English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Agnosticism
n. உலோகாயத வாதம், கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்னுங் கொள்கை.
Agnus Castus
n. கற்புமரம், கற்பைக் காப்பதாக முன்னாட்களில் கருதப்பட்ட மஜ்ம்.
Ago
adv. முற்பட்டு, முன்னாள், முந்தி.
Agog
adv. ஆவலுடன், ஆர்வத்துடன், எதிர்நோக்கி.
Agonise
v. சித்திரவதைசெய், வேதனைப்படுத்து, வாதனைப்படு,வெந்துயரில் இனை, மல்லாடு, அரங்கத்திற் போராடு, கடுமுயற்சிசெய்.
Agonist
n. பொதுப்பந்தய விளையாட்டுக்களில் போட்டியிடுபவர்.
Agonistic, agonistical
a. வீரப்போட்டிகளுக்குரிய, மல்லாட்டம் சார்ந்த.
Agonistics
n. வீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை.
Agony
n. சாத்துயர், மரணவேதனை, இயேசுநாதரின் திருவாதனை, கடுந்துயர், வாதனை, மனவேதனை, ஆனந்தக்களிப்பு, கடும்போராட்டம், உயிர்ப்போராட்டம்.
Agora
n. பேரவை, மன்றம், மன்றம் கூடுமிடம், அம்பலம், சந்தைக்களம்.
Agoraphobia
n. திடல் மருட்சி, பொதுஇடங்களைத் தாண்டுதலில் அச்சம்.
Agouti,agouty
சீமைப்பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரினம்.
Agraphia
n. எழுத்தாளர் விசிப்பு, முளைநோய் அல்லது படுகாயம் காரணமாக எழுதும் ஆற்றலை இழத்தல்.
Agrarian
n. நில உடைமைய மறுபங்கீடு செய்ய வேண்டுமென்ற கோட்பாடுடையவர், (பெ.) நில உடைமை சார்ந்த சாகுபடி நிலம் பற்றிய.
Agrarianism
n. நிலநியாயப் பங்கீட்டுக் கோட்பாடு, நில உடைமைமுறை மாறவேண்டுமென்று விரும்பும் அரசியல் இயக்கம்.
Agree
v. ஒருமனப்படு, பிடித்தமாயிரு, உடன்படு, ஒப்புக்கொள், இணங்கு, ஒப்புதல் அளி, இசைவு தெரிவி, ஒரு வழிநில், பொருந்து, ஒத்துப்போ, இணங்கிப்போ, தீர்மானி, துணி, (இலக்,) ஒத்திசை, இயைபாய் இரு.
Agreeable
a. மனத்துக்குகந்த, பிடித்தமான, இணங்குகிற,ஒத்துக்கொள்கிற, ஒத்த, இசைந்த.
Agreeably
adv. இணக்கமாக, ஒத்து, இசைவாக, இணங்க.
Agreement
n. ஒப்பந்தம், உடன்படிக்கை, கருத்தொற்றுமை, இசைவு, இணக்கம், பொருத்தம், ஒப்புமை, (இலக்.) ஒத்திசைவு, இயைபு.