English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Amygdalic
a. வாதுமை சார்ந்த.
Amygdalin
n. வாதுமை முதலிய கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெல்லச்சத்து.
Amygdaloid
n. 'வாதுமைப்பாறை', வாதுமை வடிவுடைய உட்புழையிடங்களில் கனிப்பொருட்கள் செறிந்துள்ள அனற்பாறை வகை, (பெ.) வாதுமை வடிவுள்ள.
Amygdule
n. எரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம்.
Amyl
n. (வேதி.) வெறிய வடிப்பில் சிறிதளவில் கிடைக்கும் நச்சுச் சத்து வகை.
Amylaceous
a. மாச்சத்துக்குரிய, மாச்சத்துப்போன்ற, மாச்சத்துக்கொண்ட.
Amylopsin
n. மாச்சத்தைக் சர்க்கரையாக்கும் கணைய நீர்.
Ana
n. வாய்மொழித் தொகுதி, ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
Anabaptism
n. மறு ஞானஸ்நானக் கோட்பாடு, வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Anabaptist
n. மறு ஞானஸ்நானக் கோட்பாட்டாளர், குழந்தைப் பருவத்தில் சமய தீக்கை ஆற்றி இருந்தாலும் வயதுவந்தபின் மறு தீக்கை ஆற்றியே ஆகவேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
Anabaptistic, anabaptistical
a. சமய மறு தீக்கைக் கோட்பாடு சார்ந்த.
Anabas
n. செதில்களால் மரமேறும் மீன்.
Anabasis
n. மேலே போதல், பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு, பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு.
Anabatic
a. மேலெழுந்து செல்கிற.
Anabatise
v. சமய மறு இணைவு வினையாற்று.
Anableps
a. நீரிலும் காற்றுவௌதயிலும் பார்க்கத்தக்க கண்ணமைப்பும் உயிர்ப்புப்பையும் உடைய மீனினம்.
Anabolic
a. உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த, உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய, உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய.
Anabolism
n. (உயி.) உயிர்ச்சத்தை அடிப்படைடயாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல், உயிர்ப்பொருள் கூட்டமைப்பு.
Anabranch
n. ஆற்றிலிருந்து பிரிந்து ஆற்றிலேயே திரும்ப வந்து விழும் ஓடை.