English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ancientry
n. மிகு பழமை, பழம்பாளி.
Ancients,n.pl
பண்டையர், பண்டைக் காலத்தவர், கிரேக்கர், ரோமர்.
Ancillary
a. குற்றேவல் செய்கிற, துணைமையான.
Ancon
n. (உட.) முழுங்கை, கைமுட்டு, குறுங்கால்ஆட்டு வகை, (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு,
Ancona
n. நடுநிலக்கடலகம் சார்ந்த புள்ளிகளையுடைய கோழியினம்.
And
conj. காரணத்தினால், நிமித்தனமமாக.
And sons
மற்றும் மகார், மகாரும் மக்களும், மக்கள், மகன்கள்
Andalusian
n. ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர், கோழி இனத்தின் வகை, (பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய, கோழி இனத்தின் வகை சார்ந்த.
Andante
n. (இசை.) இடைநடைச் செலவு, மட்டமான மென்னடைப் பாட்டு, (வினையடை) இடைநடைச் செலவில், மட்டமான மென்னடையில்.
Andantino
n. (இசை.) மட்டமான மெல்லிசை நடை, (வினையடை) மிமான மெல்லிசை நடையுடன்.
Anderson shelter
n. விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு.
Andiron
n. விறகுத்தாங்கி, அடுப்பணைகோல், அடுப்பில் விறகுகளை ஏந்தி வைப்பதற்குரிய இருப்புச்சட்டம்
Androcephalous
a. மனிதத் தலையடைய.
Androecium
n. (தாவ.) பூவிழைத்தொகுதி.
Androgen
n. ஆண்பால் இயக்குநீர்மம், ஆண்பால்மரபுக்கூறுகளை வளர்த்துப் பேணவல்ல பொருள்.
Androgenic
a. ஆண்பால் இயக்குநீர்மம் சார்ந்த.
Androgynous
a. இருபால் கூறுகளுடைய, பால் வேறுபாடற்ற, (தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய.
Androgyny
n. இருபால் கூறுகளும் ஒருங்கே உடைமை(தாவ.) ஒரு மலரிலேயே அல்லது ஒரு செடியிலேயே பூவிழையும் கருவகமும் உடன்கொண்டு இயலும் செடியினம்.