா நிகழச்சி, துணிச்சல் வாணிபம், செயல் வேட்டம், முயற்சி ஆர்வம், (வினை) துணிவுச் செயலில் இறங்கு, துணிந்துசெய், செய்துபார், இடர்மேற்கொண்டு செய்.
Adventuresome
a. துணிச்சல் வீரமுடைய, முயற்சியுள்ள, இடர்மேற்கொள்ளச் சித்தமாய் இருக்கிற.
Adventuress
n. துணிச்சலான பெண், கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள்.