English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Amphibological
a. சொற்பிறழ்வான.
Amphibology
n. சிலேடை, இரட்டுற மொழிதல், தௌதவற்ற உரை.
Amphibrach
n. (இலக்.) குறில் நெடில் குறில் என இணைந்த மூவசைச்சீர்.
Amphictyonic
a. பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைப் பிரதிநிதிகளுக்குரிய.
Amphictyons
n.pl. பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைக்குச் செல்லும் பிரதிநிதிகள்.
Amphigam
n. (தாவ.) தௌதவான பாலுறுப்புக்களற்ற செடி.
Amphigory, amphigourI
n. போலி ஏடு, பிதற்றுரை ஏடு.
Amphimixis
n. (உயி.) பாலணுக்கலுப்பு,. பால் சார்ந்த இனப்பெருக்கம், தாய்தந்தையருடைய பண்புக்கூறுகளின் கலப்பு.
Amphioxus
n. முதுகெலும்பின் கருமூலத்தடங்களையுடைய முதுகெலும்பில்லாத மீனினவகை.
Amphipod
n. நீரருகே வாழும் நண்டு போன்ற உயிரினம்.
Amphiprostyle
a. இருமனைகளிலும் நுழைமாடமுள்ள.
Amphisbaen
a. கதைகளில் வ இருதலைப்பாம்பு, (வில.) பாம்பு போன்ற அமெரிக்கப் பல்லியினம்.
Amphitheatral, amphitheatrical
a. சுற்றுமாளிகையரங்கத்தைச் சார்ந்த, வட்டரங்கம் போன்ற.
Amphitheatre
n. சுற்றுமாளிகையரங்கம், திறந்தவௌதயான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம், பொது விளையாட்டரங்கு, பொதுக்காட்சிக்கூடம், வட்டரங்கம், அரங்கின் பகுதி, வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம், படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி, போட்டி நடத்துமிடம்.
Amphitryon
n. விருந்தினர்க்கு இன்முகங்காட்டி மகிழ்விப்பவர்.
Ampholyte
n. இருவழி மின்பிரி, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
Amphora
n. இரண்டு கைப்பிடிகளுள்ள ரோம அல்லது கிரேக்க கலம்.
Amphoric
a. (மரு.) குப்பிக்குட் பேசுவதனால் உண்டாகும் ஒலியைப்போன்ற.
Amphoteric
a. இருவழயிலும் அமைந்த, இருவழியின் செயலடைய, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
Ample
a. இடமகன்ற, அகலமான, தாராளமான, மிகுதியான, பெரிய, மொத்தையான, போதிய, நெடு நீளமான.