English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
After-taste
n. துழாவுசுவை, எஞ்சிய சுவை, பின்சுவை.
Afterthought
n. பின்யோசனை, துணிந்தபின் எண்ணுகை பின்விளக்கம், பின்யுக்தி.
Afterward, afterwards
adv. பிற்பாடு, பின்னர்.
Agae
adv. அங்காந்து, வாய்பிளந்த நிலையில்.
Again
adv. மறுபடியும், மீண்டும், திரும்பவும், மறுமொழியாக, எதிராக, மேலும், அன்றியும், மாறாக.
Against
prep; எதிராக, மாறாக, எதிரிடையாக, எதிர்நோக்கி, முன்னிட்டு, மீதுபட்டு, மீதாக, மேல்மோதி, பதிலாக.
Agami
n. நாரைபோன்ற தென்அமெரிக்கப்பறவைவகை.
Agamic
a. (உயி) பாலகலப்பின்றி அத, ஆண்பெண் கருத்தொடர்பின்றி உண்டான.
Agamogenesis
n. விலங்கு புல்லினங்களின் பால்கலப்பற்ற இனப்பெருக்கம்.
Agamogenetic
a. பால்கலப்பின்றி இனம் பெருக்குகிற.
Agamous
a. பால்காட்டும் உறுப்பில்லாத, (தாவ.) கண்ணுக்குப்புலப்படும் பூக்கள் இல்லாத.
Aganippe
n. கலைத்தேவியருக்கு உகந்த றலிகன் மலைக்குவட்டில் உள்ள ஊற்று, கவிதை எழுச்சி.
Agape
n. முற்காலக் கிறித்தவர்க்ள கொண்டாடிய அன்பு விருந்து.
Agar, agar-agar
கடற்கோரை வகை, கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.
Agarbathies
அகில் மணக்குச்சிகள்
Agaric
n. காளான் வகை, (பெ.) காளான் வகைக்குரிய.
Agastric
a. உணவுக்குழல் அற்ற.